பரிசுத்த இரத்தம்
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலாகிய யெகோவாவுடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக, யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல், உபா 12:11-15உபா 12:20-22உபா 12:26-27உபா 12:5-7லேவி 17:12-13லேவி 17:15லேவி 17:8 முகாமிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாகக் கருதப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான். உபா 12:5-21எசேக் 20:40ஆதி 17:14ஏசா 66:3யோவா 10:7யோவா 10:9யோவா 14:6யாத் 12:15 ஆகையால் இஸ்ரவேல் மக்கள் வெளியிலே பலியிடுகிற தங்களுடைய பலிகளை, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள். 1 இராஜா 14:232 நாளாக 28:42இராஜா 16:42இராஜா 17:10உபா 12:2யாத் 24:5எசேக் 20:28எசேக் 22:9 அங்கே ஆசாரியன், இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன். எண் 18:17லேவி 3:2யாத் 29:13யாத் 29:18லேவி 3:11லேவி 3:13லேவி 3:16லேவி 3:5 தாங்கள் முறைகேடான முறையில் பின்பற்றுகிற பேய்களுக்குத் 1 தங்கள் பலிகளை இனிச் செலுத்தாமல் இருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக. 1 கொரி 10:20யாத் 34:152 நாளாக 11:15உபா 32:17சங் 106:37உபா 31:16யாத் 22:20யாத் 32:8 மேலும் நீ அவர்களை நோக்கி: “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளைச் செலுத்தி, லேவி 1:2-31 இராஜா 18:30-381 சாமு 10:81 சாமு 16:21 சாமு 7:92 சாமு 24:25நியாயாதி 6:26லேவி 17:10 அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான் என்று சொல். லேவி 17:4 “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் எந்தவொரு இரத்தத்தைச் சாப்பிட்டால், இரத்தத்தைச் சாப்பிட்ட அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அவனை அறுப்புண்டுபோகச் செய்வேன். லேவி 17:11உபா 12:16உபா 12:23லேவி 3:171 சாமு 14:33ஆதி 9:4எரே 44:11லேவி 26:17 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. எபி 9:221 யோவா 1:7ரோம 3:25வெளி 1:5மாற் 14:24கொலோ 1:14ஆதி 9:4மத் 26:28 ஆகவே உங்களில் ஒருவனும் இரத்தம் சாப்பிடவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் சாப்பிடவேண்டாம்” என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன். யாத் 12:49 “இஸ்ரவேல் மக்களிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சாப்பிடத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பறவையையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தச்செய்து, மண்ணினால் அதை மூடவேண்டும். உபா 12:16உபா 12:24எசேக் 24:7லேவி 7:26உபா 15:231 சாமு 14:32-34யோபு 16:18 சகல மாம்சத்திற்கும் இரத்தம் உயிராக இருக்கிறது; இரத்தம் உயிருக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தம் தானே; அதைச் சாப்பிடுகிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன். ஆதி 9:4உபா 12:23லேவி 17:11-12 தானாக இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது சாப்பிட்டவன் எவனும் அவன் இஸ்ரவேலனானாலும் அந்நியனானாலும், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாக இருப்பான். உபா 14:21யாத் 22:31லேவி 22:8லேவி 11:25எசேக் 4:14எசேக் 44:31லேவி 15:5வெளி 7:14 அவன் தன் உடைகளைத் துவைக்காமலும், குளிக்காமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல்” என்றார். லேவி 5:11 பேது 2:24எபி 9:28ஏசா 53:11யோவா 13:8லேவி 19:8லேவி 20:17லேவி 20:19-20