1 சாமுவேல் 1

1 Samuel 1
அத்தியாயம் 1

எல்க்கானாவும் அவனது குடும்பமும்

எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா 1 என்று பெயர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் மகனான எலிகூவின் மகனான எரோகாமின் மகன். 1 நாளாக 6:341 நாளாக 6:25-271 சாமு 1:19நியாயாதி 17:1ரூத் 1:21 சாமு 9:5நியாயாதி 19:11 சாமு 17:12 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பெயர் அன்னாள் 2, மற்றவள் பெயர் பெனின்னாள் 3; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. உபா 21:15-17ஆதி 16:1-2ஆதி 25:21ஆதி 29:23-29ஆதி 29:31ஆதி 4:23நியாயாதி 13:2நியாயாதி 8:30 அந்த மனிதன் சீலோவிலே சேனைகளின் யெகோவாவை தொழுதுகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே யெகோவாவின் ஆசாரியரான ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இருந்தார்கள். லூக் 2:41உபா 12:5-7யோசு 18:1யாத் 23:14யாத் 34:231 சாமு 1:211 சாமு 1:9உபா 16:16 அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே அவன் தன்னுடைய மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்குபோட்டுக் கொடுப்பான். உபா 12:17-18உபா 16:11உபா 12:5-7லேவி 3:4லேவி 7:15 அன்னாளை நேசித்ததினால், அவளுக்கு இரண்டு பங்கு கொடுப்பான் 4; யெகோவாவோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார். ஆதி 30:2ஆதி 29:30-31ஆதி 16:1ஆதி 20:18ஆதி 45:22ஆதி 43:34உபா 21:15 யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள். யோபு 6:14யோபு 24:21லேவி 18:18 அவள் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போகும்போது, அவன் ஒவ்வொரு வருடமும் அப்படியே செய்வான்; இவள் அன்னாளை மனவேதனைப்படுத்துவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். 1 சாமு 2:19 அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான். ரூத் 4:15ஏசா 54:6யோபு 6:141 தெச 5:14யோவா 20:13யோவா 20:15சங் 43:42இராஜா 8:12

அன்னாளின் ஜெபம்

சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்தாள்; ஆசாரியனான ஏலி யெகோவாவுடைய ஆலயத்தின் வாசற்கதவருகில் ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்திருந்தான். 1 சாமு 3:3சங் 27:4சங் 5:72 சாமு 7:21 சாமு 3:15சங் 29:9 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: யோபு 7:11யோபு 10:1லூக் 22:44சங் 91:15எபி 5:7ஏசா 54:6நியாயாதி 21:2ஏசா 38:15 சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள். நியாயாதி 13:5எண் 6:5ஆதி 29:32பிரச 5:41 சாமு 1:19ஆதி 28:20நியாயாதி 11:30சங் 25:18 அவள் யெகோவாவுக்கு முன்பாக அதிகநேரம் விண்ணப்பம்செய்கிறபோது, ஏலி அவளுடைய வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். 1 தெச 5:17யாக் 5:16கொலோ 4:2எபே 6:18லூக் 11:8-10லூக் 18:1 அன்னாள் தன்னுடைய இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மட்டும் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கவில்லை; ஆகவே, அவள் குடிவெறியில் இருக்கிறாள் என்று ஏலி நினைத்து, ரோம 8:26அப் 2:13ஆதி 24:42-45சங் 25:1சகரி 9:151 கொரி 13:7நெகே 2:4 அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் குடிவெறியில் இருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். எபே 4:25எபே 4:31யோபு 11:14யோபு 22:23யோபு 8:2யோசு 22:12-20மத் 7:1-3நீதி 4:24 அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் யெகோவாவுக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன். சங் 62:8புலம் 2:19சங் 42:4சங் 142:2-3சங் 143:6யோபு 30:16நீதி 15:1நீதி 25:15 உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள். 1 சாமு 2:12யோபு 10:1-2யோபு 6:2-3மத் 12:34-351 சாமு 10:271 சாமு 25:25உபா 13:13 அதற்கு ஏலி சமாதானத்துடன் போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். மாற் 5:34நியாயாதி 18:6சங் 20:3-51 சாமு 25:352இராஜா 5:19லூக் 7:501 நாளாக 4:10லூக் 8:48 அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கட்டும் என்றாள்; பின்பு அந்த பெண் புறப்பட்டுப்போய் சாப்பிட்டாள்; அதன்பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை. ரூத் 2:13ரோம 15:13பிரச 9:7ஆதி 33:15ஆதி 33:8யோவா 16:24பிலி 4:6-7ஆதி 32:5

சாமுவேலின் பிறப்பும் பொருத்தனையும்

அவர்கள் அதிகாலையில் எழுந்து, யெகோவாவைத் தொழுதுகொண்டு, ராமாவிலிருக்கிற தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளுடன் இணைந்தான்; யெகோவா அவளை நினைத்தார். ஆதி 21:11 சாமு 1:11ஆதி 30:22ஆதி 4:11 சாமு 9:26ஆதி 8:1லூக் 23:42மாற் 1:35 சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்று, யெகோவாவிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் 5 என்று பெயரிட்டாள். ஆதி 41:51-52யாத் 2:10மத் 1:21யாத் 2:22ஆதி 16:11ஆதி 29:32-35ஆதி 30:6-21ஆதி 5:29 எல்க்கானா என்பவன் யெகோவாவுக்கு வருடந்தோறும் செலுத்தும் பலியையும் தன்னுடைய பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன்னுடைய வீட்டார் அனைவரோடும் போனான். 1 சாமு 1:3உபா 12:11யோசு 24:15ஆதி 18:19சங் 101:2 அன்னாள் அவர்களுடன் போகவில்லை; அவள்: பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின்பு, அவன் யெகோவாவுக்கு முன்பாக காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் 6 என்று தன்னுடைய கணவனிடம் சொன்னாள். 1 சாமு 1:111 சாமு 1:28லூக் 2:221 சாமு 2:111 சாமு 2:181 சாமு 3:1உபா 16:16லேவி 25:23

யெகோவாவுடைய ஆலயத்தில் சாமுவேல்

அப்பொழுது அவளுடைய கணவனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன்னுடைய விருப்பத்தின்படி செய்து, அவனை பால் மறக்கச்செய்யும்வரை இரு; யெகோவா தம்முடைய வார்த்தையைமட்டும் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்தப் பெண் தன்னுடைய பிள்ளையைப் பால் மறக்கச்செய்யும்வரைக்கும் பாலூட்டி வளர்த்தாள். 2 சாமு 7:251 சாமு 1:17ஆதி 21:7-8ஏசா 44:26லூக் 11:27மத் 24:19எண் 30:7-11சங் 22:9 அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும் 7, ஒரு மரக்கால் 8 மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான். எண் 15:9-101 சாமு 4:3-4யோசு 18:1உபா 12:5-6உபா 12:11உபா 16:16 அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள். லூக் 18:15-16லூக் 2:22 அப்பொழுது அவள்: என்னுடைய ஆண்டவனே, இங்கே உம்முடைய அருகிலே நின்று யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்த பெண் நான்தான் என்று என்னுடைய ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். 2இராஜா 2:22இராஜா 2:42இராஜா 2:62இராஜா 4:301 சாமு 17:551 சாமு 20:32 சாமு 11:112 சாமு 14:19 இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்செய்தேன்; நான் யெகோவாவிடத்தில் கேட்ட என்னுடைய விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். 1 யோவா 5:15மத் 7:7சங் 118:5சங் 66:19-201 சாமு 1:11-13சங் 6:9சங் 116:1-5 எனவே, அவன் யெகோவாவெக்கென்று கேட்கப்பட்டதால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் அவனைக் யெகோவாவுக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே யெகோவாவைத் தொழுதுகொண்டான். ஆதி 24:26ஆதி 24:521 சாமு 1:112 தீமோ 3:15ஆதி 24:481 சாமு 1:22