யோபுவின் வார்த்தைகள்
யோபு மறுமொழியாக: யோபு 4:1
“என் பிரச்சனைகளும், யோபு 23:2யோபு 31:6யோபு 4:5
துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும்.
அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; நீதி 27:3யோபு 23:2யோபு 37:19-20மத் 11:28சங் 40:5சங் 77:4
ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.
சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; சங் 38:2யோபு 30:15சங் 88:15-16நீதி 18:14யோபு 16:12-14மாற் 15:34சங் 143:7யோபு 9:17
அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது;
தேவனால் உண்டாகும் பயங்கரங்கள்
எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது.
புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? எரே 14:6யோவே 1:18-20சங் 104:14சங் 42:1
தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? யோபு 34:3கொலோ 4:6யோபு 12:11யோபு 6:30லேவி 2:13லூக் 14:34எபி 6:4-5யோபு 16:2
முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; 1 இராஜா 17:121 இராஜா 22:27தானி 10:3எசேக் 12:18-19எசேக் 4:14எசேக் 4:16யோபு 3:24சங் 102:9
அவைகள் வெறுப்பான உணவுபோல இருக்கிறது.
ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, சங் 119:81யோபு 17:14-16யோபு 6:11-13
நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து,
தேவன் என்னை நொறுக்க விரும்பி, 1 இராஜா 19:4யோனா 4:3ஏசா 48:10-13யோபு 7:15-16யோனா 4:8யோபு 14:13யோபு 19:21யோபு 3:20-22
தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்.
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; யோபு 23:12ஏசா 57:15லேவி 19:2சங் 40:9-10சங் 71:17-181 சாமு 2:22 பேது 2:4-5அப் 20:20
அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால்
உணர்வில்லாமல் இருப்பேன்;
பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை,
அவர் என்னைக் கைவிடமாட்டார்.
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? சங் 103:14-16யோபு 17:1சங் 102:23சங் 39:5யோபு 10:20யோபு 13:25யோபு 13:28யோபு 17:14-16
என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது?
என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ? யோபு 40:18யோபு 41:24
எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? 2 கொரி 1:12யோபு 26:2யோபு 12:2-3யோபு 13:2யோபு 19:28கலா 6:4
உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே.
உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; கலா 6:2நீதி 17:171 கொரி 12:26ரோம 12:152 கொரி 11:29எபி 13:3லூக் 23:40யோபு 15:4
அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான்.
என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள். சங் 38:11எரே 15:18சங் 41:9யோவா 13:18யோவா 16:32சங் 55:12-14எரே 30:14எரே 9:4-5
அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும்,
அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, 1 இராஜா 17:1யோபு 24:19
சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன.
அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்;
அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும்.
தேமாவின் பயணக்காரர் தேடி, ஆதி 25:15ஏசா 21:14எரே 25:231 இராஜா 10:1எசேக் 27:22-23ஆதி 10:7ஆதி 25:3சங் 72:10
சேபாவின் பயணக்கூட்டங்கள்
அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; எரே 14:3-4எரே 17:13ரோம 5:5ரோம 9:33
அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள்.
அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; சங் 38:112 தீமோ 4:16எரே 17:5-6ஏசா 2:22எரே 51:9யோபு 13:4யோபு 2:11-13யோபு 6:15
என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், 1 சாமு 12:3அப் 20:33யோபு 42:11
உங்கள் செல்வத்திலிருந்து எனக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்றும்;
அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள், எரே 15:21யோபு 5:20சங் 107:2சங் 49:15சங் 49:7-8லேவி 25:48நெகே 5:8
கொடியவரின் கைக்கு என்னை தப்புவித்து காப்பாற்றிவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; யாக் 3:2நீதி 9:9யோபு 10:2யோபு 34:32சங் 19:12சங் 39:1-2யோபு 33:1யோபு 5:27
நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? பிரச 12:10-11யோபு 13:5யோபு 16:3-5யோபு 21:34யோபு 24:25யோபு 32:3யோபு 4:4நீதி 12:18
உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, யோபு 8:2எபே 4:14மத் 12:37ஓசி 12:1யோபு 10:1யோபு 2:10யோபு 3:3-26யோபு 34:3-9
நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, 2 பேது 2:3யாக் 1:27யோபு 22:9யோபு 24:3யோபு 24:9யோவே 3:3நாகூ 3:10சங் 7:15
உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; யோபு 13:4யோபு 27:4யோபு 33:3யோபு 11:3யோபு 36:4
அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்.
நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்; யோபு 17:10யோபு 23:10யோபு 27:4-6யோபு 34:5யோபு 42:6மல்கி 3:18
அநீதி காணப்படாதிருக்கும்;
திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும்.
என் நாவிலே அநீதி உண்டோ? யோபு 12:11யோபு 34:3யோபு 6:6எபி 5:14யோபு 33:8-12யோபு 42:3-6
என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?