யோபு 13

Job 13
அத்தியாயம் 13

இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு, யோபு 5:9-161 யோவா 1:3யோபு 12:9-25யோபு 15:17-18யோபு 4:12யோபு 42:3-6யோபு 5:27யோபு 8:8-10

என் காது கேட்டு அறிந்திருக்கிறது.

நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; யோபு 12:32 கொரி 11:16-182 கொரி 12:11யோபு 42:71 கொரி 8:1-22 கொரி 11:4-5யோபு 34:35யோபு 35:16

நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.

சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; ஏசா 41:21ஏசா 1:18-20யோபு 13:22யோபு 31:35யோபு 9:3எரே 12:1-2யோபு 11:5யோபு 13:15

தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.

நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; சங் 119:69எரே 23:32எரே 6:14எரே 8:22யோபு 16:2மாற் 5:26எசேக் 34:4ஓசி 5:13

நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள்.

நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; நீதி 17:28யாக் 1:19பிரச 5:3யோபு 13:13ஆமோ 5:13யோபு 11:3யோபு 16:3யோபு 18:2

அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.

நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, யோபு 34:2நியாயாதி 9:7யோபு 21:2-3யோபு 33:1-3நீதி 8:6-7

என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.

நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, யோபு 36:4யோபு 27:42 கொரி 4:2யோவா 16:2யோபு 11:2-4யோபு 17:5யோபு 32:21-22யோபு 4:7

அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ?

அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? யாத் 23:2-3நீதி 24:23யோபு 32:21யோபு 34:19லேவி 19:15மல்கி 2:9

தேவனுக்காக வழக்காடுவீர்களோ?

அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? கலா 6:7-8எரே 17:10சங் 44:21ஏசா 28:22யோபு 12:16யோபு 17:2யோபு 34:36சங் 139:23

மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ?

நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், யாக் 2:9சங் 50:21-22சங் 82:2யோபு 42:7-8

அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.

அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? யோபு 31:23சங் 119:120யாத் 15:16ஏசா 8:13எரே 10:10எரே 5:22யோபு 13:21மத் 10:28

அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?

உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; 2 கொரி 5:1யாத் 17:14ஆதி 18:27ஆதி 2:7ஏசா 26:14யோபு 18:17யோபு 4:19நீதி 10:7

உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.

நீங்கள் மவுனமாயிருங்கள், யோபு 7:11யோபு 10:1யோபு 13:5யோபு 21:3யோபு 6:9-10யோபு 7:15-16

நான் பேசுகிறேன்,

எனக்கு வருகிறது வரட்டும்.

நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, நியாயாதி 12:3சங் 119:1091 சாமு 19:51 சாமு 28:21பிரச 4:5யோபு 18:4ஏசா 49:26ஏசா 9:20

என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்?

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், சங் 23:4யோபு 19:25-28யோபு 23:10ரோம 8:38-391 யோவா 3:20யோபு 27:5யோபு 23:4-7நீதி 14:32

அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன்.

அவரே என் பாதுகாப்பு; ஏசா 12:1-2ஏசா 33:14சங் 118:21அப் 13:47யாத் 15:2எரே 3:23யோபு 27:8-10யோபு 36:13

மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான்.

என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், யோபு 13:6யோபு 21:2யோபு 33:1

உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள்.

இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; யோபு 23:4யோபு 9:2-32 கொரி 1:12ஏசா 43:26யோபு 16:21யோபு 40:7-8யோபு 9:20ரோம 8:33-34

என் நீதி விளங்கும் என்று அறிவேன்.

என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? ஏசா 50:7-8எரே 20:9யோபு 10:8யோபு 13:13யோபு 19:5யோபு 33:32யோபு 33:5-7யோபு 7:11

நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே.

இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; ஆதி 3:8-10யோபு 9:34-35சங் 139:12வெளி 6:15-16

அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.

உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; யோபு 33:7யோபு 9:34சங் 39:10யோபு 10:20யோபு 13:11யோபு 22:15-17சங் 119:120

உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக.

நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; யோபு 14:15யோபு 38:3யோபு 40:4-5யோபு 42:3-6யோபு 9:16யோபு 9:32

அல்லது நான் பேசுவேன்;

நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.

என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? யோபு 36:8-9சங் 139:23சங் 44:20-21யோபு 22:5

என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.

நீர் உமது முகத்தை மறைத்து, யோபு 19:11புலம் 2:5சங் 13:1உபா 32:20ஏசா 8:17யோபு 33:10சங் 44:24சங் 88:14

என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்?

காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? யோபு 21:18லேவி 26:361 சாமு 24:14ஏசா 17:13யோபு 14:3மத் 12:20

காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?

மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; சங் 25:7யோவா 5:14எரே 31:19யோவா 5:5யோபு 20:11யோபு 3:20நீதி 5:11-13சங் 88:3-18

என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர்.

என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, யோபு 33:112 நாளாக 16:10-12அப் 16:24யோபு 10:6யோபு 14:16யோபு 16:9யோபு 2:7நீதி 7:22

என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்;

என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர்.

இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், சங் 39:11யோபு 4:19ஓசி 5:12யோபு 30:17-19யோபு 30:29-30எண் 12:12

பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.