துதிப்பாடல்
அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; காப்பாற்றுதலையே அதற்கு மதிலும் பாதுகாப்புமாக ஏற்படுத்துவார். ஏசா 60:18ஏசா 62:11சகரி 2:5எபே 5:19-202 சாமு 22:1-51ஏசா 25:9ஏசா 27:1-2எரே 33:11 சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள தேசம் உள்ளே நுழைவதற்காக வாசல்களைத் திறவுங்கள். வெளி 5:91 பேது 2:9ஏசா 60:11சங் 118:20ஏசா 62:10ஏசா 62:2அப் 2:47யாத் 19:6 உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். பிலி 4:7யோவா 16:33யோவா 14:27எரே 17:7-8சங் 9:10ரோம 5:1சங் 85:7-8ரோம 4:18-21 யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நிலையான கன்மலையாயிருக்கிறார். ஏசா 12:2சங் 62:8பிலி 4:13சங் 55:22சங் 18:2சங் 62:11நீதி 3:5-6சங் 46:1 அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைவரை தாழ்த்தி அது மண்ணாகும்வரை இடியச்செய்வார். எரே 51:37யோபு 40:11-13வெளி 18:2ஏசா 13:11எரே 51:25-26எரே 51:64ஏசா 14:13ஏசா 2:12 கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும். லூக் 10:19ரோம 16:20வெளி 2:26யாக் 2:5யோசு 10:241 கொரி 1:26தானி 7:27ஏசா 25:10 நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர். எபே 2:10ஏசா 42:161 யோவா 3:101 யோவா 3:72 கொரி 1:12யோபு 27:5-6நீதி 20:7சங் 11:7 யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது பெயரும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது. யாக் 5:7-11சங் 37:3-7ஏசா 33:22 தெச 3:5யாத் 3:15சங் 65:6அப் 1:4ரோம 8:25 என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூமியிலுள்ள மக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். மத் 6:33சங் 119:62சங் 63:1உன்னத 3:1-4சங் 63:6-7லூக் 6:12மாற் 1:35சங் 58:11 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளமாட்டான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து யெகோவாவுடைய மகத்துவத்தைக் கவனிக்காமல்போகிறான். ஓசி 11:7யோவா 5:37-38ரோம 2:4-5உபா 32:15பிரச 3:16யாத் 8:15யாத் 8:31-32யாத் 9:34 யெகோவாவே, உமது கை ஓங்கியிருக்கிறது; அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது மக்களுக்காக நீர் வைத்திருக்கும் வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய எதிரிகளை எரிக்கும். எபி 10:27ஏசா 5:24மீகா 5:91 பேது 3:161 சாமு 5:6-111 சாமு 6:92 தெச 1:8அப் 28:27 யெகோவாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் செயல்களையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே. எபே 2:10சங் 57:2சங் 29:11எசேக் 20:14உபா 30:6எபி 13:20எரே 33:6ஏசா 57:10 எங்கள் தேவனாகிய யெகோவாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம். ஏசா 2:8ஏசா 63:72 நாளாக 12:8ஆமோ 6:10எபி 13:15ஏசா 10:11ஏசா 12:4ஏசா 51:22 அவர்கள் இறந்தவர்கள், உயிரடையமாட்டார்கள்; இறந்த இராட்சதர் திரும்ப எழுந்திருக்கமாட்டார்கள்; நீர் அவர்களை விசாரித்து அழித்து, அவர்கள் பெயரையும் அழியச்செய்தீர். நீதி 10:7வெளி 18:2-3ஆப 2:18-20ஏசா 14:19-22ஏசா 51:12-13ஏசா 8:19சங் 106:28உபா 4:28 இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; யெகோவாவே, இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் அதிக தூரத்தில் தள்ளிவைத்தீர். ஏசா 9:3உபா 10:22எசேக் 36:24எசேக் 5:12ஆதி 12:2ஆதி 13:16ஏசா 33:17ஏசா 44:23 யெகோவாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள் மேலிருக்கும்போது உள்ளத்தில் வேண்டுதல் செய்தார்கள். ஓசி 5:15சங் 50:151 சாமு 1:152 நாளாக 33:12-132 நாளாக 6:37-38உபா 4:29-30ஓசி 7:14ஏசா 37:3 யெகோவாவே, பிரசவநேரம் நெருங்கியிருக்கும்போது வேதனைப்பட்டு, தன் வேதனையில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம். ஏசா 13:8ஏசா 21:3யோவா 16:211 தெச 5:3எரே 4:31எரே 30:6எரே 6:24சங் 48:6 நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு பாதுகாப்பையும் செய்யமுடியாதிருக்கிறோம்; பூமியில் உள்ள மக்கள் விழுகிறதுமில்லை. ஓசி 13:13சங் 17:142இராஜா 19:3ஏசா 37:3ஏசா 59:4ஏசா 33:111 யோவா 5:191 சாமு 11:13 இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும். தானி 12:2எசேக் 37:1-14மத் 27:52எபே 5:14ஓசி 13:14சங் 71:20வெளி 20:12-13ஓசி 6:2 என் மக்களே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே நுழைந்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, கோபம் தணியும்வரை கொஞ்சநேரம் ஒளித்துக்கொள். சங் 30:5சங் 27:5ஏசா 54:7-8மத் 6:6சங் 91:4நீதி 18:10சங் 17:82 கொரி 4:17 இதோ, பூமியிலுள்ள மக்களின் அக்கிரமத்தின்காரணமாக அவர்களை விசாரிக்க யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும். ஏசா 13:11யூதா 1:14-15வெளி 6:9-11ஏசா 18:4யோபு 16:18மீகா 1:3-8எண் 35:32-33வெளி 16:6