யோபு 19

Job 19
அத்தியாயம் 19

யோபுவின் வார்த்தைகள்

யோபு மறுமொழியாக:

“நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, 2 பேது 2:7-8யாக் 3:6-8நியாயாதி 16:16யோபு 18:2யோபு 27:2யோபு 8:2நீதி 12:18நீதி 18:21

வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?

இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்; ஆதி 31:7தானி 1:20யோபு 15:11-12யோபு 15:4-6யோபு 18:4-21யோபு 19:17நெகே 4:12சங் 69:8

நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.

நான் தவறாக நடந்தது உண்மையானாலும், 2 கொரி 5:10எசேக் 18:4நீதி 9:122 சாமு 24:17கலா 6:5யோபு 11:3-6

என் தவறு என்னுடன்தான் இருக்கிறது.

நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, சங் 35:26சங் 38:16சங் 55:121 சாமு 1:6ஏசா 4:1யோவா 9:2யோவா 9:34லூக் 1:25

எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால்,

தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். யோபு 18:8-10யோபு 16:11-14யோபு 27:2யோபு 7:20எசேக் 12:13எசேக் 32:3ஓசி 7:12புலம் 1:12-13

இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், ஆப 1:2-3புலம் 3:8யோபு 21:27யோபு 23:3-7யோபு 30:20யோபு 31:35-36யோபு 34:5யோபு 40:8

கேட்பார் ஒருவரும் இல்லை;

கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.

நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, யோபு 3:23புலம் 3:7புலம் 3:9நீதி 4:19சங் 88:8ஓசி 2:6ஏசா 50:10எரே 13:16

என் வழிகளை இருளாக்கிவிட்டார்.

என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, சங் 89:44யோபு 29:7-14யோபு 12:17யோபு 30:1புலம் 5:16சங் 89:39ஓசி 9:11ஏசா 61:6

என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.

அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், யோபு 24:20சங் 37:35-362 கொரி 4:8-9யோபு 12:14யோபு 1:13-19யோபு 17:11யோபு 17:15யோபு 2:7

நான் அற்றுப்போகிறேன்;

என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.

அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; யோபு 13:24யோபு 16:9யோபு 33:10உபா 32:22புலம் 2:5சங் 89:46சங் 90:7

என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.

அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து, யோபு 30:12யோபு 16:13யோபு 16:11ஏசா 10:5-6ஏசா 51:23

எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி,

என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள்.

என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; சங் 88:8சங் 69:8சங் 88:18சங் 31:11சங் 69:202 தீமோ 4:16யோபு 16:7யோபு 6:21-23

எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.

என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள். சங் 38:112 சாமு 16:23எரே 20:10யோவா 13:18மத் 10:21மீகா 7:5-6நீதி 18:24சங் 55:12-14

என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.

என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும், யோபு 31:31-32சங் 123:3

என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்;

அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன்.

நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்; யோபு 1:15-17யோபு 1:19

என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.

என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; யோபு 2:9-10யோபு 17:1

என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன்.

சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்; 2இராஜா 2:23யோபு 30:1யோபு 30:12ஏசா 3:5

நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.

என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்; சங் 41:9சங் 109:4-5சங் 55:12-14யோபு 6:14-15லூக் 22:48சங் 38:11சங் 55:20

நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.

என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. சங் 102:5புலம் 4:8யோபு 33:19-22யோபு 2:4-6யோபு 30:30யோபு 7:5புலம் 3:4புலம் 5:10

என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், யோபு 1:11சங் 38:21 கொரி 12:26எபி 13:3யோபு 2:10யோபு 2:5யோபு 6:14யோபு 6:4

எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.

தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்? சங் 69:26ஏசா 51:23யோபு 10:16யோபு 13:25யோபு 16:11யோபு 2:5யோபு 31:31மீகா 3:3

என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன?

ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; ஏசா 30:8ஏசா 8:1யோபு 31:35

அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு,

அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், எரே 17:1உபா 27:2-3உபா 27:8யாத் 28:11-12யாத் 28:21யாத் 32:16

ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், எபே 1:7ஏசா 54:5சங் 78:35நீதி 23:11சங் 19:14யோவா 5:22-29ஏசா 59:20-21எரே 50:34

அவர் கடைசி நாளில் பூமியின்மேல் 1 நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, மத் 5:81 யோவா 3:2சங் 17:151 கொரி 13:12வெளி 1:7சங் 16:111 கொரி 15:53பிலி 3:21

நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன்.

அவரை நானே பார்ப்பேன்; சங் 73:26ஏசா 26:19எண் 24:17

வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்;

இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது.

காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது, யோபு 19:221 இராஜா 14:13சங் 69:26

நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.

பட்டயத்திற்குப் பயப்படுங்கள்; பிரச 11:9பிரச 12:14யோபு 13:7-11யோபு 15:22யோபு 22:4மத் 7:1-2சங் 1:5சங் 58:10-11

நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று,

கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான்.