துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், சங் 26:4-5நீதி 4:14-15நீதி 13:20சங் 119:1-2எரே 15:17மத் 7:13-14லூக் 11:28சங் 1:6
பாவிகளுடைய வழியில் நிற்காமலும்,
பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, யோசு 1:8சங் 119:92சங் 119:11ரோம 7:22சங் 119:97-99சங் 119:15-16எரே 15:16சங் 119:35
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, எரே 17:8எசேக் 47:12சங் 92:14யோவா 15:6எசேக் 19:10ஆதி 39:23யோசு 1:7-8எசேக் 17:8
தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து,
இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான்.
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், யோபு 21:18மத் 3:12சங் 35:5ஏசா 17:13ஓசி 13:3ஏசா 29:5
காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், சங் 5:5மத் 25:46மல்கி 3:18மத் 25:41லூக் 21:36மத் 25:32மத் 13:49யூதா 1:15
பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; 2 தீமோ 2:19யோவா 10:14நீதி 15:9நாகூ 1:7சங் 37:18-24யோவா 10:27நீதி 14:12சங் 146:9
துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.