யோபு 40

Job 40
அத்தியாயம் 40

பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக: யோபு 38:1யோபு 40:6

“சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்? 1 கொரி 2:16ஏசா 40:14ரோம 11:34-36யோபு 33:13ஏசா 45:9-11ஏசா 50:8மத் 20:11ரோம 9:19-23

தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார்.

அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக:

இதோ, நான் எளியவன்; நீதி 30:32யோபு 29:9யோபு 21:5யோபு 42:6எஸ்றா 9:6ஆதி 18:27நியாயாதி 18:191 தீமோ 1:15

நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்;

என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.

நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். யோபு 33:14சங் 62:11யோபு 9:15யோபு 9:32இராஜா 6:10எரே 31:18-19யோபு 34:31-32ரோம 3:19

அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார். யோபு 38:12 பேது 3:10-12எபி 12:18-20சங் 50:3-4

இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்; யோபு 38:3யோபு 42:4யோபு 23:3-4யோபு 13:22

நான் உன்னைக் கேட்பேன்;

நீ எனக்கு பதில் சொல்.

நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? ரோம 3:4ஏசா 28:18யோபு 32:2ஏசா 14:27யோபு 10:3யோபு 34:5-6சங் 51:4கலா 3:15

நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?

தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ? யோபு 37:4-5சங் 89:131 கொரி 10:22யாத் 15:6ஏசா 45:9யோபு 23:6யோபு 33:12-13யோபு 9:4

அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ?

இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, சங் 93:1சங் 149:4ஏசா 59:171 நாளாக 29:111 கொரி 15:542 பேது 1:16-17யாத் 28:2ஏசா 4:2

மகிமையையும் கனத்தையும் அணிந்துகொண்டு,

நீ உன் கோபத்தின் கடுமையை வீசி, தானி 4:37ஏசா 2:11-12ஏசா 2:17நாகூ 1:61 பேது 5:5-6அப் 12:22-23தானி 5:20-23உபா 32:22

அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு,

பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, ஏசா 63:3மல்கி 4:31 சாமு 2:7அப் 1:25பிரச 11:3ஏசா 10:6ஏசா 13:11யோபு 36:20

அவனைப் பணியவைத்து,

துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்திலே மிதித்துவிடு.

நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து, ஏசா 2:10எஸ்த 7:8யோபு 14:13யோபு 36:13சங் 49:14யோவா 11:44

அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு.

அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி எபே 2:4-9ஏசா 40:29சங் 44:3சங் 44:6ரோம 5:6

நான் உன்னைப் புகழுவேன்.

இப்போதும் பிகெமோத்தை 1 நீ கவனித்துப்பார்; ஆதி 1:24-26யோபு 40:20சங் 104:14யோபு 39:8

உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்;

அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.

இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும்,

அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.

அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; யோபு 41:23

அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.

அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், ஏசா 48:4யோபு 7:12

அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.

அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு, யோபு 41:33ஏசா 27:1யோபு 26:13சங் 104:24சங் 7:12

அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.

காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். சங் 104:14சங் 104:26யோபு 40:15சங் 147:8-9

அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், ஏசா 19:6-7ஏசா 35:7

சேற்றிலும் படுத்துக்கொள்ளும்.

தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும். எசேக் 17:5ஏசா 15:7லேவி 23:40

இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; ஆதி 13:10ஏசா 28:16ஏசா 37:25யோசு 3:15சங் 55:8

யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.

அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? யோபு 41:1-2

மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?