என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; சங் 103:22சங் 145:3சங் 96:6தானி 9:4ஏசா 59:17சங் 103:1-2சங் 93:1எரே 32:17-19
என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்;
மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். ஏசா 40:22தானி 7:9ஏசா 45:121 யோவா 1:51 தீமோ 6:16எபி 1:10-12மத் 17:2சகரி 12:1
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, ஆமோ 9:62 சாமு 22:11ஏசா 19:1சங் 18:10-11நாகூ 1:3சங் 139:9மத் 26:64வெளி 1:7
மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.
தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், எபி 1:72இராஜா 2:112இராஜா 6:17எபி 1:14சங் 148:8எசேக் 1:13அப் 23:8
தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார். யோபு 26:7சங் 24:2சங் 33:9சங் 96:10வெளி 20:112 பேது 3:10பிரச 1:4சங் 136:6
அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; ஆதி 7:192 பேது 3:5ஆதி 1:2-10
மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது.
அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, சங் 18:15ஆதி 8:1மாற் 4:39நீதி 8:28சங் 106:9சங் 114:3-7சங் 77:18
உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது.
அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, ஆதி 8:5சங் 33:7
நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி யோபு 38:10-11ஆதி 9:11-15ஏசா 54:9எரே 5:22யோபு 26:10சங் 33:7
கடக்காமல் இருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; ஏசா 41:18சங் 107:35ஏசா 35:7உபா 8:7
அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; சங் 145:16யோபு 39:5-8சங் 104:13
அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, சங் 50:11சங் 148:10மத் 6:26மத் 8:20சங் 104:16-17சங் 147:9சங் 84:3
கிளைகள் மேலிருந்து பாடும்.
தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; சங் 147:8எரே 10:13எரே 14:22உபா 11:11யோபு 38:25-28யோபு 38:37சங் 65:9-13அப் 14:17
உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது.
பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், சங் 136:25சங் 147:8-9யோபு 28:5சங் 145:15-161 கொரி 3:7ஆதி 9:3ஆதி 1:11-12ஆதி 3:18
மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், சங் 23:5பிரச 10:19பிரச 9:7நியாயாதி 9:13எபே 5:18எபி 1:9சங் 92:101 யோவா 2:20
அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும்,
மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார்.
யெகோவாவுடைய மரங்களும், எண் 24:6சங் 29:5சங் 92:2எசேக் 17:23
அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும்.
அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு. சங் 104:12லேவி 11:19தானி 4:21எசேக் 31:6எரே 22:23எரே 8:7மத் 13:32ஒபதி 1:4
உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம். நீதி 30:26யோபு 39:11 சாமு 24:2லேவி 11:5உபா 14:7
சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; ஆதி 1:14-18எரே 31:35சங் 136:7-9யோபு 38:12சங் 19:6சங் 8:3யோபு 31:26-28உபா 4:19
சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும்.
நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்; ஏசா 45:7சங் 74:16ஆமோ 1:13ஆதி 1:4-5ஆதி 8:22சங் 139:10-12சங் 50:10
அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும்.
இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும். யோபு 38:39யோவே 1:20சங் 34:10எசேக் 19:2-14யோவே 2:22ஆமோ 3:4ஏசா 31:4யோபு 38:41
சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி, யோபு 37:8யோவா 3:20யோபு 24:13-17நாகூ 3:17
தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும்.
அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும், ஆதி 3:19பிரச 5:12எபே 4:28நியாயாதி 19:162 தெச 3:8-12
தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான்.
யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! எரே 10:12சங் 40:5சங் 50:10-12எபே 3:10ரோம 11:33சங் 107:31ஆதி 1:24-25சங் 24:1
அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்;
பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது.
பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; சங் 69:34சங் 95:4-5அப் 28:5ஆதி 1:28உபா 33:14-16ஆதி 1:20-22ஆதி 3:1உபா 33:19
அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.
அதிலே கப்பல்கள் ஓடும்; சங் 107:23ஏசா 27:1சங் 74:14எசேக் 27:9ஆதி 49:13யோபு 3:8யோபு 41:1-34
அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம் சங் 136:25சங் 147:9யோபு 38:41லூக் 12:24-28சங் 145:15-16யோபு 36:31சங் 36:6
உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; சங் 145:16
நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; பிரச 12:7யோபு 34:14-15சங் 146:4அப் 17:25ஆதி 3:19சங் 30:7சங் 90:3யோபு 10:9
நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து,
தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.
நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்; யோபு 33:4எசேக் 37:9வெளி 21:5ஏசா 65:17யோபு 26:13சங் 33:6தீத் 3:5எபே 2:1
நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர்.
யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; 2 தீமோ 4:18ஆதி 1:31எபே 3:21எரே 32:41யாத் 31:17ஏசா 62:5ஏசா 65:18-19லூக் 15:22-24
யெகோவா தம்முடைய செயல்களிலே மகிழுவார்.
அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; சங் 144:5யாத் 19:18சங் 97:4-5ஆப 3:10சங் 114:7ஆமோ 8:8ஆப 3:5-6ஏசா 64:1-2
அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும்.
நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்; சங் 63:4சங் 146:2சங் 145:1-2
நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; ஆப 3:17-18பிலி 4:4சங் 1:2சங் 119:127-128சங் 119:15-16லூக் 1:47சங் 9:2சங் 119:111
நான் யெகோவாவுக்குள் மகிழுவேன்.
பாவிகள் பூமியிலிருந்து மறைந்து, சங் 103:22நீதி 2:22சங் 106:48சங் 37:38சங் 68:1-2வெளி 19:1-2சங் 1:4சங் 101:8
துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள்.
என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று,
அல்லேலூயா.