ஏசாயா 55

Isaiah 55
அத்தியாயம் 55

தாகமுள்ளவர்களுக்கு அழைப்பு

ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள். யோவா 7:37-38வெளி 21:6வெளி 22:17ஏசா 44:3யோவா 4:10-14ஏசா 41:17-18சங் 143:6வெளி 22:1 நீங்கள் உண்மையான உணவு அல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ஏன் செலவழிக்கவேண்டும்? நீங்கள் எனக்குக் கவனமாகச் செவிகொடுத்து, சிறப்பானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பொருட்களினால் மகிழ்ச்சியாகும். யோவா 6:48-58எரே 2:13சங் 22:26சங் 36:8ரோம 10:2-3எபி 13:9ஏசா 51:7எரே 31:14 உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதிற்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். எரே 32:40மத் 11:28நீதி 4:20யோவா 10:27அப் 13:34ஆதி 17:7ஏசா 61:8யோவா 6:37 இதோ, அவரை மக்கள்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், மக்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன். வெளி 1:5ஏசா 9:6-7எபி 2:10வெளி 3:141 தீமோ 6:13தானி 9:25எசேக் 34:23-24எரே 30:9 இதோ, நீ அறியாதிருந்த தேசத்தை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த தேசம் உன் தேவனாகிய யெகோவாவின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்; ஏசா 60:5ஏசா 60:9சகரி 2:11ஏசா 56:8யோவா 17:1ரோம 15:20ஆதி 49:10ஏசா 55:4 யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். எரே 29:12-14சங் 145:18ஏசா 45:19சங் 32:6சங் 14:2ஏசா 65:24மத் 7:7-82 கொரி 6:1-2 துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர். நீதி 28:13யாக் 4:8-10எசேக் 18:21-23ஏசா 44:22லூக் 15:10யோனா 3:10எசேக் 33:14-16ஏசா 43:25 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார். சங் 92:5சங் 40:5ஓசி 14:9சங் 25:10எசேக் 18:29தானி 4:37ஏசா 53:6நீதி 21:8 பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. சங் 103:11ரோம 11:31-36மத் 11:25சங் 77:19சங் 36:5சங் 89:2 மழையும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, 2 கொரி 9:9-11உபா 32:2ஏசா 30:23எசேக் 34:26ஓசி 10:12ஏசா 61:11சங் 65:9-131 சாமு 23:4 அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாக என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். மத் 24:35ஏசா 46:10ரோம 10:17யோவா 6:63ஏசா 45:23லூக் 8:11-161 கொரி 1:181 தெச 2:13 நீங்கள் மகிழ்ச்சியாகப் பாபிலோனிலிருந்து புறப்பட்டு, சமாதானமாகக் கொண்டு போகப்படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாக முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும். கலா 5:22ரோம 15:13ஏசா 44:23சங் 105:43சங் 96:11-13சங் 98:7-9வெளி 19:1-6ஏசா 49:13 முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு மரம் முளைக்கும்; நெருஞ்சி முட்செடிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது யெகோவாவுக்குப் புகழ்ச்சியாகவும், அழியாத நிலையான அடையாளமாகவும் இருக்கும். எபே 3:20-211 பேது 2:9-10ஏசா 41:192 கொரி 5:17ஏசா 61:3எரே 33:9ஏசா 60:131 பேது 4:11