1 பேதுரு 5

1 Peter 5
அத்தியாயம் 5

மூப்பர்களும் இளைஞர்களும்

உங்களில் உள்ள மூப்பர்களுக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்குள்ளவனாக இருக்கிற நான் புத்திசொல்லுகிறது என்னவென்றால்: கொலோ 3:3-4லூக் 24:482 யோவா 1:1-15ரோம 8:17-18சங் 73:24-251 பேது 5:4வெளி 1:91 யோவா 3:2 உங்களிடம் உள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாக இல்லை, மனப்பூர்வமாகவும், அவலட்சணமான ஆதாயத்திற்காகவும் இல்லை, உற்சாக மனதோடும், தீத் 1:71 தீமோ 3:8அப் 20:26-28தீத் 3:11 தீமோ 3:31 கொரி 9:7எசேக் 34:2-31 கொரி 9:16-17 சுதந்திரத்தை பெருமையோடு ஆளுகிறவர்களாக இல்லை, மந்தைக்கு முன்மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். 2 தெச 3:9எசேக் 34:4பிலி 3:172 கொரி 1:24மத் 20:25-261 தீமோ 4:12தீத் 2:7அப் 20:28 அப்படி செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமை குறையாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். யாக் 1:121 கொரி 9:25ஏசா 40:112 தீமோ 4:81 யோவா 3:2சங் 23:1வெளி 2:10வெளி 3:11 அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; யாக் 4:6நீதி 3:34எபே 5:21ரோம 12:10கொலோ 3:12பிலி 2:3ஏசா 66:2ரோம 13:14

“பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்,

தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”

ஆகவே, குறித்தக் காலத்திலே தேவன் உங்களை உயர்த்துவதற்காக, அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி இருங்கள். யாக் 4:10லூக் 14:11நீதி 29:23மத் 23:12லூக் 18:142 நாளாக 32:26லூக் 1:522 நாளாக 12:12 அவர் உங்களை விசாரிக்கிறவராக இருப்பதினால், உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். சங் 55:22பிலி 4:6சங் 37:5சங் 56:3-4மத் 6:25-26மத் 6:33-34எபி 13:5-6சங் 34:15 தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள், விழித்திருங்கள்; ஏனென்றால், உங்களுடைய எதிராளியாகிய பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என்று தேடிச் சுற்றித்திரிகிறான். எபே 6:11யாக் 4:7எபே 4:27யோபு 2:21 பேது 1:131 பேது 4:71 யோவா 3:8-101 தெச 5:6-8 விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே. யாக் 4:7அப் 14:22எபே 6:11-131 பேது 2:211 கொரி 10:131 தீமோ 6:122 தீமோ 3:12எபே 6:16 கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; 2 கொரி 4:172 தெச 3:31 பேது 1:6-7யூதா 1:24சங் 138:71 தீமோ 6:122 தெச 2:17ரோம 8:28-30 அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 பேது 4:11ரோம 11:36வெளி 1:6வெளி 5:13

இறுதி வாழ்த்துரை

உங்களுக்குப் புத்திசொல்லுவதற்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை, தேவனுடைய உண்மையான கிருபைதான் என்று சாட்சியிடுவதற்கும், நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதி, உண்மையுள்ள சகோதரனாக எனக்குத் தோன்றுகிற சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். எபி 13:22அப் 11:231 கொரி 15:12 கொரி 1:19அப் 20:241 தெச 1:12 தெச 1:11 யோவா 5:9-10 உங்களோடு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் மகனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். அப் 12:12அப் 12:25சங் 87:4வெளி 18:22 யோவா 1:13வெளி 17:5 ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடு வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேவிற்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென். ரோம 16:16எபே 6:23ரோம 8:11 கொரி 16:20ரோம 1:71 தெச 5:262 கொரி 13:12யோவா 14:27