ஏசாயா 57

Isaiah 57
அத்தியாயம் 57

நீதிமான் இறந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை. 2இராஜா 22:202 நாளாக 34:28சங் 12:1மீகா 7:2ஏசா 42:25ஏசா 47:71 இராஜா 14:132 நாளாக 35:24 நேர்மையாக நடந்தவர்கள் சமாதானத்திற்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள். வெளி 14:132 கொரி 5:1யோபு 3:17லூக் 2:292 கொரி 5:8பிரச 12:72 நாளாக 16:14லூக் 7:50 நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் விபச்சாரிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே நெருங்கிவாருங்கள். 1 யோவா 3:10மத் 16:4ஓசி 1:2யாக் 4:4ஆதி 3:15ஏசா 1:21ஏசா 45:20யோவா 8:40-44 நீங்கள் யாரைப் பரியாசம்செய்கிறீர்கள்? யாருக்கு விரோதமாக வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்செய்கிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ? 2 பேது 2:13யாத் 9:17ஏசா 1:4சங் 35:21அப் 9:4கொலோ 3:6எபே 2:2-3எபே 5:6 நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், தெய்வச்சிலைகளுடன் மோக அக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள். 2இராஜா 16:3-4எசேக் 16:20ஏசா 1:292இராஜா 23:10எரே 2:20எரே 3:13எரே 7:31லேவி 18:21 பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை ஊற்றி, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ? எரே 3:9எரே 7:18ஆப 2:19உபா 32:37-38எசேக் 20:39ஏசா 65:11ஏசா 66:3எரே 19:13 நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் படுக்கையை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய். எசேக் 16:16எசேக் 23:41எரே 2:20எசேக் 16:25எசேக் 20:28-29எரே 3:6எரே 3:2எசேக் 23:17 கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் படுக்கையை அகலமாக்கி, அவர்களுடன் உடன்படிக்கைசெய்தாய்; அவர்களுடைய படுக்கையைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய். எசேக் 16:25-28எசேக் 16:32எசேக் 23:2-20எசேக் 23:41எசேக் 8:8-12 நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். எசேக் 23:16கொலோ 2:18எசேக் 23:40ஏசா 30:1-6ஏசா 31:1-32இராஜா 16:7-11எசேக் 16:33ஓசி 12:1 வழிதூரமானதால் சோர்ந்துபோகிறாய்; அது வீணென்று நீ சொல்கிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ பெலவீனமடையவில்லை. எரே 2:25எரே 18:12எரே 5:32 நாளாக 28:22-23எசேக் 24:12ஆப 2:13ஏசா 47:13எரே 2:36 நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்கிறாயே; நீ என்னை நினைக்காமலும், உன் மனதிலே வைக்காமலும்போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய். ஏசா 51:12-13நீதி 29:25சங் 50:21எரே 3:21பிரச 8:11ஏசா 26:10ஏசா 30:9ஏசா 59:3-4 உன் நீதியையும் உன் செயல்களையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது. ஏசா 1:11-15எரே 7:4-11மத் 23:13மீகா 3:2-4ரோம 3:10-20ஏசா 29:15ஏசா 58:2-6ஏசா 59:6-8 நீ கூப்பிடும்போது, உன் தெய்வச்சிலைகளின் கூட்டம் உன்னைக் காப்பாற்றட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோகும்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் பரிசுத்த மலையிலே என்னை ஆராதிக்கிறவனாயிருப்பான். சங் 37:9சங் 37:3ஏசா 56:7ஏசா 65:25எசேக் 20:40ஏசா 11:9ஏசா 65:9ஏசா 66:20

மனம் வருந்துபவர்களுக்கு ஆறுதல்

வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, தடைகளை என் மக்களின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும். ஏசா 62:10லூக் 3:5-6ஏசா 35:8ஏசா 40:3எரே 18:151 கொரி 8:13ரோம 14:13எபி 12:13 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன். சங் 34:18ஏசா 66:1-2சங் 138:6சங் 147:3யாத் 15:11தானி 4:34சங் 51:17ஏசா 40:28 நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே. மீகா 7:18எரே 10:24சங் 103:9-16சங் 85:5எபி 12:9சங் 78:38-39ஆதி 6:3யோபு 34:14-15 நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தின்காரணமாக கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாக நடந்தார்களே. ஏசா 56:11கொலோ 3:5எரே 6:132 பேது 2:14எபே 5:3-51 தீமோ 6:9பிரச 6:9எசேக் 33:31 அவர்களுடைய வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் கொடுப்பேன். எரே 33:6வெளி 7:17எரே 3:22ஓசி 14:4-8எரே 31:3எசேக் 16:60-63ஏசா 61:1-3எரே 13:17 தூரமாயிருக்கிறவர்களுக்கும் அருகில் இருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனை படைக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று யெகோவா சொல்கிறார். அப் 2:39எபி 13:15அப் 10:36எபே 6:19லூக் 10:5-6லூக் 2:14லூக் 21:152 கொரி 5:20-21 துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமைதலாயிருக்கமுடியாமல், அதின் தண்ணீர் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. ஏசா 3:11நீதி 4:16-17யோபு 18:5-14யோபு 15:20-24யோபு 20:11-29யூதா 1:12சங் 73:18-20 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்கிறார். ஏசா 48:22ஏசா 3:112இராஜா 9:22ஏசா 59:8ரோம 3:16-17