எசேக்கியேல் 16

Ezekiel 16
அத்தியாயம் 16

உண்மையில்லாத எருசலேமைக்குறித்த உவமை

யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: எசேக் 22:2எசேக் 20:4ஏசா 58:1எசேக் 23:36எசேக் 33:7-9எசேக் 8:9-17ஓசி 8:1 யெகோவாகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன்னுடைய உற்பத்திக்கும், பிறப்புக்கும் இடம், உன்னுடைய தகப்பன் எமோரியன், தாய் ஏத்தித்தி. எசேக் 16:45ஏசா 51:1-2உபா 20:17யோவா 8:44நெகே 9:71 இராஜா 21:26எசேக் 21:30ஆதி 15:16 உன்னுடைய பிறப்பின் சம்பவம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன்னுடைய தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை. ஓசி 2:3உபா 15:15யாத் 5:16-21ஆதி 15:13யோசு 24:2அப் 7:6-7உபா 5:6யாத் 2:23-24 உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றைகூட உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்மேல் இரக்கமாக இருந்ததுமில்லை; நீ பிறந்த நாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய். உபா 32:10யாத் 1:22ஆதி 21:10புலம் 4:3எண் 19:16ஏசா 49:15எசேக் 2:6எரே 22:19 நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாக நீ உன்னுடைய இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன்னுடைய இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன்னுடைய இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன். எபே 2:4-5யோவா 5:25தீத் 3:3-7அப் 7:34யாத் 19:4-6மத் 5:13யாத் 2:24-25உபா 9:4 உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாகப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியானாய்; உன்னுடைய மார்பகங்கள் எழும்பின, உன்னுடைய முடி வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் உடையற்றவளுமாக இருந்தாய். உபா 1:10யாத் 1:7ஏசா 62:3எசேக் 16:10-13அப் 7:17உபா 32:10-14உபா 33:26-29உபா 4:8 நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன்னுடைய காலம் பருவகாலமாக இருந்தது; அப்பொழுது என்னுடைய ஆடையை உன்மேல் விரித்து, உன்னுடைய நிர்வாணத்தை மூடி, உனக்கு வாக்குக்கொடுத்து, உன்னுடன் உடன்படிக்கைசெய்தேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இந்த விதமாக நீ என்னுடையவளாக ஆனாய். ரூத் 3:9எரே 2:2-3ரோம 5:8ஏசா 43:4யாத் 32:131 சாமு 12:22உபா 4:31உபா 7:6-8 நான் உன்னைத் தண்ணீரால் கழுவி, உன்னை இரத்தம் நீங்க குளிக்கவைத்து, உனக்கு எண்ணெய் பூசி, சங் 23:5ரூத் 3:31 யோவா 2:271 யோவா 5:81 கொரி 6:111 கொரி 10:21 யோவா 2:202 கொரி 1:21 சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, வண்ணம் தீட்டப்பட்ட காலணிகளை உனக்கு அணிவித்து, உடுத்த மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச்சால்வையையும் உனக்குக் கொடுத்து, எசேக் 16:18எசேக் 16:13யாத் 26:36ஏசா 61:10சங் 45:13-14யாத் 26:14யாத் 28:5யாத் 39:27-28 உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன்னுடைய கைகளிலே கடகங்களையும், உன்னுடைய கழுத்திலே சங்கிலியையும் போட்டு, ஆதி 24:22ஏசா 3:19ஆதி 24:47ஆதி 41:42நீதி 1:9எசேக் 23:42எண் 31:50வெளி 4:10 உன்னுடைய நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன்னுடைய காதுகளில் காதணியையும், உன்னுடைய தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் அணிவித்தேன். ஏசா 3:21ஏசா 28:5எரே 13:18 இந்தவிதமாக பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன்னுடைய உடை மெல்லிய புடவையும், பட்டும், சித்திரத்தையலாடையுமாக இருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, மற்ற தேசங்களை சொந்தமாக்கும் வாய்ப்பையும் பெற்றாய். 1 இராஜா 4:21உபா 32:13-14சங் 50:2சங் 48:2எசேக் 16:19சங் 45:13-141 சாமு 10:11 சாமு 12:12 உன்னுடைய அழகினாலே உன்னுடைய புகழ் அந்நியதேசங்களுக்குள்ளே பிரபலமாயிற்று; நான் உன்மேல் வைத்த என்னுடைய மகிமையினாலே அது குறைவற்றதாக இருந்ததென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 1 இராஜா 10:24புலம் 2:151 கொரி 4:7உபா 4:6-81 இராஜா 10:1-132 நாளாக 2:11-122 நாளாக 9:23உபா 4:32-38 நீயோவென்றால் உன்னுடைய அழகை நம்பி, உன்னுடைய புகழ்ச்சியால் துன்மார்க்க வழியிலே நடந்து, வழிப்போக்கர்களில் உனக்கு எதிர்பட்ட எல்லோரோடும் வேசித்தனம்செய்து, எசேக் 16:25ஏசா 57:8எரே 2:20எசேக் 23:3எரே 7:4எசேக் 23:8ஓசி 1:2ஏசா 1:21 உன்னுடைய ஆடைகளில் சிலவற்றை எடுத்து, பலவர்ண அலங்கரிப்புள்ள மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்செய்தாய்; அதைப்போன்ற காரியங்கள் ஒருபோதும் நடந்ததுமில்லை, நடக்கப்போவதுமில்லை. 2இராஜா 23:72 நாளாக 28:24எசேக் 7:20ஓசி 2:8 நான் உனக்குக் கொடுத்த என்னுடைய பொன்னும், வெள்ளியுமான உன்னுடைய அலங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண் உருவங்களை உண்டாக்கி, அவைகளுடன் வேசித்தனம்செய்து, எசேக் 23:14-21யாத் 32:1-4எசேக் 16:11எசேக் 7:19-20ஓசி 10:1ஓசி 2:13ஏசா 44:19-20ஏசா 57:7-8 உன்னுடைய சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என்னுடைய எண்ணெயையும் என்னுடைய தூபவர்க்கத்தையும் அவைகளின் முன்பாக படைத்து, நான் உனக்குக் கொடுத்த என்னுடைய அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன்பு சுகந்த வாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆனதென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக் 16:13உபா 32:14-17ஆதி 8:21ஓசி 2:8-13 நீ எனக்குப் பெற்ற உன்னுடைய மகனையும் உன்னுடைய மகள்களையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய். எசேக் 23:37யாத் 13:2எசேக் 20:26எசேக் 20:31எரே 7:31சங் 106:37-38உபா 29:11-12யாத் 13:12 நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என்னுடைய பிள்ளைகளை அவைகளுக்குத் தீயில் அடக்கம்செய்ய ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய். 2இராஜா 17:172இராஜா 21:6உபா 18:10எரே 19:5லேவி 18:212இராஜா 23:10லேவி 20:1-5சங் 106:37 நீ உன்னுடைய எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் உடையில்லாமலும் இருந்ததும், உன்னுடைய இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாக இருந்ததுமான உன்னுடைய சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய். எரே 2:2எசேக் 16:43ஓசி 11:1எசேக் 16:3-7எசேக் 16:60-63ஓசி 2:3 ஐயோ, உனக்கு ஐயோ, என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புகளெல்லாம் தவிர, எசேக் 13:18எசேக் 13:3எசேக் 2:10எசேக் 24:6எரே 13:27மத் 11:21மத் 23:13-29வெளி 12:12 நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் எல்லா வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டாக்கினாய். எசேக் 16:31எசேக் 16:39ஏசா 57:7எரே 2:20சங் 78:58எசேக் 20:28-29எரே 3:22 நாளாக 33:3-7 நீ எல்லா வழிமுனையிலும் உன்னுடைய உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன்னுடைய அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர்கள் யாவருக்கும் உன்னுடைய கால்களை விரித்து, உன்னுடைய வேசித்தனங்களைத் திரளாகப் பெருகச்செய்து, எசேக் 16:31எரே 3:2எசேக் 16:15எசேக் 23:32எசேக் 23:9-10ஆதி 38:14ஆதி 38:21ஏசா 3:9 சதை பெருத்த உன்னுடைய அயல் தேசத்தாராகிய எகிப்திய மக்களுடன் வேசித்தனம்செய்து, எனக்குக் கோபம் உண்டாக்கும்படி உன்னுடைய வேசித்தனங்களைப் பெருகச்செய்தாய். எசேக் 23:19-21எசேக் 20:7-8உபா 29:16-17யாத் 32:4எசேக் 23:3எசேக் 23:8எசேக் 8:10எசேக் 8:14 ஆதலால், இதோ, நான் என்னுடைய கையை உனக்கு எதிராக நீட்டி, உனக்கு நியமித்த உணவை குறைத்து, உன்னுடைய முறைகேடான வழியைக்குறித்து வெட்கப்பட்ட உன்னுடைய பகையாளிகளாகிய பெலிஸ்தர்களுடைய மகள்களின் ஆசைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன். ஏசா 9:12எசேக் 16:57எசேக் 16:372 நாளாக 28:18-192இராஜா 24:2உபா 28:48-57எசேக் 14:9எசேக் 16:47 நீ திருப்தியடையாததினால் அசீரியர்களுடனும் வேசித்தனம்செய்தாய்; அவர்களுடன் வேசித்தனம்செய்தும் நீ திருப்தியடையவில்லை. 2இராஜா 16:72இராஜா 16:10-18ஓசி 10:6எரே 2:18எரே 2:362 நாளாக 28:232 நாளாக 28:162 நாளாக 28:20-21 நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தைக் கல்தேயர்கள்வரை எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய். 2இராஜா 21:9எசேக் 13:14-23எசேக் 23:14-21நியாயாதி 2:12-19 வெட்கங்கெட்ட வேசியின் செயல்களாகிய இவைகளையெல்லாம் நீ செய்து, ஏசா 1:3எரே 3:3ஏசா 3:9எரே 4:22நீதி 9:13நியாயாதி 16:15-16எரே 2:12-13நீதி 7:11-13 எல்லா வழிமுனையிலும் உன்னுடைய மண்டபங்களைக் கட்டி, எல்லா வீதிகளிலும் உன்னுடைய மேடைகளை உண்டாக்கினபடியால், உன்னுடைய இருதயம் எவ்வளவாகக் களைத்துப்போயிருக்கிறது என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ கட்டணத்தை அலட்சியம் செய்கிறகிறதினால், நீ வேசியைப்போல இல்லாமல், எசேக் 16:33-34ஏசா 52:3எசேக் 16:24-25எசேக் 16:39ஓசி 12:11 தன்னுடைய கணவனுக்குப்பதிலாக அந்நியர்களைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார பெண்ணைப்போல இருக்கிறாய். எரே 2:282 கொரி 11:2-3எசேக் 16:8எசேக் 23:37எசேக் 23:45ஓசி 2:2ஓசி 3:1எரே 2:25 எல்லா வேசிகளுக்கும் கட்டணம் கொடுக்கிறார்கள்; நீயோ உன்னுடைய நேசர்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உன்னிடத்தில் வேசித்தனம்செய்ய வரும்படி அவர்களுக்கெல்லாம் நீயே கட்டணம் கொடுத்து, அவர்களுக்கு வெகுமதிகளைத் தருகிறாய். ஏசா 57:9ஓசி 8:9-10உபா 23:17-18எசேக் 16:41ஆதி 38:16-18ஓசி 2:12ஏசா 30:3ஏசா 30:6-7 இந்த விதமாக உன்னுடைய வேசித்தனங்களுக்கும் வேறே பெண்களின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்செய்ய அவர்கள் உனக்குப் பின்செல்லமாட்டார்கள்; கட்டணம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே கட்டணம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம். ஆகையால், வேசியே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேள். 1 இராஜா 22:19ஆமோ 7:16எசேக் 13:2எசேக் 20:47எசேக் 34:7ஓசி 2:5ஓசி 4:1ஏசா 1:10 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன்னுடைய வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன்னுடைய காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன்னுடைய அசுத்தமான சிலைகளோடும் வேசித்தனம்செய்து, இவைகளுக்கு உன்னுடைய பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன்னுடைய நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும், எசேக் 23:10எசேக் 16:15-22எசேக் 22:15எசேக் 23:18எசேக் 23:29எசேக் 23:8எசேக் 24:13எசேக் 36:25 இதோ, நீ உடலுறவுகொண்ட உன்னுடைய எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு எதிராக சேர்த்து, அவர்கள் உன்னுடைய நிர்வாணத்தையெல்லாம் காணும்படி உன்னுடைய நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து, ஓசி 2:10ஓசி 2:3எரே 13:22எசேக் 23:9-10ஓசி 8:10எரே 13:26புலம் 1:8நாகூ 3:5-6 விபசாரிகளையும் இரத்தம் சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, கடுங்கோபத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்மேல் சுமத்தி, ஆதி 9:6லேவி 20:10எரே 18:21செப்ப 1:17உபா 22:22-24யாத் 21:12எசேக் 16:20-21எசேக் 16:36 உன்னை அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் உன்னுடைய மண்டபங்களை இடித்து, உன்னுடைய மேடைகளைத் தரையாக்கிப்போட்டு, உன்னுடைய உடைகளை அவிழ்த்து, உன்னுடைய சிங்கார ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, உன்னை உடையில்லாமலும் நிர்வாணமுமாக விட்டுப்போய், எசேக் 23:26ஓசி 2:3எசேக் 16:24-25எசேக் 16:10-20எசேக் 16:31எசேக் 23:29எசேக் 7:22-24ஓசி 2:9-13 உனக்கு எதிராக ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்களுடைய வாள்களால் குத்திபோட்டு, எசேக் 23:47ஆப 1:6-10எசேக் 23:10எசேக் 24:21எரே 25:9யோவா 8:5-7 உன்னுடைய வீடுகளை நெருப்பால் சுட்டெரித்து, அநேக பெண்களின் கண்களுக்கு முன்பாக உனக்கு நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன்னுடைய வேசித்தனத்தை ஒழியச்செய்வேன்; நீ இனிக் கட்டணம் கொடுப்பதில்லை. எசேக் 23:482இராஜா 25:9எசேக் 23:27எரே 39:8எரே 52:13உபா 13:16எசேக் 23:10எசேக் 5:8 இவ்விதமாக என்னுடைய எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி, நான் என்னுடைய கடுங்கோபத்தை உன்னில் ஆறச்செய்து, இனி கோபமாக இல்லாமல் அமர்வேன். எசேக் 5:13எசேக் 21:17எசேக் 39:29ஏசா 40:1-2ஏசா 54:9-10சகரி 6:82 சாமு 21:14ஏசா 1:24 நீ உன்னுடைய இளவயதின் நாட்களை நினைக்காமல், இவைகள் எல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன்னுடைய வழியின் பலனை உன்னுடைய தலையின்மேல் சுமரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன்னுடைய எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய். எசேக் 16:22எசேக் 11:21எசேக் 22:31சங் 78:42எசேக் 6:9ஏசா 63:10சங் 106:13அப் 7:51 இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லோரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள். எசேக் 18:2-31 சாமு 24:13சங் 106:35-38எசேக் 16:3எஸ்றா 9:11 இராஜா 21:162இராஜா 17:112இராஜா 17:15 நீ, தன்னுடைய கணவனையும் தன்னுடைய பிள்ளைகளையும் அருவருத்த உன்னுடைய தாயின் மகள்; நீ, தங்களுடைய கணவன்களையும் பிள்ளைகளையும் அருவருத்த உன்னுடைய சகோதரிகளின் சகோதரி; உங்களுடைய தாய் ஏத்தித்தி; தகப்பன் எமோரியன். ஏசா 1:4சகரி 11:8உபா 12:31எசேக் 16:15எசேக் 16:8எசேக் 23:2எசேக் 23:37-39உபா 5:9 உன்னுடைய இடதுபுறத்திலே, தானும் தன்னுடைய மகள்களுமாகக் குடியிருந்த சமாரியா உன்னுடைய அக்காள்; உன்னுடைய வலதுபுறத்திலே, தானும் தன்னுடைய மகள்களுமாகக் குடியிருந்த சோதோம் உன்னுடைய தங்கை. எசேக் 23:4எசேக் 16:48-49எசேக் 16:51எசேக் 16:53-56எசேக் 16:61ஆதி 13:10-13எரே 3:8-112 பேது 2:6 ஆகிலும் நீ அவர்களுடைய வழிகளிலே நடக்காமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன்னுடைய எல்லா வழிகளிலேயும் அவர்களைவிட கேடாக நடந்தாய். 2இராஜா 21:9எசேக் 16:48எசேக் 16:51எசேக் 5:6-71 இராஜா 16:311 கொரி 5:12இராஜா 21:16எசேக் 8:17 நீயும் உன்னுடைய மகள்களும் செய்ததுபோல, உன்னுடைய சகோதரியாகிய சோதோமும் அவளுடைய மகள்களும் செய்யவில்லை என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார். மத் 10:15அப் 7:52லூக் 10:12மத் 11:23-24மாற் 6:11 இதோ, கர்வமும், உணவுப்பெருக்கும், அலட்சியமான அக்கறை செலுத்தாதவைகளாகிய இவைகளே உன்னுடைய சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவளுடைய மகள்களிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை. எசேக் 28:2ஆதி 13:10சங் 138:6லூக் 12:16-20தானி 5:23எசேக் 18:12எசேக் 18:16ஏசா 3:9 அவர்கள் தங்களை உயர்த்தி, என்னுடைய முகத்திற்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன். ஆதி 13:13ஆதி 18:20ஆதி 19:24ஆதி 19:52இராஜா 23:72 பேது 2:6ஆமோ 4:11உபா 23:17 நீ செய்த பாவங்களில் பாதியையும் சமாரியா செய்யவில்லை; நீ உன்னுடைய சகோதரிகளைவிட உன்னுடைய பாவங்களைப் பெருகச்செய்து, நீ செய்த உன்னுடைய எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கச்செய்தாய். எரே 3:8-11லூக் 12:47-48மத் 12:41-42ரோம 3:9-20 இப்போதும் உன்னுடைய சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைவிட அருவருப்பாகச் செய்த உன்னுடைய பாவங்களுக்காக உன்னுடைய வெட்கத்தை சுமந்துகொள்; உன்னைவிட அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன்னுடைய சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கச்செய்த நீ வெட்கமடைந்து, உன்னுடைய வெட்கத்தை சுமந்துகொள். மத் 7:1-51 இராஜா 2:321 சாமு 24:17எசேக் 16:54எசேக் 16:56எசேக் 16:63எசேக் 36:15எசேக் 36:31-32 நான் சோதோமும் அவளுடைய மகள்களும் சிறையிருக்கிற அவர்களுடைய சிறையிருப்பையும், சமாரியாவும் அவளுடைய மகள்களும் சிறையிருக்கிற சிறையிருப்பையும் திருப்பும்போது, அவர்களுடைய நடுவிலே நீ சிறையிருக்கிற உன்னுடைய சிறையிருப்பையும் திருப்புவேன். எசேக் 29:14எசேக் 39:25ஏசா 19:24-25எரே 12:16எசேக் 16:60-61ஏசா 1:9எரே 20:16எரே 31:23 அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன்னுடைய வெட்கத்தை சுமந்து, நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய். எசேக் 14:22-23எரே 2:26எசேக் 16:52எசேக் 16:63எசேக் 36:31-32 உன்னுடைய சகோதரிகளாகிய சோதோமும் அவளுடைய மகள்களும் தங்களுடைய முந்தின நிலைக்கு திரும்புவார்கள்; சமாரியாவும் அவளுடைய மகள்களும் தங்களுடைய முந்தின நிலைக்குத் திரும்புவார்கள்; நீயும் உன்னுடைய மகள்களும் உங்களுடைய முந்தின நிலைக்குத் திரும்புவீர்கள். எசேக் 16:53எசேக் 36:11மல்கி 3:4 உன்னை வெறுக்கும் சீரியாவின் மகள்களும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தர்களின் மகள்களும் அவமானப்படுத்தினபோது உன்னுடைய பொல்லாப்பு வெளியாயிற்றே. ஏசா 65:5லூக் 15:28-30லூக் 18:11செப்ப 3:11 அதற்கு முன்பு உன்னுடைய கர்வத்தின் நாளிலே உன்னுடைய சகோதரியாகிய சோதோமின் பெயரை உன்னுடைய வாயினாலே உச்சரிக்கவுமாட்டாய். 2இராஜா 16:5-72 நாளாக 28:18-232 நாளாக 28:5-6எசேக் 16:36-37ஏசா 7:11 கொரி 4:5எசேக் 21:24எசேக் 23:18-19 உன்னுடைய முறைகேட்டையும் உன்னுடைய அருவருப்புகளையும் நீ சுமப்பாய் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 23:49ஆதி 4:13புலம் 5:7 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துப்போடுகிறதினால் ஆணையை அசட்டைசெய்த நீ செய்ததுபோல நான் உனக்கும் செய்வேன். எசேக் 17:19ஏசா 24:52 நாளாக 34:31-32உபா 29:10-15உபா 29:25யாத் 24:1-8எசேக் 14:4எசேக் 17:13-16 ஆகிலும் உன்னுடைய இளவயதில் உன்னுடன்செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் நினைத்து, நிரந்தர உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன். ஓசி 2:19-20எசேக் 16:8எபி 12:24எபி 8:10எரே 50:5ஏசா 55:3எரே 31:31-34எரே 32:38-41 அப்பொழுது உன்னுடைய மூத்த சகோதரிகளையும் உன்னுடைய தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளும்போது, உன்னுடைய வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்குக் மகள்களாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை. கலா 4:26-31எபி 8:13எபே 3:6எசேக் 20:43ஏசா 66:7-12எரே 50:4-5ரோம 11:11ரோம 15:16 உன்னுடன் என்னுடைய உடன்படிக்கையைசெய்து ஏற்படுத்துவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிவாய். எரே 24:7எசேக் 6:7எசேக் 16:60எசேக் 20:37எசேக் 20:43-44எசேக் 39:22ஓசி 2:18-23யோவே 3:17 நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன்னுடைய நாணத்தினால் உன்னுடைய வாயை இனித் திறக்கமுடியாமல் இருப்பாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். சங் 39:9ரோம 3:19தானி 9:7-8எசேக் 36:31-32யோபு 40:4-5தீத் 3:3-7எசேக் 16:61எஸ்றா 9:6