எரேமியா 2

Jeremiah 2
அத்தியாயம் 2

இஸ்ரவேல் தேவனைக் கைவிடுதல்

யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரே 23:28எசேக் 7:1எபி 1:1எரே 1:11எரே 7:12 பேது 1:21 நீ போய், எருசலேமில் உள்ளவர்கள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்திரத்தில் நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 16:60எசேக் 16:8எரே 11:6உபா 2:7உபா 8:2ஓசி 2:15ஏசா 63:7-14எரே 7:2 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குப் பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த அனைவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று யெகோவா சொல்லுகிறார். யாக் 1:18வெளி 14:4உபா 7:6யாத் 4:22-23ஏசா 41:11ரோம 11:161 பேது 2:9உபா 14:2 யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். ஓசி 4:1ஏசா 51:1-4எரே 13:15எரே 19:3எரே 31:1எரே 33:24எரே 34:4எரே 44:24-26 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரச்செய்தவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடந்து செல்லாமலும் ஒரு மனிதனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்திரத்தில் எங்களை நடத்தினவருமாகிய யெகோவா எங்கேயென்று உங்கள் முற்பிதாக்கள் கேளாமல், 2இராஜா 17:15ரோம 1:21எரே 10:14-15யோனா 2:8சங் 115:81 சாமு 12:21அப் 14:15உபா 32:21 என்னைவிட்டுப் பிரிந்து, வீணான விக்கிரங்களைப் பின்பற்றி, வீணராகப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? உபா 32:10உபா 8:14-16ஓசி 13:4ஏசா 63:11-132இராஜா 2:14யாத் 14:1-15ஓசி 12:13ஏசா 63:9 செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடுவதற்கு நான் உங்களை அவ்விடத்திற்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் நுழைந்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்திரத்தை அருவருப்பாக்கினீர்கள். உபா 8:7-9எரே 16:18எண் 13:27எசேக் 36:17எரே 3:1எரே 3:9சங் 106:38-39உபா 11:10-12 யெகோவா எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்செய்தார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனம் சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள். ஆப 2:182 கொரி 4:2ஓசி 4:6எரே 10:21எரே 5:31ரோம 2:17-24ஏசா 29:10ஏசா 30:5 ஆதலால் இன்னும் நான் உங்களுடன் வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுடனும் வழக்காடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். எசேக் 20:35-36யாத் 20:5எரே 2:35மீகா 6:2ஓசி 2:2ஏசா 3:13ஏசா 43:26எரே 2:29 நீங்கள் கித்தீமின் தீவுகள்வரை சென்று பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும், சங் 120:51 நாளாக 1:71 நாளாக 23:11 நாளாக 23:121 கொரி 5:1தானி 11:30எசேக் 27:6ஆதி 10:4-5 எந்த மக்களாவது தெய்வங்களல்லாத தங்கள் தெய்வங்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் மக்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள். ரோம 1:23ஏசா 37:19எரே 16:20சங் 106:20மீகா 4:51 கொரி 8:4எரே 2:8சங் 115:4 வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 1:2உபா 32:1எரே 22:29எரே 6:19மீகா 6:2மத் 27:45மத் 27:50-53 என் மக்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள். யோவா 4:14யோவா 7:37எரே 17:13வெளி 21:6சங் 36:9வெளி 22:1வெளி 22:17ஏசா 55:2 இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்? யாத் 4:22பிரச 2:7ஆதி 15:3ஏசா 50:1 பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன. எரே 4:7எரே 50:17ஏசா 1:7ஏசா 5:29எரே 9:11ஆமோ 3:12ஆமோ 3:4ஆமோ 3:8 நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் மக்களும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள். எரே 46:14எரே 43:7-9உபா 33:20ஏசா 19:13எரே 44:1எசேக் 30:162இராஜா 18:212இராஜா 23:33 உன் தேவனாகிய யெகோவா உன்னை வழியில் நடத்திக்கொண்டு போகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ இதை உனக்கு சம்பவிக்கச்செய்தாய்? எரே 4:18எரே 2:19எரே 2:13உபா 28:15-68உபா 32:10ஓசி 13:9லேவி 26:15-46சங் 107:7 இப்போதும் நைல் நதியின் 1தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்திற்குப் போகிறதினால் உனக்குப் பலன் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பலன் என்ன? யோசு 13:3ஓசி 7:11ஏசா 31:1எரே 2:362 நாளாக 28:20-212இராஜா 16:7-9எசேக் 17:15ஓசி 5:13 உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய யெகோவாவை விடுகிறதும், என்னைப்பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஏசா 3:9எரே 2:17எரே 4:18சங் 36:1ஓசி 11:7ஓசி 5:5ஆமோ 8:10எரே 5:6 பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான எல்லா மேட்டின்மேலும், பச்சையான எல்லா மரத்தின்கீழும் நீ வேசியாகத் திரிகிறாய். உபா 12:2லேவி 26:13எரே 17:2ஓசி 3:3ஏசா 1:21எரே 30:81 இராஜா 12:321 சாமு 12:10 நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சைச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சைச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன? ஏசா 5:4யாத் 15:17யோவா 15:1சங் 44:2சங் 80:8உபா 4:37உபா 32:32ஆதி 26:3-5 நீ உன்னை உவர்மண்ணினால் கழுவி, அதிக சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எரே 17:1ஓசி 13:12யோபு 14:17எரே 16:17யோபு 9:30-31சங் 130:3சங் 90:8ஆமோ 8:7 நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ பொய்ச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கில் நீ நடக்கிற வழிமுறைகளைப் பார்; நீ செய்த பாவத்தை உணர்ந்துகொள்; ஆண் ஒட்டகத்தை தேடி அடைய தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண் ஒட்டகம் நீ. எரே 7:31நீதி 30:121 யோவா 1:8-101 சாமு 15:13-14எஸ்த 8:16எசேக் 16:1-63எசேக் 23:1-49ஆதி 3:12-13 வனாந்திரத்தில் பழகினதும், தன் இச்சையின் மதவெறியில் காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள். எரே 14:6ஓசி 5:15எரே 2:27யோபு 39:5-8யோபு 11:12 உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய். உபா 32:16எரே 18:12எரே 3:13ரோம 8:242 நாளாக 28:22உபா 28:48உபா 29:19-20ஏசா 2:6 திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; மரகட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப் பெற்றெடுத்தாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள். எஸ்றா 9:7எரே 32:32நெகே 9:32-34தானி 9:6-8ஏசா 1:29எரே 2:36எரே 3:24-25எரே 48:27 அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை காப்பாற்றும் என்கிறார்கள். ஏசா 26:16ஓசி 7:14எசேக் 23:35எசேக் 8:16ஆப 2:18-19ஓசி 5:15ஏசா 44:9-20ஏசா 46:6-8 நீ உனக்கு உண்டாக்கின தெய்வங்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் காப்பாற்ற முடியுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் எண்ணிக்கையும், உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் சரி. உபா 32:37எரே 11:13ஏசா 45:20நியாயாதி 10:142இராஜா 17:30-31ஏசா 46:72இராஜா 3:13ஓசி 10:1 என்னுடன் நீங்கள் வழக்காடவேண்டும்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம் செய்தீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். தானி 9:11எரே 5:1எரே 6:13எரே 2:23எரே 2:35எரே 3:2எரே 9:2-6ரோம 3:19 நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது. நெகே 9:261 தெச 2:15அப் 7:52ஏசா 1:5எரே 26:20-24எரே 5:3ஏசா 9:13எரே 7:28 சந்ததியாரே, நீங்கள் யெகோவாவுடைய வார்த்தையைச் சிந்தித்துப்பாருங்கள்: நான் இஸ்ரவேலுக்கு வனாந்திரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின் ஏன் என் மக்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள். 2 சாமு 12:7-9உபா 32:151 கொரி 4:82 நாளாக 31:10ஆமோ 1:1உபா 31:20உபா 8:12-14ஓசி 13:6 ஒரு பெண் தன் நகைகளையும், ஒரு மணப்பெண் தன் திருமண ஆடைகளையும் மறப்பாளோ? என் மக்களோ அநேக வருடங்களாக என்னை மறந்துவிட்டார்கள். சங் 106:21எரே 13:25எரே 2:11எரே 3:21ஏசா 17:10ஓசி 8:14ஏசா 61:10சங் 9:17 நேசத்தைத் தேடுவதற்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத பெண்களுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய். எசேக் 16:47ஏசா 57:7-102 நாளாக 33:9எசேக் 16:27எசேக் 16:51-52ஓசி 2:5-7எரே 2:23எரே 2:36 உன் ஆடைஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளிப்படியாக இருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன். 2இராஜா 21:162இராஜா 24:4எரே 19:4யாத் 22:2எசேக் 16:20-21எசேக் 20:31எசேக் 24:7ஏசா 57:5 ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டு நீங்கிவிட்டது என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினால் நான் உன்னுடன் வழக்காடுவேன். நீதி 28:131 யோவா 1:8-10ஏசா 58:3எரே 2:23எரே 2:29எரே 2:9எரே 25:31யோபு 33:9 நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கப்பட்டதுபோல எகிப்தினாலும் வெட்கப்படுவாய். எரே 31:22ஓசி 5:132 நாளாக 28:162 நாளாக 28:20-21ஓசி 12:1எரே 2:23எசேக் 29:7ஓசி 10:6 நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனென்றால், உன் நம்பிக்கைகளைக் யெகோவா வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது. 2 சாமு 13:19எசேக் 17:15-20எரே 17:5எரே 37:7-102 நாளாக 13:12ஏசா 10:4எரே 2:36எரே 32:5