ஏசாயா 51

Isaiah 51
அத்தியாயம் 51

சீயோனுக்கு நித்திய இரட்சிப்பு

நீதியைப் பின்பற்றி யெகோவாவை தேடுகிறவர்களாகிய நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட கிணற்றின் குழியையும் நோக்கிப்பாருங்கள். ஏசா 51:7சங் 94:15எபி 12:14சங் 105:3-4ரோம 14:19ரோம 9:30-322 தீமோ 2:22ஆமோ 5:6 உன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கும்போது நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகச்செய்தேன். எசேக் 33:24கலா 3:9-14ரோம 4:1-5எபி 11:8-12ஆதி 18:11-13ஆதி 24:1ஏசா 29:22ஆதி 12:1-3 யெகோவா சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான இடங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்திரத்தை ஏதேனைப்போலவும், அதின் காலியான இடத்தைக் யெகோவாவின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் பாடலின் சத்தமும் அதில் உண்டாயிருக்கும். ஏசா 49:13ஏசா 52:9யோவே 2:31 பேது 1:8ஆதி 13:10எரே 31:12-14எரே 31:25எரே 33:11-13 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் மக்களே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை மக்களின் வெளிச்சமாக நிறுவுவேன். 1 பேது 2:91 கொரி 9:21ஏசா 2:3ஏசா 42:6ஏசா 49:6மீகா 4:2சங் 78:1யாத் 19:6 என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் மக்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும். ரோம 10:17-18ஏசா 46:13ஏசா 42:4ஏசா 60:9ரோம 10:6-102 கொரி 5:10யோவே 3:12லூக் 24:47 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோகும், பூமி ஆடையைப்போல் பழையதாகும்; அதின் குடிமக்களும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை. மத் 24:35சங் 102:25-26எபி 1:10-12ஏசா 34:4வெளி 6:12-14யோவா 3:15-162 பேது 3:10-12யோவா 10:27-29 நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள். மத் 5:11எசேக் 2:6சங் 37:311 பேது 4:14அப் 5:41ஏசா 51:11 பேது 4:42 கொரி 3:3 பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுரோமத்தைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும். ஏசா 51:6ஏசா 50:9ஏசா 66:24ஓசி 5:12யோபு 4:19லூக் 1:50ஏசா 45:17ஏசா 46:13 எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை 1 வதைத்ததும் நீதானல்லவோ? சங் 74:13-14ஏசா 52:1சங் 89:10ஏசா 27:1ஏசா 30:7எசேக் 29:3ஏசா 51:17யோபு 26:12 மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய கடலை வற்றிப்போகச்செய்ததும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ? ஏசா 43:16யாத் 14:21-22யாத் 15:13ஏசா 50:2ஏசா 63:11-12ஏசா 42:15சங் 74:13 அப்படியே யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும். ஏசா 25:8வெளி 21:4வெளி 7:17ஏசா 35:102 தெச 2:16ஏசா 61:7எரே 33:11ஏசா 60:19-20 நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனிதனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின யெகோவாவை மறக்கிறதற்கும் நீ யார்? சங் 118:61 பேது 1:24ஏசா 2:22யோவா 14:26-272 கொரி 1:3-5யோவா 14:18யாக் 1:10-11ஏசா 66:13 துன்பம் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய கடுங்கோபத்திற்கு எப்போதும் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? துன்பம் செய்கிறவனுடைய கடுங்கோபம் எங்கே? ஏசா 17:10ஏசா 40:22ஏசா 45:12சங் 104:21 கொரி 1:20தானி 3:19ஏசா 44:24ஏசா 48:13 சிறைப்பட்டுப்போனவன் துரிதமாக விடுதலையாவான்; அவன் குழியிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை. ஏசா 48:20சகரி 9:11ஏசா 52:2அப் 12:7-8ஏசா 49:10எஸ்றா 1:5எரே 38:6-13எரே 37:16 உன் தேவனாயிருக்கிற யெகோவா நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாக கடலைக் குலுக்குகிற சேனைகளின் யெகோவா என்கிற நாமமுள்ளவர். எரே 31:35ஏசா 54:5ஆமோ 9:5-6ஏசா 47:4ஏசா 51:10எரே 10:16சங் 114:3-5சங் 136:13 நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் மக்கள்கூட்டமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன். ஏசா 59:21ஏசா 49:2யோவா 17:8உபா 18:18எரே 31:33ஏசா 66:22ஏசா 48:13ஏசா 50:4

யெகோவாவுடைய கோபமாகிய பாத்திரம்

எழும்பு, எழும்பு, யெகோவாவுடைய கடுங்கோபத்தின் பாத்திரத்தை அவருடைய கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய். ஏசா 52:1வெளி 14:101 கொரி 15:34எபே 5:14ஏசா 51:9யோபு 21:20சங் 60:3சங் 11:6 அவள் பெற்ற மக்கள் அனைவருக்குள்ளும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த மகன்கள் எல்லோரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை. ஏசா 49:21சங் 88:18ஏசா 41:13ஏசா 45:1மத் 15:14மத் 9:36மாற் 8:23சங் 142:4 இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உன்னை ஆறுதல்படுத்துகிறவன் யார்? பாழாகுதலும், அழிவும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உன்னை ஆறுதல்படுத்துவேன்? ஆமோ 7:2ஏசா 47:92 கொரி 7:132 கொரி 7:6-7பிரச 4:1எசேக் 14:21ஏசா 14:30ஏசா 22:4 உன் மகன்கள் தளர்ந்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்கிய கலைமானைப்போல, அனைத்து வீதிகளின் முனையிலும், யெகோவாவுடைய கடுங்கோபத்தினாலும், உன் தேவனுடைய கடிந்துகொள்ளுதலினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள். புலம் 2:11-12வெளி 16:9-11உபா 14:5எசேக் 12:13எசேக் 17:20எசேக் 39:19ஏசா 29:9ஏசா 49:26 ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடிக்காமல் வெறிகொண்டவளே, நீ கேள். ஏசா 29:9ஏசா 51:17ஏசா 54:11 கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய மக்களுக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்கிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் கடுங்கோபத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை. நீதி 22:23ஏசா 51:17ஏசா 62:8எரே 50:34ஏசா 49:25சங் 35:11 சாமு 25:39யோவே 3:2 உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார். யோசு 10:24சகரி 12:2ஏசா 49:25-26எரே 25:15-29நீதி 11:8நீதி 21:18சங் 65:11-12வெளி 11:2