சீயோனின் வருங்கால மகிமை
பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாகப் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், தனியாக இருக்கும் பெண்ணுடைய பிள்ளைகள் அதிகம் என்று யெகோவா சொல்கிறார். கலா 4:27ஏசா 62:41 சாமு 2:5எபி 11:11-12சங் 113:9சகரி 9:9ஏசா 49:13செப்ப 3:14 உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் குடியிருப்புகளின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. ஏசா 33:20ஏசா 49:19-20எரே 10:20யாத் 39:40யாத் 35:18 நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் தேசங்களைச் சொந்தமாக்கிக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். எசேக் 36:35-36ஆதி 28:14ஏசா 43:5-6ஏசா 49:18-19ஏசா 60:3-13சங் 72:8-11ஏசா 52:9ஆதி 49:10 பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; வெட்கப்படாதே, நீ அவமானமடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினைக்காமலிருப்பாய். ஏசா 41:101 பேது 2:6ஏசா 61:7எரே 31:19ஏசா 45:16-17ஏசா 51:7ஏசா 41:14எசேக் 16:60-63 உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். எபே 5:25-27ஓசி 2:19-202 கொரி 11:2-3ஏசா 48:17எசேக் 16:8ரோம 3:29-30யோவா 3:29சங் 45:10-17 கைவிடப்பட்டு மனம்நொந்தவளான பெண்ணைப்போலவும், இளம்பிராயத்தில் திருமணம்செய்து விவாகரத்து செய்யப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் யெகோவா அழைத்தார் என்று உன் தேவன் சொல்கிறார். ஏசா 62:4பிரச 9:9ஓசி 2:1-2ஓசி 2:14-15நீதி 5:18ஏசா 49:14-212 கொரி 7:9-10ஏசா 50:1-2 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். சங் 30:52 பேது 3:8ஏசா 26:20மீகா 4:6உபா 30:3ஏசா 60:4ஏசா 66:182 கொரி 4:17 அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று யெகோவாவாகிய உன் மீட்பர் சொல்கிறார். எரே 31:31 தீமோ 1:16ஏசா 60:10எசேக் 39:23-24ஏசா 54:10ஏசா 57:16-17சகரி 1:15ஏசா 55:3 இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போல் இருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபம்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன். ஏசா 12:1ஆதி 8:21ஆதி 9:11-16எபி 6:16-18எசேக் 39:20ஏசா 55:11எரே 31:35-36எரே 33:20-26 மலைகள் விலகினாலும், மலைகள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற யெகோவா சொல்கிறார். சங் 89:33-34சங் 46:2எபே 2:4-5மத் 24:35ரோம 11:29ஏசா 51:6-7ஏசா 55:3ஏசா 54:8 சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவு இல்லாதவளே, இதோ, நான் உன் கற்களைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி, 1 பேது 2:4-6அப் 14:22எரே 30:17ஏசா 54:61 நாளாக 29:2சங் 34:19யாத் 2:23வெளி 21:18-21 உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களுமாக்குவேன். உன் பிள்ளைகளெல்லோரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். யோவா 6:45பிலி 4:7சங் 119:165எரே 31:34எபி 8:10யோவா 14:26-27கலா 5:22ஏசா 26:3 நீதியினால் உறுதியாக்கப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை. நீதி 3:25-26எரே 30:10சகரி 9:8எசேக் 36:27-28சகரி 2:4-5சகரி 8:3ஏசா 9:4ஏசா 1:26 இதோ, உனக்கு விரோதமாகக் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாகக் கூடுகிறார்களோ, அவர்கள் உன் ஆளுகைக்குள்ளாக வருவார்கள். ஏசா 41:11-16சங் 37:12-13சகரி 12:9சகரி 2:8ஏசா 43:3-4வெளி 20:8-9ஏசா 43:14சகரி 14:2-3 இதோ, கரிநெருப்பை ஊதி, தன் வேலைக்கான ஆயுதத்தை உண்டாக்குகிற கொல்லனையும் நான் படைத்தேன்; கெடுத்து நாசமாக்குகிறவனையும் நான் படைத்தேன். யாத் 9:16நீதி 16:4ஏசா 46:11ஏசா 10:15ஏசா 10:5-6தானி 4:34-35ஏசா 37:26யோவா 19:11 உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல்போகும்; உனக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது யெகோவாவுடைய ஊழியக்காரரின் உரிமையும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று யெகோவா சொல்கிறார். ரோம 8:28-39ஏசா 54:15யோவா 10:28-30ஏசா 50:8ரோம 8:1சங் 32:6சங் 2:1-6மத் 16:18