சகரியா 9

Zechariah 9
அத்தியாயம் 9

இஸ்ரவேல் தனது எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுதல்

ஆதிராக் தேசத்திற்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான யெகோவாவுடைய வார்த்தையாகிய செய்தி; மனிதர்களின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் யெகோவாவை பார்த்துக்கொண்டிருக்கும். ஆமோ 1:3-5ஏசா 9:8-21எரே 49:23-27சங் 25:152 நாளாக 20:12ஆமோ 3:12ஆதி 14:15ஏசா 13:1 ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும், சீதோனும் அதின் எல்லைக்குள்ளாக இருக்கும். எசேக் 28:12எரே 49:23எசேக் 28:2-51 இராஜா 17:92இராஜா 23:332இராஜா 25:21ஆமோ 1:9-10ஆமோ 6:14 தீரு தனக்கு மதிலைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது. எசேக் 27:33எசேக் 28:4-5யோபு 27:16யோசு 19:292 சாமு 24:7ஏசா 23:81 இராஜா 10:27யோபு 22:24 இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது நெருப்பிற்கு இரையாகும். எசேக் 28:18ஆமோ 1:10எசேக் 26:17எசேக் 26:3-5எசேக் 27:26-36எசேக் 28:16எசேக் 28:2எசேக் 28:8 அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காசாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் புலம்பும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்று இருக்கும். அப் 8:26எரே 47:1வெளி 18:9-17செப்ப 2:4-7எசேக் 25:15-17எசேக் 26:15-21ஏசா 14:29-31ஏசா 20:5-6 அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் தங்கியிருப்பார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன். ஆமோ 1:81 பேது 5:5செப்ப 2:10தானி 4:37பிரச 2:18-21பிரச 6:2ஏசா 2:12-17ஏசா 23:9 அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பற்களின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான். கலா 3:281 நாளாக 11:4-61 நாளாக 21:151 சாமு 17:34-362 சாமு 24:16-23ஆமோ 3:12எசேக் 16:57-61ஏசா 11:12-14 சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படுவதற்காக அதைச் சுற்றிலும் முகாமிடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஏசா 54:14ஏசா 52:1ஏசா 60:18எரே 31:12யோவே 3:16-172 சாமு 16:12ஆமோ 9:15தானி 11:27-29

வரப்போகும் இராஜா

மகளாகிய சீயோனே, மிகவும் மகிழ்ச்சியாயிரு; மகளாகிய எருசலேமே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் பெண் கழுதைக்குட்டியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். மத் 21:4-7செப்ப 3:14-15யோவா 12:13-16சகரி 2:10எரே 23:5-6லூக் 19:37-38ஏசா 43:11மாற் 11:7 எப்பிராயீமிலிருந்து இரதங்களையும், எருசலேமிலிருந்து குதிரைகளையும் அற்றுப்போகச்செய்வேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் மக்களுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரம் துவங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதுவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் செல்லும். ஓசி 1:7ஓசி 2:182 கொரி 10:4-5கொலோ 1:20-21சங் 72:7-11வெளி 11:15எபே 2:13-17ஏசா 49:6 உனக்கு நான் செய்வது என்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைசெய்வேன். ஏசா 51:14யாத் 24:8சங் 102:19-21ஏசா 42:7மத் 26:281 கொரி 11:25ஏசா 49:9சங் 40:2 நம்பிக்கையுடைய சிறைகளே, பாதுகாப்பிற்குள் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். யோபு 42:10ஏசா 61:7புலம் 3:21-22எபி 6:18ஏசா 40:2எரே 31:17எரே 51:10நாகூ 1:7 நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் மக்களைக் கிரேக்க தேசமக்களுக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்திற்கு ஒப்பாக்குவேன். வெளி 17:14ஏசா 49:2சகரி 10:3-7யோவே 3:6-8சங் 45:3வெளி 19:15சகரி 1:21சகரி 12:2-8 அவர்கள் பக்கம் யெகோவா காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; யெகோவாகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார். சங் 18:14ஏசா 66:15ஆப 3:11ஏசா 21:1ஏசா 27:13சங் 144:5-6சகரி 14:3சகரி 2:5 சேனைகளின் யெகோவா அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் அழித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் மதுமயக்கத்தினால் ஆரவாரம் செய்வார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள். சகரி 12:6சகரி 10:7யாத் 27:2சங் 78:65சகரி 10:5சகரி 12:8லேவி 4:18லேவி 4:25 அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள். ஏசா 62:3யோவா 10:27எசேக் 34:31ஆகா 2:23லூக் 12:32எசேக் 34:22-26சங் 100:31 பேது 5:2-4 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபர்களையும், புது திராட்சைரசம் இளம்பெண்களையும் வளர்க்கும். 1 யோவா 4:8-11ஏசா 33:17ஏசா 62:8-9யாத் 15:11சங் 31:19சங் 36:7சங் 45:2சங் 50:2