லேவியராகமம் 4

Leviticus 4
அத்தியாயம் 4

பாவநிவாரணபலி

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது: சங் 19:12எபி 9:7லேவி 4:27எண் 15:22-291 சாமு 14:27யாக் 3:10லேவி 5:15-181 தீமோ 1:13 அபிஷேகம் பெற்ற ஆசாரியன் 1, மக்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவம் செய்தால், தான் செய்த பாவத்திற்காக பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். எபி 7:27-28லேவி 9:22 கொரி 5:21லேவி 4:14எஸ்றா 8:35எபி 5:3யாத் 29:14யாத் 29:21 அவன் அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன். லேவி 1:3-41 பேது 3:18தானி 9:26யாத் 29:10-11ஏசா 53:6லேவி 16:21 அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து, லேவி 16:14லேவி 4:16-17எண் 19:41 யோவா 1:7லேவி 16:19 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை தெளிக்கக்கடவன். யோசு 6:4யோசு 6:8லேவி 14:18லேவி 16:14லேவி 16:19லேவி 26:18லேவி 26:24லேவி 26:28 பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்திலே யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கும் நறுமண தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, லேவி 8:15லேவி 9:9லேவி 16:18லேவி 4:18லேவி 4:34லேவி 5:9லேவி 4:30எபே 2:13 பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், லேவி 3:3-5லேவி 4:26ஏசா 53:10யோவா 12:27லேவி 16:25லேவி 3:14-16லேவி 3:9-11லேவி 4:19 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும், லேவி 3:4 சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன். காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும், எண் 19:5யாத் 29:14எபி 13:11-13லேவி 16:27லேவி 4:21லேவி 6:30லேவி 8:14-17லேவி 9:8-11 காளை முழுவதையும் முகாமிற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டப்பட்டிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன். எபி 13:11யாத் 29:14லேவி 6:10-11லேவி 16:27லேவி 13:46எண் 15:35எண் 19:3எண் 19:5 “கூடி வந்த இஸ்ரவேல் சபையார் எல்லோரும் அறியாமையினால் பாவம்செய்து, அது தங்களுடைய கண்களுக்கு மறைவாக இருக்கிறதினால், யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளிகளானால், லேவி 5:17லேவி 5:2-51 கொரி 11:271 தீமோ 1:13எஸ்றா 10:19எபி 10:26-29ஓசி 5:15யோசு 7:11 அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்திற்காக ஒரு இளங்காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக பலியிடக் கொண்டுவரவேண்டும். லேவி 4:23லேவி 4:3லேவி 4:28 சபையின் மூப்பர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் தங்களுடைய கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும். லேவி 1:4உபா 21:3-9யாத் 24:1யாத் 24:9லேவி 16:21லேவி 4:4லேவி 8:14லேவி 8:22 அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து, லேவி 4:5-12எபி 9:12-14 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, யெகோவாவுடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுமுறை தெளித்து, லேவி 4:6-7 ஆசரிப்புக்கூடாரத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, லேவி 4:7 அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து, எபி 1:3எபி 9:14லேவி 12:8லேவி 14:18லேவி 4:26லேவி 4:31லேவி 4:35லேவி 4:8-10 பாவநிவாரணபலியின் காளையைச் செய்ததுபோலவே இந்தக் காளையையும் செய்து, இப்படியே ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். எண் 15:25எபி 10:10-12லேவி 12:81 யோவா 1:71 யோவா 2:2தானி 9:24யாத் 32:30கலா 3:13 பின்பு காளையை முகாமிற்கு வெளியே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி. லேவி 16:151 தீமோ 2:5-62 நாளாக 29:21-242 கொரி 5:21எஸ்றா 8:35லேவி 16:21லேவி 4:11-12மத் 20:28 “ஒரு பிரபு தன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால், லேவி 4:2லேவி 4:132 சாமு 21:1-32 சாமு 24:10-17யாத் 18:21லேவி 4:27எண் 16:2எண் 31:13 தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து, லேவி 4:14லேவி 5:4ரோம 8:32இராஜா 22:10-13லேவி 23:19லேவி 4:28லேவி 4:3லேவி 9:3 அந்தக் கடாவின் தலையின்மேல் தன் கையை வைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்வானாக; இது பாவநிவாரணபலி. யாத் 29:38ஏசா 53:6லேவி 1:11லேவி 1:5லேவி 16:15லேவி 3:13லேவி 3:2லேவி 3:8 அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, லேவி 4:18லேவி 4:30லேவி 4:34லேவி 4:7லேவி 9:9எபி 9:22ஏசா 40:21லேவி 16:18 அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் எரித்து, இந்தவிதமாக ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். லேவி 4:20லேவி 3:5எண் 15:28லேவி 4:31லேவி 4:35லேவி 5:10லேவி 4:8-10லேவி 5:13 “சாதாரண மக்களில் ஒருவன் அறியாமையினால் யெகோவாவின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால், லேவி 4:2எண் 15:27லேவி 4:13எண் 15:29எண் 5:6யாத் 12:49எண் 15:16 தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது அவன் தான் செய்த பாவத்திற்காக வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து, லேவி 4:23லேவி 4:3லேவி 4:32கலா 3:28கலா 4:4-5ஆதி 3:15ஏசா 7:14எரே 31:22 பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன். லேவி 4:24லேவி 4:4லேவி 1:4லேவி 4:15எபி 10:4-14லேவி 4:33 அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தை பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, லேவி 4:25லேவி 4:34லேவி 4:7எபி 2:10ஏசா 42:21ரோம 10:4ரோம 8:3-4 சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரித்து, இப்படியே அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். லேவி 4:26ஆதி 8:21லேவி 4:35யாத் 29:18லேவி 1:91 யோவா 4:9-10எஸ்றா 6:10லேவி 1:13 “அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுகுட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து, லேவி 4:281 பேது 2:221 பேது 3:181 பேது 1:18-201 பேது 2:24எபே 5:27யாத் 12:3யாத் 12:5 அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன். லேவி 4:29-31லேவி 4:4 அப்பொழுது ஆசாரியன் அந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தை பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, லேவி 4:25லேவி 4:30லேவி 4:71 பேது 1:18-201 பேது 2:241 பேது 3:182 கொரி 5:21எபி 10:29 சமாதானபலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் எரிக்கவேண்டும்; இந்தவிதமாக அவன் செய்த பாவத்திற்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். லேவி 4:26லேவி 4:20லேவி 4:30-31லேவி 14:18லேவி 6:71 யோவா 1:71 யோவா 2:21 யோவா 4:9-10