ஆசாரிய ஊழியத்தின் துவக்கம்
எட்டாம் நாளிலே மோசே, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் இஸ்ரவேலின் மூப்பர்களையும் அழைத்து, மத் 28:1எசேக் 43:26-27லேவி 14:10லேவி 14:23லேவி 15:14லேவி 15:29லேவி 8:33எண் 6:10 ஆரோனை நோக்கி: “நீ பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடக்கடவாய். லேவி 4:3யாத் 29:1லேவி 8:14லேவி 8:182 கொரி 5:21எபி 10:10-14எபி 7:27லேவி 9:7-8 மேலும் இஸ்ரவேல் மக்களை நோக்கி: யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடும்படி, நீங்கள் பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும், எஸ்றா 6:17லேவி 4:231 பேது 2:24எஸ்றா 10:19வெளி 5:9தீத் 2:141 பேது 3:182 கொரி 5:21 சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த உணவுபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார் என்று சொல்” என்றான். யாத் 29:43லேவி 9:23லேவி 9:6எசேக் 43:21 இராஜா 8:10-12யாத் 16:10யாத் 19:11யாத் 24:16 மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லோரும் சேர்ந்து, யெகோவாவுடைய சந்நிதியில் நின்றார்கள். 1 நாளாக 15:32 நாளாக 5:2-3உபா 31:12யாத் 19:17நெகே 8:1 அப்பொழுது மோசே: “யெகோவா கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; யெகோவாவுடைய மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான். லேவி 9:23யாத் 24:162 நாளாக 5:13-14எசேக் 43:2யாத் 16:10யாத் 40:34-351 இராஜா 8:10-12 மோசே ஆரோனை நோக்கி: “நீ பலிபீடத்தின் அருகில் வந்து, யெகோவா கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, மக்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்” என்றான். எபி 5:3எபி 5:1எபி 9:7லேவி 4:31 சாமு 3:14எபி 7:27-28லேவி 4:16-20லேவி 8:34 அப்பொழுது ஆரோன் பலிபீடத்தின் அருகில் வந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான். லேவி 1:4-5லேவி 4:1-12லேவி 4:29 ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் நனைத்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி, லேவி 4:6-7லேவி 8:15எபி 10:4-19எபி 2:10எபி 9:22-23லேவி 16:18லேவி 4:17-18லேவி 4:25 பாவநிவாரணபலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் எரித்து, ஏசா 53:10ஏசா 57:15ஏசா 66:2லேவி 3:3-5லேவி 3:9-11லேவி 4:34-35லேவி 4:8-12லேவி 8:16-17 மாம்சத்தையும் தோலையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான். லேவி 4:11-12லேவி 8:17லேவி 16:27-28எபி 13:11-12லேவி 4:21 பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான். எபே 5:2எபே 5:25-27லேவி 1:1-17லேவி 8:18-21 சர்வாங்கதகனபலியின் துண்டுகளையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்து, குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் எரித்தான். லேவி 8:21 பின்பு அவன் மக்களின் பலியைக்கொண்டுவந்து, மக்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப் பாவநிவாரணபலியாக்கி, லேவி 4:27-31எபி 2:17எபி 5:3லேவி 9:32 கொரி 5:21ஏசா 53:10எண் 28:1-29தீத் 2:14 சர்வாங்கதகனபலியையும் கொண்டுவந்து, முறைப்படி அதைப் பலியிட்டு, எபி 10:1-22லேவி 1:1-13லேவி 8:18-21லேவி 9:12-14 உணவுபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல் எரித்தான். லேவி 2:1-2யாத் 29:38-42கலா 2:20யோவா 6:53லேவி 3:5லேவி 9:1 பின்பு மக்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, கொலோ 1:20எபே 2:14-17ரோம 5:1லேவி 3:1-17லேவி 7:11-18ரோம 5:10 காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், சிறுநீரகங்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து, லேவி 3:16லேவி 3:5லேவி 3:9லேவி 9:10 கொழுப்பை மார்புப்பகுதிகளின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரித்தான். லேவி 3:14-17லேவி 7:29-34 மார்புப்பகுதிகளையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். லேவி 7:30-341 பேது 4:11யாத் 29:24யாத் 29:26-28ஏசா 49:3லேவி 7:24லேவி 7:26லூக் 2:13 பின்பு ஆரோன் மக்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான். உபா 21:5லூக் 24:50எண் 6:23-271 நாளாக 23:131 இராஜா 8:551 பேது 3:92 நாளாக 6:32 கொரி 13:14 பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்து, வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சகல மக்களுக்கும் காணப்பட்டது. லேவி 9:6லூக் 1:21-22எண் 16:19எண் 16:42எபி 9:24-28எண் 14:10 அன்றியும் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; மக்களெல்லோரும் அதைக் கண்டபோது ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்து யெகோவாவைப் பணிந்துகொண்டனர். 1 இராஜா 18:38-39நியாயாதி 6:211 நாளாக 21:26யாத் 3:2நியாயாதி 13:19-202 நாளாக 7:1-3ஆதி 15:17நியாயாதி 13:23