லேவியராகமம் 1

Leviticus 1
அத்தியாயம் 1

தகனபலி

யெகோவா ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து மோசேயை அழைத்து அவனை நோக்கி: யாத் 19:3யாத் 25:22யாத் 40:34-35யாத் 29:42யாத் 24:1-2யாத் 24:12யாத் 33:7யாத் 39:32 “நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும். லேவி 22:18-19ரோம 12:61 நாளாக 16:29எபே 5:2ஆதி 4:3ஆதி 4:5ரோம 12:1 அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; யெகோவாவுடைய சந்நிதியில், தான் அங்கீகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து, உபா 15:21எபி 9:14லேவி 22:19-24யாத் 12:5எபே 5:27எபி 10:8-10உபா 17:1எபி 7:26 தன் பாவநிவிர்த்திக்கென்று அது அங்கீகரிக்கப்படுவதற்கு தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, 2 நாளாக 29:23-24லேவி 3:2லேவி 3:8யாத் 29:10யாத் 29:15லேவி 4:20லேவி 4:26ரோம 12:1 யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். லேவி 1:11லேவி 3:8லேவி 3:21 பேது 1:22 நாளாக 35:11எபி 12:24லேவி 3:13யாத் 29:16 பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைத் துண்டுதுண்டாக வெட்டவேண்டும். லேவி 7:8ஆதி 3:21 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி, ஆதி 22:9லேவி 6:12-131 நாளாக 21:262 நாளாக 7:1லேவி 9:24மல்கி 1:10நெகே 13:31 அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பார்களாக. லேவி 9:13-141 இராஜா 18:231 இராஜா 18:33யாத் 29:17-18லேவி 1:12லேவி 8:18-21 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. ஆதி 8:21லேவி 1:13எபே 5:22 கொரி 2:15யாத் 29:18எசேக் 20:41லேவி 3:11யாத் 29:25 “அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து, லேவி 1:2-3ஆதி 8:20லேவி 22:19மல்கி 1:14யாத் 12:5ஏசா 53:6-7யோவா 1:29லேவி 4:23 யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். லேவி 1:5யாத் 40:22எசேக் 8:5லேவி 1:7-9லேவி 6:25லேவி 7:2லேவி 9:12-14 பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பானாக. குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. லேவி 1:9 “அவன் யெகோவாவுக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன். லேவி 5:7லூக் 2:24லேவி 12:82 கொரி 8:12ஆதி 15:9எபி 7:26மத் 11:29 அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு, 1 யோவா 2:27ஏசா 53:10ஏசா 53:4-5லேவி 5:8-9மத் 26:1-27சங் 22:1சங் 22:21சங் 69:1-21 அதின் இரைப்பையையும் அதின் உள்ளவைகளையும் எடுத்து, அதைப் பலிபீடத்தின் அருகில் கிழக்குப் பகுதியில் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, 1 பேது 1:2எபி 13:11-14லேவி 16:27லேவி 4:12லூக் 1:35லேவி 6:10-11 பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. ஆதி 15:101 பேது 1:19-211 பேது 3:18எபி 10:6-12எபி 13:15-16யோவா 19:30லேவி 1:13லேவி 1:9-10