சங்கீதங்கள் 69

Psalms 69
சங்கீதம் 69

சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.

தேவனே, என்னைக் காப்பாற்றும்; ஏசா 43:2சங் 69:14-15புலம் 3:54யோனா 2:3-5சங் 42:7சங் 69:2வெளி 12:15-16வெளி 17:15

வெள்ளங்கள் என்னுடைய ஆத்துமாவரை பெருகிவருகிறது.

ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, சங் 40:2மத் 7:25எரே 38:6சங் 32:6சங் 88:6-7எரே 38:22ஆதி 7:17-23மத் 26:37-38

ஆழமான தண்ணீரில் இருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.

நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; சங் 6:6ஏசா 38:14சங் 119:123சங் 119:82உபா 28:32சங் 25:21எபி 5:7யோவா 19:28

என்னுடைய தொண்டை வறண்டுபோனது;

என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது,

என்னுடைய கண்கள் பூத்துப்போனது.

காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்; யோவா 15:25சங் 35:19சங் 109:3-5சங் 35:11-122 கொரி 5:21ஏசா 53:4-7சங் 38:19-20சங் 40:12

வீணாக எனக்கு எதிரிகளாகி என்னை அழிக்கவேண்டும் என்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்;

நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதானது.

தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; சங் 38:9எரே 16:17சங் 17:3சங் 19:12சங் 38:5சங் 44:20-21

என்னுடைய குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, சங் 25:3சங் 35:26லூக் 24:19-21ஏசா 49:23சங் 72:18சங் 7:72 சாமு 23:3அப் 13:23

உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னால் வெட்கப்பட்டுப் போகாமலிருப்பார்களாக;

இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் வெட்கமடையாதிருப்பார்களாக.

உமக்காக நிந்தையைச் சகித்தேன்; ஏசா 50:6எரே 15:15சங் 44:22எபி 12:2ஏசா 53:3யோவா 15:21-24லூக் 23:11லூக் 23:35-37

அவமானம் என்னுடைய முகத்தை மூடினது.

என்னுடைய சகோதரர்களுக்கு வேற்று மனிதனும், என்னுடைய தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். சங் 31:11யோவா 1:11யோவா 7:5மத் 10:35-36மத் 26:70-74மீகா 7:5-6சங் 38:111 சாமு 17:28

உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது; ரோம 15:3யோவா 2:14-17சங் 119:139மாற் 11:15-171 இராஜா 19:10சங் 89:41சங் 89:50-511 நாளாக 29:3

உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; லூக் 7:33-34சங் 102:8-9சங் 109:24-25சங் 35:13

அதுவும் எனக்கு நிந்தையாக முடிந்தது.

சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்; 1 இராஜா 9:7எரே 24:9யோபு 17:6உபா 28:37ஏசா 20:2ஏசா 22:12யோவே 1:8சங் 35:13-14

அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன்.

வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்; அப் 4:26-27சங் 35:15-16மத் 27:41-42தானி 5:2-4தானி 5:23உபா 16:18ஆதி 19:1யோபு 30:8-9

மதுபானம் குடிக்கிறவர்களின் பாடலானேன்.

ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்; 2 கொரி 6:2ஏசா 49:8சங் 55:16-17சங் 91:15ஏசா 55:6சங் 40:10-111 பேது 2:231 சாமு 25:8

தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.

நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்; சங் 144:7எரே 38:6-13சங் 109:21சங் 69:1-2புலம் 3:55லூக் 19:14லூக் 19:27மாற் 14:34-42

என்னைப் பகைக்கிறவர்களிடத்திலிருந்தும் ஆழமான தண்ணீர்களில் இருந்தும் நான் நீங்கும்படி செய்யும்.

வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், வெளி 12:15-16அப் 2:24ஏசா 43:1-2யோனா 2:2-7சங் 16:10அப் 2:31எண் 16:33-34சங் 124:4-5

பாதாளம் என்மேல் தன்னுடைய வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.

யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும், சங் 109:21சங் 25:16சங் 63:3மீகா 7:19சங் 106:45சங் 26:11சங் 69:13சங் 51:1

உம்முடைய தயை நலமாயிருக்கிறது;

உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கண்ணோக்கியருளும்.

உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; சங் 27:9சங் 102:2மத் 27:46சங் 143:9சங் 70:1சங் 13:1சங் 44:24சங் 66:14

நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாகச் செவிகொடுத்தருளும்.

நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைசெய்யும்; சங் 111:9சங் 22:1சங் 22:19சங் 49:15உபா 32:27எரே 14:8யோபு 6:23யோசு 7:9

என்னுடைய எதிரிகளுக்காக என்னை மீட்டுவிடும்.

தேவனே நீர் என்னுடைய நிந்தையையும் எபி 12:2ஏசா 53:31 பேது 2:23சங் 2:2-4சங் 38:9யோவா 8:49சங் 69:7-9சங் 22:6-7

என்னுடைய வெட்கத்தையும் என்னுடைய அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்;

என்னுடைய எதிரிகள் எல்லோரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; ஏசா 63:5யோபு 16:2சங் 142:4மாற் 14:50மத் 26:562 தீமோ 4:16-17யோவா 12:27யோவா 16:32

நான் மிகவும் வேதனைப்படுகிறேன்;

எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன்,

ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன்,

ஒருவனும் இல்லை.

என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், மத் 27:34லூக் 23:36மாற் 15:23மத் 27:48மாற் 15:36யோவா 19:28-30எரே 9:15எரே 8:14

என்னுடைய தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.

அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், 1 தெச 5:3ரோம 11:8-101 பேது 2:8ஏசா 8:14-15நீதி 1:32மல்கி 2:2

அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும்.

அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்; தானி 5:6ரோம 11:10ஏசா 6:9-102 கொரி 3:14அப் 28:26-27ஏசா 21:3-4எரே 30:6உபா 28:65-67

அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடச்செய்யும்.

உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; சங் 79:6ஓசி 5:10வெளி 16:1லூக் 21:221 தெச 2:15-16உபா 28:15-68உபா 29:18-28உபா 31:17

உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.

அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்; அப் 1:20மத் 23:38எரே 7:12-14ஏசா 6:11லூக் 13:351 இராஜா 9:8மத் 24:1-2ஏசா 5:1

அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.

தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, ஏசா 53:4மாற் 15:27-32சகரி 1:15ஏசா 53:101 தெச 2:152 நாளாக 28:9சகரி 13:7யோபு 19:21-22

நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.

அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக. ஏசா 26:10நெகே 4:5ரோம 1:28வெளி 22:10-112 தெச 2:11-122 தீமோ 4:14ரோம 10:2-3யாத் 8:15

ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக; யாத் 32:32-33லூக் 10:20பிலி 4:3எசேக் 13:9வெளி 13:8வெளி 20:12-15எபி 12:23வெளி 22:19

நீதிமான்கள் பெயரோடே அவர்கள் பெயர் எழுதப்படாதிருப்பதாக.

நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; சங் 91:14-16சங் 40:17சங் 109:22சங் 70:52 கொரி 8:9எபே 1:21-22ஏசா 53:2-3பிலி 2:9-11

தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, சங் 28:7சங் 118:28-29சங் 34:3சங் 40:1-3சங் 118:21சங் 50:14

அவரை நன்றி சொல்லி மகிமைப்படுத்துவேன்.

கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, எபி 13:15சங் 50:13-141 பேது 2:5எபே 5:19-20சங் 50:23ஓசி 14:2

இதுவே யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கும்.

சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; யோவா 16:22சங் 22:26ஏசா 55:6-7ஏசா 61:1-3சங் 34:2சங் 25:9யோவா 20:20சங் 22:29

தேவனைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இருதயம் வாழும்.

யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், அப் 5:18-19சங் 68:6சகரி 9:11-12வெளி 2:10லூக் 4:18சங் 146:7எபே 3:1சங் 12:5

கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணிக்கமாட்டார்.

வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும். ஏசா 49:13சங் 150:6சங் 96:11ஏசா 55:12ஏசா 44:22-23சங் 148:1-14சங் 98:7-8வெளி 7:11-13

தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; ஏசா 44:26ஏசா 46:13சங் 51:18ஒபதி 1:17சங் 102:16சங் 48:11-13எசேக் 36:35-36வெளி 14:1

அப்பொழுது அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்; சங் 102:28அப் 2:39யாக் 1:12சங் 37:29ஏசா 61:9யோவா 14:23யாக் 2:5சங் 91:14

அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அதில் குடியிருப்பார்கள்.