நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.
தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே, சங் 40:13-17சங் 143:7சங் 71:12சங் 69:18சங் 38:12 சாமு 17:1-21
எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக; சங் 35:4சங் 35:26ஏசா 41:11யோவா 18:6சங் 109:29சங் 71:13சங் 6:10ஏசா 28:13
எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி வெட்கம் அடைவார்களாக.
ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக. சங் 40:15நீதி 24:17-18அப் 1:18எசேக் 25:3எசேக் 26:2சங் 35:21சங் 35:25எசேக் 36:2
உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; சங் 40:16புலம் 3:25ஏசா 61:10ஏசா 65:13-14சங் 35:27சங் 97:12யோவா 16:20சங் 5:11
உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று
எப்பொழுதும் சொல்வார்களாக.
நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்; சங் 40:17சங் 141:1வெளி 22:20சங் 69:29எபி 10:37சங் 13:1-2சங் 109:22
தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்:
நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், யெகோவாவே, தாமதிக்காமலிரும்.