நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல்.
யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; ஏசா 54:8எபி 12:5-11சங் 6:1எரே 30:11சங் 70:1எரே 10:24ஆப 3:2ஏசா 27:8
உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; யோபு 6:4சங் 32:41 சாமு 5:6உபா 2:15புலம் 3:121 சாமு 5:111 சாமு 6:9சங் 21:12
உமது கை என்னைத் தாங்குகிறது.
உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; சங் 6:2சங் 51:8சங் 31:9-10ஏசா 1:5-6புலம் 3:40-422 நாளாக 26:19யோபு 2:7-8யோபு 33:19-22
என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.
என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, சங் 40:12எஸ்றா 9:6மத் 11:28புலம் 1:141 பேது 2:24ஏசா 53:11லேவி 7:18
அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.
என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. ஏசா 1:5-6எரே 8:22சங் 69:5சங் 32:3சங் 38:7
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். யோபு 30:28சங் 35:14சங் 42:9சங் 145:14சங் 31:10சங் 42:5சங் 43:2சங் 57:6
என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; 2 நாளாக 21:18-19சங் 102:3அப் 12:23யோபு 30:18யோபு 7:5சங் 41:8
என் உடலில் ஆரோக்கியம் இல்லை.
நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; யோபு 3:24சங் 32:3யோபு 30:28ஏசா 59:11சங் 22:1-2
என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; சங் 10:172 கொரி 5:2சங் 6:6ரோம 8:26-27யோவா 1:48சங் 102:5ரோம 8:22-23சங் 102:20
என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.
என் உள்ளம் குழம்பி அலைகிறது; சங் 6:7சங் 88:9சங் 69:3புலம் 5:16-17சங் 119:1231 சாமு 14:27-29ஏசா 21:4புலம் 2:11
என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.
என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; லூக் 23:49சங் 31:11யோபு 19:13-17யோவா 16:32லூக் 10:31-32லூக் 22:54சங் 88:18யோபு 6:21-23
என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; 2 சாமு 17:1-3சங் 35:20சங் 140:5சங் 54:32 சாமு 16:7-8லூக் 20:19-22சங் 119:110சங் 141:9
எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி,
நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஏசா 53:7சங் 39:91 பேது 2:23சங் 39:22 சாமு 16:10-12
ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன். ஆமோ 5:13யோவா 8:6மாற் 15:3-5மீகா 7:5
யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; சங் 39:7சங் 17:6சங் 138:3சங் 123:1-3
என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.
அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; உபா 32:35சங் 94:18சங் 13:3-4சங் 35:24-26
என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.
நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; சங் 35:15சங் 6:6ஏசா 53:3-5மீகா 4:6-7சங் 38:6சங் 77:2-3
என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, நீதி 28:13சங் 32:5யோபு 33:27சங் 51:32 கொரி 7:7-11யோபு 31:33
என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.
என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; யோவா 15:18-25சங் 35:19மத் 10:22சங் 69:4அப் 4:25-28சங் 18:17சங் 25:19சங் 3:1
காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், சங் 35:121 யோவா 3:12எரே 18:201 பேது 4:14-16யோவா 10:321 சாமு 25:21சங் 109:3-51 பேது 3:13
நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; சங் 22:19சங் 22:24சங் 22:11சங் 35:21-22சங் 22:1
என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.
என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, சங் 40:13சங் 27:1ஏசா 12:2சங் 141:1சங் 71:12சங் 40:17சங் 62:6சங் 70:1
எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.