ஓசியா 5

Hosea 5
அத்தியாயம் 5

இஸ்ரவேலுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு

ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள். ஓசி 9:8ஆப 1:15-17ஓசி 6:9மீகா 3:9மீகா 7:21 இராஜா 21:18-222 நாளாக 21:12-15ஆமோ 7:9 நெறிதவறினவர்கள் அதிகமாக வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லோரையும் நான் தண்டிப்பேன். ஓசி 9:15ஏசா 29:15ஓசி 6:9அப் 23:12-15ஆமோ 4:6-12ஓசி 4:2ஓசி 6:5ஏசா 1:5 எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ வழிவிலகிப்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே. ஆமோ 3:2எபி 4:131 இராஜா 12:26-331 இராஜா 14:14-16ஆமோ 5:12உபா 33:17எசேக் 23:5-21ஆதி 48:19-20 அவர்கள் தங்கள் தேவனிடத்திற்குத் திரும்புவதற்குத் தங்கள் செயல்களை சரிசெய்யமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; யெகோவாவை அறியார்கள். ஓசி 4:121 யோவா 2:3-42 தெச 2:11-12ஓசி 4:1ஓசி 4:6எரே 22:15-16எரே 24:7எரே 50:38 இஸ்ரவேலின் அகந்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறி விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறி விழுவான். ஓசி 7:10ஆமோ 5:2எசேக் 23:31-35லூக் 19:22நீதி 24:162இராஜா 17:19-20ஆமோ 2:4-5ஓசி 14:1 அவர்கள் யெகோவாவை தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார். யோவா 7:34நீதி 1:28மீகா 6:6-7எசேக் 8:6ஏசா 1:11-15எரே 7:4புலம் 3:44நீதி 15:8 யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்திற்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே அழிக்கப்படுவார்கள். ஓசி 6:7எசேக் 12:28ஓசி 2:4ஏசா 48:8எரே 3:20சங் 144:11சங் 144:7ஓசி 2:11 கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள். ஓசி 4:15ஓசி 9:9யோவே 2:11 சாமு 15:34எரே 4:5ஓசி 8:1ஏசா 10:29நியாயாதி 5:14 தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாக வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன். ஓசி 9:11-17ஏசா 46:10சகரி 1:6ஏசா 28:1-4யோவா 16:4ஆமோ 3:14-15ஆமோ 3:7ஆமோ 7:17 யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் கடுங்கோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன். உபா 19:14சங் 32:6சங் 93:3-4உபா 27:172 நாளாக 28:16-222இராஜா 16:7-9எசேக் 7:8லூக் 6:49 எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்கி, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான். மீகா 6:16உபா 28:331 இராஜா 12:26-332இராஜா 15:16-202இராஜா 15:29ஆமோ 5:11-12 நான் எப்பிராயீமுக்குப் பூச்சி அரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டிற்கு உளுப்பைப்போலவும் இருப்பேன். ஏசா 51:8யோபு 13:28யோனா 4:7ஏசா 50:9மாற் 9:43-48நீதி 12:4 எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனிடம் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் முடியாமற்போனது. ஓசி 7:11எரே 30:122இராஜா 15:19ஓசி 10:6ஓசி 12:1ஓசி 8:9எரே 30:14-152 நாளாக 28:16-18 நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே காயப்படுத்திவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன். மீகா 5:8சங் 7:2ஓசி 13:7-8சங் 50:22ஆமோ 2:14ஆமோ 3:4-8ஏசா 5:29யோபு 10:16 அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடும்வரை நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாகத் தேடுவார்கள். ஏசா 26:16எரே 29:12-14உபா 4:29-31சங் 78:34லேவி 26:40-42சங் 50:15எரே 3:13எசேக் 36:31