மத்தேயு 7

Matthew 7
அத்தியாயம் 7

மற்றவர்களை நியாயந்தீர்த்தல்

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள். லூக் 6:37ரோம 2:1-2யாக் 4:11-12லூக் 6:41ரோம 14:10-13மத் 7:51 கொரி 4:3-5ரோம 14:3-4 ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். யாக் 2:13மாற் 4:24லூக் 6:38ஒபதி 1:15சங் 18:25-26வெளி 18:62 கொரி 9:62 தெச 1:6-7 நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன? யோவா 8:7-9கலா 6:1லூக் 6:41-422 சாமு 12:5-6லூக் 18:11சங் 50:16-212 நாளாக 28:9-10 இதோ, உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து: நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும். லூக் 6:42சங் 51:9-13மத் 23:13-28லூக் 13:15லூக் 4:23மத் 22:18லூக் 12:56அப் 19:15 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். நீதி 9:7-8நீதி 23:9மத் 10:14-15நீதி 26:11மத் 15:26அப் 13:45-47பிலி 3:2எபி 10:29

கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; மத் 21:221 யோவா 3:22யோவா 15:7மாற் 11:24சங் 145:18-19எரே 33:3மத் 6:33எரே 29:12-13 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். சங் 81:10சங் 81:16லூக் 23:42-43மத் 15:22-28அப் 9:112 நாளாக 33:19யோவா 3:8-10யோவா 2:2 உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? லூக் 11:11-13 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? லூக் 11:11-13யாக் 1:17ரோம 8:32சங் 84:11ஏசா 49:15யோவா 3:16சங் 86:15எபே 2:1-5 ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். லூக் 6:31ரோம 13:8-10கலா 5:13-14லேவி 19:18மாற் 12:29-34மத் 22:39-40மீகா 6:8சகரி 8:16-17

குறுகின மற்றும் விசாலமான வாசல்கள்

குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர். லூக் 13:24-25நீதி 16:25யோவா 14:6யோவா 10:9ஏசா 55:7நீதி 9:6கலா 5:24எசேக் 18:27-32 ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். லூக் 13:23-30மத் 22:14மத் 16:24-25ரோம 12:2ஏசா 35:8மாற் 8:34நீதி 8:20அப் 14:22

மரங்களும் அதின் கனிகளும்

கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள். 1 யோவா 4:12 பேது 2:1-3மத் 24:11அப் 20:29-31மாற் 13:22-23உபா 13:1-3கொலோ 2:82 கொரி 11:13-15 அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? லூக் 6:43-45யாக் 3:12மத் 12:33மத் 7:202 பேது 2:10-18யூதா 1:10-19 அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். மத் 12:33-35கலா 5:22-24எபே 5:9சங் 1:3கொலோ 1:10சங் 92:13-14எரே 17:8லூக் 13:6-9 நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது. கலா 5:171 யோவா 3:9-10 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, நெருப்பிலே போடப்படும். மத் 3:10எபி 6:8யோவா 15:2-6லூக் 3:9யூதா 1:12லூக் 13:6-9ஏசா 27:11ஏசா 5:5-7 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். மத் 7:16அப் 5:38 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. ரோம 2:13லூக் 6:46யாக் 1:22லூக் 11:28தீத் 1:16எபி 4:6மத் 25:11-12யோவா 6:40 அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். லூக் 13:25-271 கொரி 13:1-2மல்கி 3:17-18அப் 19:13-15எபி 6:4-62 தீமோ 1:122 தீமோ 4:8யோவா 11:51 அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத் 25:41சங் 6:8லூக் 13:25லூக் 13:27மத் 25:12யோவா 10:14யோவா 10:27-30வெளி 22:15

இருவகை அஸ்திபாரங்கள்

ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன். லூக் 6:47-49யோவா 13:17லூக் 11:281 கொரி 3:10-11யாக் 2:17-261 யோவா 2:3சங் 111:101 யோவா 3:22-24 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. யாக் 1:12சங் 125:1-21 பேது 1:7கொலோ 2:71 பேது 1:51 கொரி 3:13-15அப் 14:22சங் 92:13-15 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான். எரே 8:9லூக் 6:49யாக் 2:20நீதி 14:11 சாமு 2:30 பெருமழை பெய்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். 1 கொரி 3:13மத் 13:19-222 பேது 2:20-22எபி 10:26-31மத் 12:43-45எசேக் 13:10-16 இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது, அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால், லூக் 4:32மாற் 1:22யோவா 7:46மாற் 6:2லூக் 4:22யோவா 7:15மத் 13:53-54மத் 22:33 மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். எபி 4:12-13ஏசா 50:4லூக் 20:8உபா 18:18-19லூக் 20:46-47அப் 3:22-23அப் 6:10பிரச 8:4