யாத்திராகமம் 19

Exodus 19
அத்தியாயம் 19

சீனாய் மலை அனுபவங்கள்

இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள். யாத் 12:6யாத் 16:1யாத் 12:2லேவி 23:16-18எண் 33:15 அவர்கள் ரெவிதீமிலிருந்து பயணம் புறப்பட்டு, சீனாய் வனாந்திரத்திற்கு வந்து, அந்த வனாந்திரத்தில் முகாமிட்டார்கள்; இஸ்ரவேலர்கள் அங்கே மலைக்கு எதிராக முகாமிட்டார்கள். யாத் 17:1யாத் 3:1யாத் 3:12யாத் 17:8யாத் 18:5அப் 7:30அப் 7:38கலா 4:24 மோசே தேவனிடம் ஏறிப்போனான்; யெகோவா மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: “நீ யாக்கோபு வம்சத்தார்களுக்குச் சொல்லவும், இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால், யாத் 3:4அப் 7:38உபா 5:5-31யாத் 20:21யாத் 24:15-18யாத் 34:2 நான் எகிப்தியர்களுக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய இறக்கைகளின்மேல் சுமந்து, உங்களை என் அருகிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். உபா 32:11-12ஏசா 63:9ஏசா 40:31உபா 29:2வெளி 12:14உபா 4:33-36உபா 4:9யாத் 7:1-14 இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. உபா 14:2உபா 7:6உபா 26:18மல்கி 3:17யாத் 15:26உபா 10:14சங் 135:4உபா 4:20 நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்ஜியமும் பரிசுத்த தேசமுமாக இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டிய வார்த்தைகள்” என்றார். வெளி 5:101 பேது 2:91 பேது 2:5உபா 7:6வெளி 1:6உபா 28:9ஏசா 62:12உபா 26:19 மோசே வந்து மக்களின் மூப்பர்களை அழைத்து, யெகோவா தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான். யாத் 4:29-301 கொரி 15:1யாத் 3:16 அதற்கு மக்கள் எல்லோரும் ஒன்றாக, “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று மறுமொழி சொன்னார்கள். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவிடம் தெரிவித்தான். யாத் 24:7யாத் 24:3யோசு 24:24உபா 5:27-29யாத் 20:19நெகே 10:29உபா 26:17-19 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உன்னோடு பேசும்போது மக்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவுக்குச் சொன்னான். உபா 4:36யாத் 19:16யாத் 24:15-16உபா 4:11-12யாத் 14:31யாத் 20:21மத் 17:5சங் 97:2 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து, எபி 10:22ஆதி 35:2லேவி 11:44-45லேவி 11:251 கொரி 6:11லேவி 15:5எண் 8:21யோசு 3:5 மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்; மூன்றாம் நாளில் யெகோவா எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக சீனாய் மலையின்மேல் இறங்குவார். யாத் 19:16உபா 33:2யாத் 34:5யோவா 3:13யாத் 19:18யாத் 19:20யாத் 3:8ஆப 3:3-6 மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான். எபி 12:20-21யோசு 3:4உபா 2:4உபா 4:9யாத் 10:28யாத் 19:21யாத் 19:23யாத் 34:12 ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியப்பட்டு, அல்லது வில் எய்யப்பட்டுச் சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடு வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாகத் தொனிக்கும்போது, அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும்” என்றார். 1 தெச 4:16யாத் 19:16எபி 12:201 கொரி 15:52யாத் 19:19யாத் 21:28-29லேவி 20:15-16 மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள். யாத் 19:10 அவன் மக்களை நோக்கி: “மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியிடம் சேராமல் இருங்கள்” என்றான். 1 கொரி 7:51 சாமு 21:4-5யாத் 19:11யோவே 2:162 பேது 3:11-12ஆமோ 4:12யாத் 19:16மல்கி 3:2 மூன்றாம் நாள் அதிகாலையில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள். எபி 12:18-19சங் 18:11-14எபி 12:21வெளி 4:1சங் 77:18வெளி 11:19வெளி 4:5வெளி 8:5 அப்பொழுது மக்கள் தேவனுக்கு எதிராகபோக, மோசே அவர்களை முகாமிலிருந்து புறப்படச்செய்தான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். உபா 4:10உபா 5:5 யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது 1. நியாயாதி 5:5யாத் 3:2சங் 144:5வெளி 15:8ஆதி 19:28எரே 4:24சங் 68:7-8உபா 33:2 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். சங் 81:7யாத் 19:16நெகே 9:13யாத் 19:13எபி 12:21 யெகோவா சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, யெகோவா மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான். நெகே 9:13யாத் 19:11யாத் 19:3யாத் 24:12-13யாத் 24:18யாத் 34:2யாத் 34:4சங் 81:7 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “மக்கள் பார்ப்பதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடம் வராதபடியும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடியும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி. 1 சாமு 6:19யாத் 3:5எபி 12:28-29பிரச 5:1யாத் 19:12-13யாத் 3:3யாத் 33:20 யெகோவாவின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்” என்றார். யாத் 24:51 நாளாக 13:9-111 நாளாக 15:131 கொரி 11:30-322 நாளாக 30:152 நாளாக 30:18-192 நாளாக 30:32 சாமு 6:6-8 அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், மக்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள்” என்றான். யாத் 19:12யோசு 3:4-5 யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், மக்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, எல்லையைக் கடந்து யெகோவாவிடம் வராமல் இருக்கவேண்டும்” என்றார். எபி 4:16எபி 12:18-25எபி 12:292 கொரி 3:7-9யாத் 19:12யாத் 19:21-22யாத் 24:1யாத் 24:9 அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.