ஆபகூக் 3

Habakkuk 3
அத்தியாயம் 3

தீர்க்கதரிசியின் விண்ணப்பம்

ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம். சங் 7:1-17சங் 86:1-17சங் 90:1-17

யெகோவாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், சங் 85:6சங் 90:13-17ஓசி 6:2-3ஏசா 51:9-11புலம் 3:32ஆப 3:16ஏசா 54:8ஏசா 63:15

எனக்குப் பயமுண்டானது;

யெகோவாவே, வருடங்களின் நடுவிலே உம்முடைய செயலை உயிர்ப்பியும்,

வருடங்களின் நடுவிலே அதை விளங்கச்செய்யும்;

கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.

தேவன் தேமானிலிருந்தும், உபா 33:2ஆமோ 1:12ஒபதி 1:9சங் 4:4ஏசா 6:3எரே 49:7சங் 68:17வெளி 5:13-14

பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் வந்தார்; (சேலா.)

அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது;

அவர் துதியினால் பூமி நிறைந்தது.

அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; மத் 17:2ஏசா 60:19-20யாத் 14:20யோபு 26:14வெளி 22:51 தீமோ 6:16சங் 104:2யாத் 13:21

அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின;

அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.

அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; யாத் 12:29-30நாகூ 1:2-3எண் 16:46-49உபா 32:24எண் 14:12சங் 18:7-13சங் 78:50-51

அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.

அவர் நின்று பூமியை அளந்தார் 1; ஆதி 49:26நாகூ 1:5உபா 33:15ஏசா 51:6ஏசா 64:1-3யோசு 11:18-23மீகா 5:8சகரி 14:4-5

அவர் பார்த்து அந்நிய மக்களைக் கரையச்செய்தார்;

முந்தின மலைகள் சிதறடிக்கப்பட்டது,

என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது;

அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.

கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; யாத் 15:14-16ஆதி 10:6-7ஆதி 25:1-4நியாயாதி 7:24-25யோசு 2:10யோசு 9:24எண் 22:3-4எண் 31:2-12

மீதியான் தேசத்தின் கூடாரங்கள் நடுங்கின.

யெகோவா நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? சங் 68:17உபா 33:26-27யாத் 14:21-22ஏசா 50:2சங் 114:3சங் 114:5சங் 18:10ஆப 3:15

தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் காப்பாற்றுகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது,

உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ?

கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.) சங் 7:12-13சங் 105:41சங் 78:15-16லூக் 1:72-751 கொரி 10:4உபா 32:23யாத் 17:6எபி 6:13-18

நீரே பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர்.

மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின; ஏசா 43:20எரே 4:24யோசு 4:23-24சங் 93:3சங் 98:7-8எபி 11:29யோசு 4:18யாத் 19:16-18

தண்ணீர் திரண்டு கடந்துபோனது;

கடல் இரைந்தது, அதின் அலைகளை 2உயர எழுந்தது.

சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; சங் 144:5-6யோசு 10:11-13சங் 18:12-14ஏசா 28:21ஏசா 38:8சங் 19:4சங் 77:17-18

உமது அம்புகளின் வெளிச்சத்திலும்,

உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.

நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர், எரே 51:33மீகா 4:12-13அப் 13:19ஆமோ 1:3ஏசா 41:15யோசு 6:1-12நெகே 9:22-24எண் 21:23-35

உக்கிரத்துடன் மக்களைப் போரடித்தீர்.

உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் சங் 110:6சங் 105:15யாத் 14:13-14யாத் 15:1-2யோசு 10:11யோசு 10:24யோசு 10:42யோசு 11:12

நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்;

கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி,

தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா)

என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சகரி 9:14தானி 11:40சங் 118:10-12யாத் 1:10-16யாத் 1:22யாத் 11:4-7யாத் 12:12-13யாத் 12:29-30

சிறுமையானவனை மறைவிடத்திலே அழிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது;

நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய சேனைகளின் அதிபதிகளை 3 உருவக் குத்தினீர்.

திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர். சங் 77:19ஆப 3:8யாத் 15:8

நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; எரே 23:9தானி 10:8ஆப 1:5-11ஆப 3:22 தெச 1:6-9எரே 25:9-11எரே 45:3-5சங் 119:120

அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது;

என் நிலையிலே நடுங்கினேன்;

ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது,

இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.

விசுவாசப் பாடல்

அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், எரே 5:17யோவே 1:16-18ஆமோ 4:6-10உபா 28:15-18உபா 28:30-41ஆகா 2:16-17எரே 14:2-8யோவே 1:10-13

திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும்,

ஒலிவமரத்தின் பலன் இல்லாமல் போனாலும்,

வயல்கள் தானியத்தை விளைவிக்காமற்போனாலும்,

கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும்,

தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும்,

நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், யோபு 13:15மீகா 7:7பிலி 4:4ஏசா 61:10ஏசா 12:2ரோம 5:2-3சங் 25:5சங் 46:1-5

என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.

ஆண்டவராகிய யெகோவா என் பெலன்; 2 சாமு 22:34சங் 18:33பிலி 4:13சங் 46:1உபா 32:13சங் 27:12 கொரி 12:9-10ஏசா 58:14

அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி,

உயரமான இடங்களில் என்னை நடக்கச்செய்வார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டப் பாடல்.