பாருக் என்பவனுக்குச் செய்தி
யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் நான்காம் வருடத்தில் நேரியாவின் மகனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புத்தகத்தில் எழுதும்போது, எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி, எரே 36:1எரே 32:12எரே 36:4எரே 36:322 நாளாக 36:5எரே 25:1எரே 32:16எரே 36:26 பாருக்கே, உன்னைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், 2 கொரி 1:42 கொரி 7:6எபி 2:18எபி 4:15ஏசா 63:9மாற் 16:7 நீ: இப்பொழுது எனக்கு ஐயோ, யெகோவா என் வியாதியை சஞ்சலத்தால் பெருகச்செய்தார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார். 2 கொரி 4:12 கொரி 4:16கலா 6:92 தெச 3:13ஆதி 37:34-35ஆதி 42:36-38எபி 12:3-5எரே 15:10-21 இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழு தேசத்திற்கும் இப்படியே நடக்கும். எரே 1:10எரே 18:7-10எரே 31:28ஆதி 6:6-7ஏசா 5:2-7எரே 11:17சங் 80:8-16 நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான அனைவர்மேலும் தீங்கை வரச்செய்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் எல்லா இடங்களிலும் உன் உயிரை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று அவனுடன் சொல் என்றார். எரே 39:181 தீமோ 6:6-9எபி 13:5எரே 21:9மத் 6:25-32ரோம 12:16எரே 25:26ஆதி 6:12