பூமியில் இராட்சதர்கள்
மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது: ஆதி 1:28 தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். சங் 82:6-71 யோவா 2:16ரோம 9:7-82 பேது 2:142 சாமு 11:2உபா 7:3-4நெகே 13:24-27எஸ்றா 9:1-2 அப்பொழுது யெகோவா: “என் ஆவி 1என்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார். நெகே 9:30ஏசா 63:101 பேது 3:18-20எரே 11:11சங் 78:39கலா 5:16-24அப் 7:51எண் 11:17 அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள். எண் 13:331 சாமு 17:42 சாமு 21:15-22உபா 3:11உபா 2:20-21எண் 16:2ஆதி 11:4 மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு, மத் 15:19ரோம 1:28-31மாற் 7:21-23எரே 4:14எரே 17:9எபே 2:1-3பிரச 9:3பிரச 7:29 தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது. ஏசா 63:101 சாமு 15:11எபே 4:301 சாமு 15:29எபி 3:102 சாமு 24:16யோனா 3:10எண் 23:19 அப்பொழுது யெகோவா: “நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். செப்ப 1:3சங் 37:20ரோம 3:20-22எரே 12:3-4நீதி 10:27நீதி 16:4சங் 24:1-2ஓசி 4:3 நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதி 19:19எபி 4:16சங் 84:11லூக் 1:30சங் 145:201 கொரி 15:10அப் 7:46யாத் 33:12-17
நோவாவின் வம்சவரலாறு
நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான். எபி 11:7லூக் 1:6கலா 3:112 பேது 2:5ஆதி 5:24ஆதி 7:1எசேக் 14:14ஆதி 17:1 நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான். ஆதி 5:32 பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாக இருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. எசேக் 8:17ஓசி 4:1-2ஆப 2:8ரோம 2:13ரோம 3:19எசேக் 28:16ஏசா 60:18ஆப 1:2 தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். சங் 53:2-3நீதி 15:3சங் 14:1-32 பேது 2:5யோபு 22:15-171 பேது 3:19-20ஆதி 6:4-5ஆதி 6:8
நோவாவின் கப்பல்
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: ““மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடு சேர்த்து அழித்துப்போடுவேன். ஓசி 4:1-21 பேது 4:7எசேக் 7:2-6ஆதி 6:11-122 பேது 3:10-122 பேது 3:6-7ஆமோ 8:2ஆதி 6:4 நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு. 1 பேது 3:20லூக் 17:27மத் 24:38யாத் 2:3 நீ அதைச் செய்யவேண்டிய முறை என்னவென்றால், கப்பலின் நீளம் 450 அடிகள், அதின் அகலம் 75 அடிகள், அதின் உயரம் 45 அடிகளாக இருக்கவேண்டும். உபா 3:11ஆதி 7:20 நீ கப்பலுக்கு ஒரு ஜன்னலை உண்டாக்கி, மேல் அடுக்குக்கு ஒரு முழம் இறக்கி அதைச் செய்துமுடித்து, கப்பலின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் அடுக்கின் அறைகளையும், மூன்றாம் அடுக்கின் அறைகளையும் உண்டாக்கவேண்டும். எசேக் 41:16ஆதி 7:16ஆதி 8:62இராஜா 9:302 சாமு 6:16எசேக் 42:3லூக் 13:25 வானத்தின்கீழே உயிருள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நான் பூமியின்மேல் மாபெரும் வெள்ளப்பெருக்கை வரச்செய்வேன்; பூமியிலுள்ள அனைத்தும் இறந்துபோகும். 2 பேது 2:5ஆதி 7:4ஆதி 7:21-231 பேது 3:20எபி 11:7சங் 107:34ஆமோ 9:6சங் 29:10 ஆனாலும் உன்னோடு என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடுகூட உன்னுடைய மகன்களும், உன்னுடைய மனைவியும், உன்னுடைய மகன்களின் மனைவிகளும், கப்பலுக்குள் செல்லுங்கள். எபி 11:7ஆதி 7:7ஆதி 17:7ஆதி 7:13ஏசா 26:201 பேது 3:202 பேது 2:5ஆதி 7:1 அனைத்துவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு, கப்பலுக்குள்ளே சேர்த்துக்கொள். ஆதி 7:15-16ஆதி 7:8-9ஆதி 7:2-3ஆதி 8:17சங் 36:6 வகைவகையான பறவைகளிலும், வகைவகையான மிருகங்களிலும், பூமியிலுள்ள அனைத்து வகைவகையான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உயிரோடு காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரவேண்டும். அப் 10:11-12ஆதி 2:19ஆதி 1:20-24ஆதி 7:8-16யோவா 5:40ஆதி 1:28 உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகப் பலவித உணவுப்பொருட்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள்” என்றார். ஆதி 1:29-30சங் 136:25சங் 145:16யோபு 38:41யோபு 40:20மத் 6:26சங் 104:27-28சங் 147:9 நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். யாத் 40:16யோவா 15:14யோவா 2:5ஆதி 7:5மத் 7:24-27எபி 11:7-8உபா 12:32ஆதி 7:16