எரேமியா ஒரு நிலத்தை வாங்குதல்
நேபுகாத்நேச்சாரின் அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்தில் சரியாக யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருடத்தில், யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: 2இராஜா 25:1-2எரே 39:1-2எரே 25:12 நாளாக 36:11எரே 52:4-5 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றுகை போட்டிருந்தது; எரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரண்மனையிலுள்ள காவல் நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருந்தான். எரே 37:21நெகே 3:25எரே 33:1எரே 38:6எரே 32:8எரே 36:5எரே 39:13-15மத் 5:12 ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப் பிடிப்பான் என்று யெகோவா சொல்லுகிறாரென்றும், எரே 34:2-3எரே 21:4-7எரே 26:8-9எரே 32:28-292 நாளாக 28:222இராஜா 6:31-32அப் 6:12-14ஆமோ 7:13 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயுடன் பேசும், அவன் கண்கள் இவன் கண்களைக் காணும். 2இராஜா 25:4-7எரே 37:17எரே 38:18எரே 38:23எரே 39:4-7எசேக் 12:12-13எரே 52:8-11எசேக் 17:13-21 அவன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனைச் சந்திக்கும்வரை அங்கே அவன் இருப்பான்; நீங்கள் கல்தேயருடன் போர்செய்தாலும் உங்களுக்கு வாய்ப்பதில்லை என்று யெகோவா சொல்லுகிறாரென்றும், நீ தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அங்கே அவனை அடைத்து வைத்தான். எசேக் 17:15எசேக் 17:9-10எரே 21:4-5எரே 27:22எரே 33:5எரே 39:72 நாளாக 13:122 நாளாக 24:20 அதற்கு எரேமியா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் மகன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் உனக்கு உண்டு என்று சொல்வான் என்று சொன்னார். எரே 1:1எரே 11:21லேவி 25:251 இராஜா 14:5லேவி 25:23லேவி 25:34லேவி 25:49மாற் 11:2-6 அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், யெகோவாவுடைய வார்த்தையின்படி காவல் நிலையத்தின் முற்றத்தில் என்னிடத்திற்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சொத்துரிமை உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்குரியது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது யெகோவாவுடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன். எரே 32:7எரே 32:21 இராஜா 22:251 சாமு 10:3-71 சாமு 9:16-17எரே 33:11 நாளாக 6:601 இராஜா 2:26 ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கல் வெள்ளியை 1 அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன். 1 இராஜா 20:39எஸ்த 3:9சகரி 11:12-13ஆதி 23:15-16ஆதி 37:28ஓசி 3:2ஏசா 55:2 நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசில் நிறுத்துக்கொடுத்தபின்பு, எரே 32:44எரே 32:12உபா 32:34ஏசா 44:5எரே 32:25யோபு 14:172 கொரி 1:22தானி 8:26 நான் சட்டத்திற்கும் வழக்கத்திற்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து, லூக் 2:271 கொரி 11:16அப் 26:3 என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவல் நிலையத்தின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் மகனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்து, எரே 32:16எரே 51:59எரே 36:26எரே 36:4-52 கொரி 8:21எரே 36:16-19எரே 36:32எரே 43:3-6 அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாருக்கை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேக நாட்கள் இருக்கும் விதத்தில் அவைகளை ஒரு மண்பாண்டத்தில் வை. ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத்தோட்டங்களும் வாங்கப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றேன். ஆமோ 9:14-15சகரி 3:10எரே 30:18எரே 31:12எரே 31:24எரே 31:5எரே 32:37எரே 32:43-44 நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் மகனாகிய பாருக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் யெகோவாவை நோக்கி செய்த விண்ணப்பமாவது: ஆதி 32:9-12எரே 12:1பிலி 4:6-72 சாமு 7:18-25எசேக் 36:35-37 ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய கரத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மால் செய்யமுடியாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. லூக் 1:37எரே 32:27ஆதி 18:14யோபு 42:2மத் 19:26யாத் 20:11ஆதி 1:1-31எரே 27:5 ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்சந்ததியாரின் பிள்ளைகளின் மடியில் சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே, எரே 10:16உபா 5:9-10யாத் 34:7உபா 7:9-10யாத் 20:5-6ஏசா 10:211 இராஜா 14:9-101 இராஜா 16:1-3 யோசனையில் பெரியவரும், செயலில் வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்கு ஏற்றவிதமாகவும், அவனவனுடைய செயல்களின் பலனுக்கு ஏற்றவிதமாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன. எரே 17:10மத் 16:27ஏசா 28:29சங் 62:12எரே 16:17யோபு 34:21வெளி 2:23வெளி 22:12 இஸ்ரவேலிலும் மற்ற மனிதருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் காணப்படுகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்தில் செய்து, இந்நாளில் நிற்கும் புகழ்ச்சியை உமக்கு உண்டாக்கி, நெகே 9:102 சாமு 7:23அப் 7:36தானி 9:15யாத் 10:2யாத் 9:16சங் 135:91 நாளாக 17:21 இஸ்ரவேலாகிய உமது மக்களை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும் ஓங்கிய கரத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, உபா 26:8யாத் 6:61 நாளாக 17:211 இராஜா 8:42உபா 4:34யாத் 13:14யாத் 13:9யாத் 6:1 அவர்களுடைய முற்பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்த பாலும் தேனும் ஓடிய தேசமாயிருக்கிற இந்த தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர். யாத் 13:5யாத் 3:8எரே 11:5உபா 1:8யாத் 3:17சங் 105:9-11உபா 1:35உபா 26:9-11 அவர்கள் அதற்குள் நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் உமது சத்தத்தைக் கேட்காமலும், உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடச்செய்தீர். எஸ்றா 9:7தானி 9:10-14சங் 78:54-55புலம் 1:18சங் 44:2-3தானி 9:4-6உபா 28:15-68எசேக் 20:18 இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளை நோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் போர்செய்கிற கல்தேயரின் கையில் கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர். உபா 4:26எரே 32:36எரே 33:4யோசு 23:15-16எசேக் 14:21எசேக் 21:22எரே 21:4-7எரே 32:3 கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையில் கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன். எரே 32:24யோவா 13:7சங் 77:19சங் 97:2ரோம 11:33-34 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய யெகோவா; என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? மத் 19:26எரே 32:17ஏசா 64:8யோவா 17:2சங் 65:2எண் 27:16ரோம 3:29-30லூக் 3:6 ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 32:3எரே 19:7-12எரே 32:24எரே 32:362 நாளாக 36:17எரே 20:5 இந்த நகரத்திற்கு விரோதமாக போர்செய்கிற கல்தேயர் உள்ளே நுழைந்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை ஊற்றினார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள். எரே 19:13எரே 21:102 நாளாக 36:19எரே 52:13எரே 39:8எரே 44:17-19எரே 44:25எரே 7:18 இஸ்ரவேல் மக்களும் யூதா மக்களும் தங்கள் சிறுவயதுமுதல் என் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்துவந்தார்கள்; இஸ்ரவேல் மக்கள் தங்கள் கைகளின் செய்கையினால் எனக்குக் கோபத்தையே உண்டாக்கி வந்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 7:22-26உபா 9:7-12ஆதி 8:21ஏசா 63:10எரே 2:7எரே 22:21எரே 25:7எரே 3:25 அவர்கள் இந்த நகரத்தைக் கட்டின நாள்முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் அது எனக்குக் கோபமுண்டாகவும், எனக்கு உக்கிரமுண்டாக்கவும், நான் அதை என் முகத்தை விட்டு அகற்றுகிறதற்கு ஏதுவாகவும் இருந்தது. 2இராஜா 23:271 இராஜா 11:7-82இராஜா 21:162இராஜா 21:4-72இராஜா 24:3-4எரே 27:10எரே 5:9-11எரே 6:6-7 எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் மக்களும், யூதா மக்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனிதரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும். தானி 9:8ஏசா 1:4-6எரே 2:26எஸ்றா 9:7ஏசா 1:23தானி 9:6எசேக் 22:25-29எசேக் 22:6 முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள். எரே 7:13எசேக் 8:16எரே 2:272 நாளாக 36:15-16எரே 26:5எரே 35:15எரே 7:24யோவா 8:2 அவர்கள் என் பெயர் சூட்டப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்துவதற்கு, தங்கள் அருவருப்புகளை அதில் வைத்தார்கள். எரே 7:30எசேக் 8:5-162இராஜா 21:4-7எரே 23:112 நாளாக 33:152 நாளாக 33:4-72இராஜா 23:6 அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் தீக்கடக்கச் செய்யும்படி இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவம் செய்யவைப்பதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதில் தோன்றினதுமில்லை. எரே 7:312 நாளாக 33:6லேவி 18:21எரே 19:5-6லேவி 20:2-51 இராஜா 16:192 நாளாக 28:2-32இராஜா 23:10 இப்படியிருக்கும்போது பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போகும் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எரே 32:24எரே 32:3எரே 32:28எபே 2:3-5எசேக் 36:31-32ஓசி 2:14ஏசா 43:24-25ஏசா 57:17-18 இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பிவரவும் இதில் சுகமாய்த் தங்கியிருக்கவும் செய்வேன். எரே 23:3எசேக் 34:12-14எரே 23:6எசேக் 11:17எரே 33:16சங் 106:47ஆமோ 9:14-15ஓசி 1:11 அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். எசேக் 11:19-20எரே 24:7சங் 144:15எசேக் 37:27எபி 8:10வெளி 21:7உபா 26:17-19எசேக் 36:28 அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்சந்ததியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாக எல்லா நாட்களிலும் எனக்குப் பயப்படுவதற்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, எசேக் 11:19-20அப் 4:32யோவா 17:21எசேக் 37:25எசேக் 36:26எரே 32:40நீதி 14:26-27நீதி 23:17 அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லை என்கிற நிலையான உடன்படிக்கையை அவர்களுடன் செய்து, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாமலிருக்க, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்தில் வைத்து, எரே 31:31-33எசேக் 36:26எரே 24:7எபி 6:13-18யாக் 1:171 பேது 1:5எசேக் 39:29ஏசா 55:3 அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்தில் நிச்சயமாய் நாட்டுவேன். எரே 24:6செப்ப 3:17ஆமோ 9:15ஏசா 62:5ஓசி 2:19-20ஏசா 65:19உபா 30:9எரே 18:9 நான் இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரச்செய்ததுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 31:28யோசு 23:14-15எரே 33:10-11மத் 24:35சகரி 8:14-15 மனிதனும் மிருகமும் இல்லாதபடி அழிந்துபோனது என்றும், கல்தேயரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்தில் நிலங்கள் வாங்கப்படும். எசேக் 37:11-14எரே 32:15எரே 32:36எரே 33:10 பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைப்பாங்கான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாக வாங்கப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். எரே 17:26எரே 33:11எரே 33:26எரே 33:7எரே 32:10எரே 32:37சங் 126:1-4