யோயாக்கீம் எரேமியாவின் புத்தகச்சுருளை எரித்தல்
யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் நாலாம் வருடத்தில் யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்: எரே 25:12 நாளாக 36:52இராஜா 24:1-2எரே 35:1எரே 45:1 நீ ஒரு புத்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களில் நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்வரை இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், எல்லா மக்களைக்குறித்தும் உன்னுடன் சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதில் எழுது. எரே 30:2யாத் 17:14எரே 1:10எரே 25:3எரே 36:6எசேக் 2:9எரே 25:9-29எரே 36:23 யூதாவின் மக்கள், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவதற்காகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிப்பதற்காகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக்குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார். எரே 18:8அப் 3:19உபா 30:2எரே 26:3எசேக் 12:3எரே 36:71 சாமு 7:32 பேது 3:9 அப்பொழுது எரேமியா நேரியாவின் மகனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் யெகோவா எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புத்தகச்சுருளில் எழுதினான். எரே 32:12எசேக் 2:9எரே 36:32எரே 43:3ஏசா 8:1எரே 36:17-18எரே 36:21எரே 36:23 பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையக்கூடாது. எரே 32:2எரே 33:12 கொரி 11:232 தீமோ 2:9எபே 3:1எபே 6:20எபி 11:36எரே 20:2 நீ உள்ளே நுழைந்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள யெகோவாவுடைய வார்த்தைகளைக் யெகோவாவுடைய ஆலயத்தில் உபவாச நாளில் மக்களுடைய காதுகள் கேட்க வாசிப்பதுமின்றி, தங்கள் பட்டணங்களிலிருந்துவருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்குமளவுக்கு அவைகளை வாசிப்பாயாக. எரே 36:8-9எரே 22:2எரே 26:2எரே 7:2லேவி 16:29-31எசேக் 2:3-7லேவி 23:27-32அப் 27:9 ஒருவேளை அவர்கள் யெகோவாவுடைய முகத்திற்கு முன்பாகப் பணிந்து விண்ணப்பம்செய்து, அவரவர் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்புவார்கள்; யெகோவா இந்த மக்களுக்கு விரோதமாகச் சொல்லியிருக்கிற கோபமும் உக்கிரமும் பெரியது என்று சொன்னான். எரே 36:32 நாளாக 33:12-132இராஜா 22:132இராஜா 22:17ஓசி 5:15எரே 21:5எரே 4:4புலம் 4:11 அப்படியே நேரியாவின் மகனாகிய பாருக்கு அந்தப் புத்தகத்தில், யெகோவாவுடைய ஆலயத்தில் யெகோவாவுடைய வார்த்தைகளை வாசிப்பதற்கு எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான். எரே 1:171 கொரி 16:10எரே 36:4லூக் 4:16-30மத் 16:24நெகே 8:3பிலி 2:19-22 யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் ஐந்தாம் வருடத்து ஒன்பதாம் மாதத்தில், எருசலேமிலிருக்கிற எல்லா மக்களுக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா மக்களுக்கும், யெகோவாவுக்கு முன்பாக உபவாசம் செய்யவேண்டுமென்று சொல்லப்பட்டது. 2 நாளாக 20:3எஸ்த 4:16எரே 36:22யோனா 3:5ஏசா 58:1-3எரே 36:1யோவே 1:13யோவே 2:12-17 அப்பொழுது பாருக்கு யெகோவாவுடைய ஆலயத்தின் மேல்முற்றத்தில், யெகோவாவுடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகிலுள்ள சாப்பானுடைய மகனாகிய கெமரியா என்னும் காரியதரிசியின் அறையில், அந்தப் புத்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை மக்கள் எல்லோரும் கேட்க வாசித்தான். எரே 36:11எரே 26:10எரே 52:252 சாமு 8:17எரே 36:252இராஜா 15:352இராஜா 18:372 சாமு 20:25 சாப்பானுடைய மகனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புத்தகத்திலுள்ள யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக் கேட்டபோது, 2 நாளாக 34:202இராஜா 22:12-142இராஜா 25:22எரே 36:10 அவன் ராஜாவின் அரண்மனைக்குப்போய், காரியதரிசியின் அறையில் நுழைந்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் காரியதரிசியாகிய எலிஷாமாவும் செமாயாவின் மகனாகிய தெலாயாவும், அக்போரின் மகனாகிய எல்நாத்தானும், சாப்பானின் மகனாகிய கெமரியாவும், அனனியாவின் மகனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள். எரே 26:222இராஜா 22:12எரே 36:25எரே 41:12இராஜா 22:142இராஜா 22:32இராஜா 24:8எரே 28:1-17 பாருக்கு மக்கள் கேட்கும் அளவுக்கு புத்தகத்திலுள்ளவைகளை வாசிக்கும்போது, தான் கேட்ட எல்லா வார்த்தைகளையும் மிகாயா அவர்களுக்குத் தெரிவித்தான். 2இராஜா 22:102 நாளாக 34:16-182 நாளாக 34:242இராஜா 22:19யோனா 3:6 அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் மகனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய மகனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கிடத்தில் அனுப்பி, மக்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிந்த சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால், நேரியாவின் மகனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்திற்கு வந்தான். எரே 36:22இராஜா 25:23எசேக் 2:6-7எரே 36:21எரே 40:8எரே 41:1-2எரே 41:16எரே 41:18 அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான். அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கும்போது பயப்பட்டவர்களாக ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு கண்டிப்பாக அறிவிப்போம் என்றார்கள். ஆமோ 7:10-11எரே 13:18எரே 36:24அப் 24:25-26எரே 38:1-4 அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாக எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள். யோவா 9:15யோவா 9:10-11யோவா 9:26-27 அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உச்சரித்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புத்தகத்தில் எழுதினேன் என்றான். எரே 36:4எரே 36:2எரே 43:2-3நீதி 26:4-5 அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடம் ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி, 1 இராஜா 17:31 இராஜா 18:101 இராஜா 18:4எரே 26:20-24எரே 36:262 நாளாக 25:15அப் 23:16-22அப் 5:40 சுருளை காரியதரிசியாகிய எலிஷாமாவின் அறையில் வைத்து, ராஜாவினிடத்திற்கு அரண்மனையில் போய், ராஜாவின் காதுகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் சொன்னார்கள். எரே 36:12எரே 36:21 அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைக் காரியதரிசியாகிய எலிஷாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான். 2இராஜா 22:102 நாளாக 34:18எசேக் 2:4-5எரே 23:28எரே 26:2எரே 36:15 ஒன்பதாம் மாதத்தில் ராஜா, குளிர்காலத்திற்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாக அடுப்பு மூட்டியிருந்தது. ஆமோ 3:15எரே 22:14-16எரே 3:20எரே 36:9 யெகுதி மூன்று நான்கு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருள் எல்லாவற்றையும் நெருப்பில் வெந்துபோக, அடுப்பிலிருந்த நெருப்பில் எறிந்துவிட்டான். 1 இராஜா 22:81 இராஜா 22:27ஏசா 28:14-15ஏசா 5:18-19நீதி 1:30நீதி 13:13நீதி 19:21நீதி 21:30 ராஜாவாயினும், அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய எந்த ஊழியக்காரனும் பயப்படவுமில்லை, தங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ளவுமில்லை. எரே 36:16சங் 36:11 இராஜா 21:272இராஜா 19:1-2ஏசா 36:22யோனா 3:6சங் 64:52 நாளாக 34:19-31 எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவுமோ: அந்தச் சுருளைச் சுட்டெரிக்கவேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம் செய்தார்கள்; ஆனாலும், அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்காமல், அப் 5:34-39ஆதி 37:22எரே 36:12ஆதி 37:26-28எரே 13:15-17எரே 26:22மத் 27:24-25மத் 27:4 பாருக்கு என்னும் காரியதரிசியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிப்பதற்கு, ராஜா அம்மெலேகின் மகனாகிய யெரமெயேலுக்கும் 1, அஸ்ரியேலின் மகனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் மகனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் யெகோவா அவர்களை மறைத்தார். 1 இராஜா 17:31 இராஜா 19:1-31 இராஜா 19:101 இராஜா 19:14சங் 91:1அப் 12:11ஏசா 26:20சங் 27:5 ராஜா அந்தச் சுருளையும், அதில் எரேமியாவின் வாய் சொல்ல பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: எரே 36:4 நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த வார்த்தைகளையெல்லாம் அதில் எழுது என்றார். சகரி 1:5-62 தீமோ 2:13எரே 28:13-14எரே 44:28யோபு 23:13மத் 24:35 மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா கண்டிப்பாக வருவான் என்பதையும், அவன் இந்த தேசத்தை அழித்து இதிலிருந்து மனிதரையும் மிருகங்களையும் அழிப்பான் என்பதையும், நீ அதில் எழுதியிருக்கிறதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 30:10எரே 26:9உபா 29:19ஏசா 29:21ஏசா 45:9எரே 32:3யோபு 15:241 கொரி 10:22 ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து: தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு வம்சத்தில் ஒருவனும் இருக்கமாட்டான்; அவனுடைய சடலங்களோவென்றால், பகலின் வெப்பத்திற்கும் இரவின் குளிருக்கும் எறியப்பட்டுக்கிடக்கும். எரே 22:302இராஜா 24:12-15ஆதி 31:40எரே 22:18-19 நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிமக்கள்மேலும், யூதா மனிதர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்குகளையெல்லாம் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். நீதி 29:1எரே 19:15எரே 23:34எரே 35:17உபா 28:15-68எரே 11:8எரே 17:18எரே 29:17-19 அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் மகனாகிய பாருக்கு என்னும் காரியதரிசியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் நெருப்பால் சுட்டெரித்த புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதில் எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளைப்போல அநேகம் வார்த்தைகளும் அவைகளுடன் சேர்க்கப்பட்டது. எரே 36:4எரே 36:18யாத் 4:15-16தானி 3:19யாத் 34:1எரே 36:23லேவி 26:18லேவி 26:21