யூதாவுக்குக் கிடைக்கப்போகும் விடுதலை
இஸ்ரவேலைக்குறித்துக் யெகோவா சொன்ன வார்த்தையின் செய்தி; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனிதனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற யெகோவா சொல்லுகிறதாவது: ஏசா 42:5எரே 51:15ஏசா 57:16எபி 1:10-12எபி 12:9ஏசா 44:24ஏசா 48:13சங் 102:25-26 இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா மக்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமிற்கு விரோதமாகப் போடப்படும் முற்றுகையிலே யூதாவும் அப்படியேயாகும். சங் 75:8சகரி 14:14ஏசா 51:22-23ஏசா 51:17ஆப 2:16எரே 25:15எரே 25:17எரே 49:12 அந்நாளிலே நான் எருசலேமை சகல மக்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதை அசைக்கிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள தேசங்களெல்லாம் அதற்கு விரோதமாகக் கூடிக்கொள்வார்கள். மத் 21:44சகரி 14:2-4தானி 2:34-35லூக் 20:18எசேக் 38:1-23ஏசா 66:14-16சகரி 13:1சகரி 14:6 அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரச்செய்து, யூதா வம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, மக்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார். உபா 28:28சகரி 12:3அப் 17:30சகரி 12:61 இராஜா 8:292 நாளாக 6:202 நாளாக 6:402 நாளாக 7:15 எருசலேமின் மக்கள், சேனைகளின் யெகோவாகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள். யோவே 3:16சங் 18:32சகரி 10:12சங் 144:1சங் 18:392 கொரி 12:9-10ஏசா 28:6ஏசா 41:10-16 அந்நாளிலே யூதாவின் தலைவர்களை விறகுகளுக்குள்ளே எரிகிற நெருப்பு அடுப்பிற்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீப்பந்தத்திற்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா மக்களையும் அழிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் இடமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும். ஒபதி 1:18தானி 2:44-45மீகா 5:5-8சங் 149:6-9சகரி 2:4தானி 2:34-35எசேக் 48:30-35ஏசா 10:16-18 தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிமக்களுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாமலிருக்க, யெகோவா யூதாவின் கூடாரங்களை முதலாவது காப்பாற்றுவார். எரே 30:18ஆமோ 9:11சங் 35:26சங் 55:12ரோம 3:27ஏசா 2:11-17ஏசா 23:9யாக் 2:5 அந்நாளிலே யெகோவா எருசலேமின் மக்களைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார்கள் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலவும் யெகோவாவுடைய தூதனைப்போலவும் இருப்பார்கள். மீகா 5:2-4யோவே 3:10யோவே 3:16-17மீகா 7:16மீகா 7:8சகரி 2:5சகரி 9:8யாத் 23:20-21 அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாக வருகிற எல்லா மக்களையும் அழிக்கப் பார்ப்பேன். ஏசா 54:17சகரி 14:2-3ஆகா 2:22சகரி 12:2
குத்தப்பட்டவருக்காக புலம்புதல்
நான் தாவீது குடும்பத்தார்கள் மேலும் எருசலேம் குடிமக்கள் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைமகனுக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். வெளி 1:7எசேக் 39:29யோவா 19:34-37யோவே 2:28-29எரே 6:26அப் 2:33ரோம 8:26ஆமோ 8:10 அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாக இருக்கும். 2 நாளாக 35:242இராஜா 23:29 தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், நாத்தான் குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், வெளி 1:71 கொரி 7:52 சாமு 5:14யாத் 12:30எரே 31:18லூக் 3:31மத் 24:30சகரி 7:3 லேவி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், சீமேயி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், 1 நாளாக 23:101 நாளாக 23:71 நாளாக 3:191 நாளாக 4:271 இராஜா 1:82 நாளாக 29:142 சாமு 16:5யாத் 6:16-26 மீதமுள்ள எல்லா குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனிதர்கள் தனித்தனியாகவும் அவர்களுடைய பெண்கள் தனித்தனியாகவும் புலம்புவார்கள். நீதி 9:12