மீகா 5

Micah 5
அத்தியாயம் 5

வரப்போகும் மேசியா

சேனைகளையுடைய நகரமே, இப்போது குழுக்குழுவாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றுகை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள். புலம் 3:30ஏசா 33:22யோவா 18:22யோவா 19:3யோபு 16:10மத் 26:672 கொரி 11:202இராஜா 25:1-3 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. மத் 2:6யோவா 7:42ஏசா 9:6-7லூக் 1:31-33ஆதி 49:10ஏசா 11:1சங் 90:2கொலோ 1:17 ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கும்வரை அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களில் மீதியானவர்கள் இஸ்ரவேல் மக்களோடு திரும்புவார்கள். வெளி 12:1-2மத் 1:21மீகா 4:7ரோம 9:27-28ஓசி 11:8ஏசா 10:20-21மீகா 4:9-10எபி 1:11-12 அவர் நின்றுகொண்டு, யெகோவாவுடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் முழுவதிலும் மகிமைப்படுவார். ஏசா 40:10-11சங் 23:1-2லூக் 1:32மீகா 7:141 பேது 1:5யோவா 10:27-30வெளி 11:151 நாளாக 29:11-12

இஸ்ரவேலின் எதிரிகளுக்கு வரும் நியாயத்தீர்ப்பு

இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பர்களையும் மனிதர்களில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன். லூக் 2:14யோவா 14:27சகரி 10:3கொலோ 1:20-21பிரச 11:2எபே 2:14-17ஏசா 9:6-7யோபு 5:19 இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார். ஆதி 10:8-11ஏசா 14:25லூக் 1:742 நாளாக 33:112இராஜா 15:292இராஜா 17:3-52இராஜா 18:9-152இராஜா 19:32-35 யாக்கோபிலே மீதியானவர்கள் யெகோவாலே வருகிற பனியைப்போலவும், மனிதனுக்குக் காத்திருக்காமலும், மனுமக்களுக்குத் தாமதிக்காமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள். சங் 72:6ஏசா 44:3மீகா 5:3உபா 32:2ஓசி 14:5சங் 110:3ரோம 10:20ஓசி 6:3 யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும் மக்களுக்குள் அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள். சகரி 10:5மீகா 4:13ஓசி 5:14ஏசா 41:15-16ஒபதி 1:18-19சங் 2:8-12சங் 50:22சகரி 12:3 உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் எதிரிகளெல்லோரும் அழிக்கப்படுவார்கள். ஏசா 26:11சங் 21:8ஏசா 11:14ஏசா 14:2-4சங் 10:121 கொரி 15:25ஏசா 1:25ஏசா 33:10 அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராமல் அழித்து, உன் இரதங்களை அழித்து, சகரி 9:10ஓசி 14:3சங் 20:7-8சங் 33:16-17ஓசி 1:7ஏசா 2:7எரே 3:23 உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து, ஏசா 2:12-17ஆமோ 5:9எசேக் 38:11ஓசி 10:14ஏசா 6:11சகரி 4:6 சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள். உபா 18:10-12ஏசா 8:19-20வெளி 22:15ஏசா 2:20ஏசா 2:18ஏசா 2:6-8வெளி 19:20சகரி 13:2-4 உன் வார்ப்பிக்கப்பட்ட சிலைகளையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் படைப்புகளை நீ இனிப் பணிந்துகொள்ளமாட்டாய். எசேக் 6:9எசேக் 36:25எசேக் 37:23ஓசி 14:3ஓசி 14:8ஓசி 2:16-17ஏசா 17:7-8ஏசா 2:8 நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இல்லாமல் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து, யாத் 34:13 செவிகொடுக்காத அந்நிய மக்களிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார். 2 தெச 1:8மீகா 5:8சங் 149:7ஏசா 65:12