யோவான் 19

John 19
அத்தியாயம் 19

இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கப்படுதல்.

அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான். ஏசா 53:5ஏசா 50:6மத் 20:19லூக் 18:33லூக் 23:16லூக் 23:23மத் 23:34மத் 27:26-31 படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி: மாற் 15:16-20ஏசா 53:3லூக் 23:11மத் 27:27-31சங் 22:6ஏசா 49:7யோவா 19:5 யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். மத் 27:29லூக் 1:28மத் 26:49யோவா 18:33யோவா 19:19-22யோவா 18:22 பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான். யோவா 18:38யோவா 19:6லூக் 23:41 பேது 2:22லூக் 23:471 யோவா 3:51 பேது 1:191 பேது 3:18 இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான். யோவா 19:2எபி 12:2ஏசா 7:14யோவா 1:29ஏசா 40:9ஏசா 43:1புலம் 1:12 பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான். யோவா 18:31யோவா 19:4அப் 13:27-29அப் 2:23அப் 3:13-15அப் 7:52லூக் 23:4மத் 27:22 யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள். லேவி 24:16யோவா 5:18மத் 26:63-66ரோம 1:4மத் 27:42-43மாற் 14:61-64மாற் 15:39யோவா 10:30-33 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து, யோவா 19:13அப் 14:11-19 மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை. யோவா 18:33அப் 8:32-33ஏசா 53:7நியாயாதி 13:6யோவா 8:14யோவா 9:29-30மத் 26:63மத் 27:12-14 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். தானி 3:14-15தானி 5:19யோவா 18:39 இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார். ரோம 13:1யோவா 3:27அப் 2:23தானி 4:17அப் 3:13யோவா 7:30தானி 4:25யாக் 1:17 அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். அப் 17:6-7யோவா 18:33-36லூக் 23:2-5மாற் 6:16-26அப் 24:24-27 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான். மத் 27:19சங் 82:5-7அப் 4:19ஆமோ 4:7பிரச 5:8ஏசா 51:12-13ஏசா 57:11யோவா 19:8 அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான். மத் 27:62யோவா 19:5யோவா 19:42மாற் 15:25யோவா 19:19-22யோவா 19:3யோவா 19:31-32லூக் 23:54 அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள். லூக் 23:18அப் 21:36அப் 22:22ஆதி 49:10யோவா 19:6எசேக் 21:26-27யோவா 18:31

இயேசு சிலுவையில் அறையப்படுதல்

அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள். லூக் 23:24-25மத் 27:26-31மாற் 15:15-20 அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். லூக் 23:33லூக் 14:27லூக் 23:26அப் 7:58எபி 13:11-13மாற் 15:321 இராஜா 21:13லேவி 16:21-22 அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். ஏசா 53:12கலா 3:13யோவா 18:32மத் 27:35-38மத் 27:44மாற் 15:24-27சங் 22:16எபி 12:2 பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது. மத் 27:37லூக் 23:38மாற் 15:26யோவா 19:14அப் 26:9அப் 3:6யோவா 1:45-46யோவா 1:49 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது. அப் 21:37அப் 21:40அப் 22:2அப் 26:14யோவா 19:13யோவா 5:2வெளி 16:16எபி 13:12 அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். யோவா 19:14யோவா 19:19 பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான். சங் 76:10எஸ்த 4:16ஆதி 43:14யோவா 19:12நீதி 8:29சங் 65:7 படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது. லூக் 23:34மாற் 15:24மத் 27:35யாத் 39:22-23 அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள். சங் 22:18யோவா 19:36-37யோவா 19:28அப் 13:27யோவா 10:35யோவா 12:38-39ஏசா 10:7 இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். லூக் 23:49மத் 27:55-56யோவா 20:1மாற் 15:40-41யோவா 20:11-18லூக் 2:35லூக் 24:18லூக் 8:2 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார். யோவா 21:24யோவா 13:23யோவா 2:4யோவா 20:2யோவா 21:7யோவா 21:20 பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான். மத் 12:48-501 தீமோ 5:2-4யோவா 16:321 யோவா 3:18-19யோவா 1:11ஆதி 45:8ஆதி 47:12மத் 25:40

இயேசுவின் மரணம்

அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார். சங் 69:21சங் 22:15யோவா 19:30லூக் 22:37லூக் 18:31யோவா 19:24யோவா 18:4யோவா 13:1 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். எண் 19:18லூக் 23:36மாற் 15:36யாத் 12:22மத் 27:48சங் 51:7மத் 27:341 இராஜா 4:33 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். யோவா 17:4பிலி 2:8கொலோ 2:14-17எபி 12:2யோவா 10:11தானி 9:24ஏசா 53:10லூக் 23:46 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். யோவா 19:14யோவா 19:42மாற் 15:42யோசு 8:29உபா 21:22-23யாத் 12:16யோவா 19:1யோசு 10:26-27 அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள். யோவா 19:18லூக் 23:39-43 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை. ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது. 1 யோவா 5:6சகரி 13:1சகரி 12:101 யோவா 5:8தீத் 3:5-7எசேக் 36:25வெளி 7:14எபே 5:26 அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான். யோவா 21:241 யோவா 1:1-3எபி 2:3-4யோவா 15:271 பேது 5:1அப் 10:39யோவா 20:31ரோம 15:4 அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. சங் 34:20எண் 9:12யாத் 12:46யோவா 19:28சங் 22:14சங் 35:10மத் 1:22யோவா 19:24 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. சகரி 12:10வெளி 1:7சங் 22:16-17

இயேசு அடக்கம்செய்யப்படுதல்

இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான். மாற் 15:42-47மத் 27:57-61நீதி 29:25யோவா 7:13லூக் 23:50-56பிலி 1:14யோவா 12:42யோவா 9:22 ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான். யோவா 7:50-52யோவா 3:1-21உன்னத 4:142 நாளாக 16:14யோவா 12:7மத் 12:20மத் 19:30மாற் 16:1 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள். யோவா 11:44அப் 5:6யோவா 20:5-7லூக் 24:12மத் 26:12 அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. லூக் 23:53மத் 27:60ஏசா 22:16யோவா 20:152இராஜா 23:30மத் 27:64-66 யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள். யோவா 19:14யோவா 19:31ஏசா 53:9யோவா 19:411 கொரி 15:4அப் 13:29கொலோ 2:12யோவா 19:20