மாற்கு 15

Mark 15
அத்தியாயம் 15

பிலாத்துவிற்கு முன்பாக கிறிஸ்து

அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள். மத் 27:1-2அப் 3:13யோவா 18:28-38லூக் 22:66லூக் 23:1-5அப் 4:25-28சங் 2:2அப் 4:5-6 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். மத் 2:2மத் 27:11-141 தீமோ 6:13மாற் 15:18மாற் 15:26யோவா 18:29-38யோவா 19:19-22லூக் 23:2-3 பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஏசா 53:7யோவா 18:29-31யோவா 19:12யோவா 19:6-7லூக் 23:2-5மத் 27:12மாற் 14:60-61மாற் 15:5 அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். யோவா 19:10மத் 26:62மத் 27:13 இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். ஏசா 53:7சகரி 3:81 கொரி 4:9மத் 27:14சங் 71:7ஏசா 8:18யோவா 19:9 பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது. யோவா 18:39-40அப் 24:27அப் 25:9லூக் 23:16-25மத் 26:2மத் 26:5மத் 27:15-26யோவா 19:16 கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான். லூக் 23:18-19லூக் 23:25மத் 27:16 மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள். பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து. அப் 3:13-15யோவா 18:39யோவா 19:14-16யோவா 19:4-5மத் 27:17-21 அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான். நீதி 27:41 சாமு 18:8-9ஆதி 4:4-6மத் 27:18தீத் 3:31 யோவா 3:12அப் 13:45பிரச 4:4 பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள். அப் 3:14மத் 27:20ஓசி 5:1யோவா 18:40 பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். ஏசா 9:6-7எரே 23:5-6அப் 5:31யோவா 19:14-16லூக் 23:2லூக் 23:20-24மத் 2:2-4மத் 21:5 அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள். அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். லூக் 23:411 பேது 1:19அப் 19:34அப் 22:22-23அப் 7:54-57எபி 7:26ஏசா 53:3ஏசா 53:9 அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். ஏசா 50:6யோவா 19:1மத் 27:26மாற் 10:34நீதி 29:25சங் 129:31 பேது 2:24யோவா 19:16

போர்வீரர்கள் இயேசுவைப் பரிகாசம்பண்ணுதல்

அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து, மத் 27:27-31யோவா 19:9யோவா 18:28மத் 26:3அப் 10:1யோவா 18:33 சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து: மத் 27:28-30யோவா 19:2-5லூக் 23:11 யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, மத் 27:42-43ஆதி 37:10ஆதி 37:20யோவா 19:14-15லூக் 23:36-37மாற் 15:2மாற் 15:29-32 அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். மாற் 14:65ஏசா 53:3-51 இராஜா 19:18எஸ்த 3:2-5ஆதி 24:52ஆதி 43:28எபி 12:2-3எபி 13:13 அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். யோவா 19:16மத் 27:31

சிலுவையில் அறையப்படுதல்

சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். லூக் 23:26மத் 27:32ரோம 16:13அப் 11:20அப் 13:1அப் 2:10அப் 6:9லூக் 14:27 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய், மத் 27:33-44யோவா 19:17-27லூக் 23:27-38 வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மத் 27:34யோவா 19:28-30லூக் 22:18லூக் 23:36மத் 26:19மாற் 14:25 அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள். யோவா 19:23-24லூக் 23:34மத் 27:35-36ஏசா 53:4-8சங் 22:16-181 பேது 2:242 கொரி 5:21அப் 5:30 அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள். யோவா 19:14லூக் 23:44மத் 27:45மாற் 15:33அப் 2:15 அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள். மத் 27:37யோவா 19:18-22லூக் 23:37-38மத் 2:2சகரி 9:9ஏசா 10:7மாற் 15:2நீதி 21:1 இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள். லூக் 23:32-33மத் 27:38யோவா 19:18 அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது. அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே. மாற் 14:58சங் 109:25யோவா 2:18-22புலம் 1:12புலம் 2:15ஆதி 37:19-20மத் 26:61மத் 27:39-40 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை. யோவா 12:23-241 பேது 3:17-18யோவா 11:47-52லூக் 23:35-37மத் 27:41-43சங் 2:1-4சங் 22:16-17 நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள். லூக் 23:39-43மத் 27:442 தீமோ 2:18ஏசா 44:6மத் 1:17சகரி 9:9செப்ப 3:15யோவா 1:49

இயேசுவின் மரணம்

நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது. மத் 27:45ஆமோ 8:9-10லூக் 23:44-45மாற் 15:25ஏசா 50:3-4சங் 105:28 மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம். சங் 22:1மத் 27:46எபி 5:7சங் 27:9ஏசா 41:17சங் 71:11தானி 9:21சங் 42:9 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். மத் 27:47-49மத் 17:11-13மாற் 9:11-13 ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான். சங் 69:21மாற் 15:23யோவா 19:28-30லூக் 23:36 இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார். யோவா 19:30லூக் 23:46மத் 27:50 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. எபி 10:19-23லூக் 23:45எபி 9:3-12மத் 27:51-53லேவி 16:2-19யாத் 26:31-34எபி 4:14-16எபி 6:19 அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான். லூக் 23:47-48மத் 27:54மத் 27:43அப் 10:1அப் 27:1-3மத் 8:5-10மாற் 15:44-45அப் 27:43 சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், மத் 27:55-56லூக் 23:49லூக் 8:2-3மத் 13:55மத் 27:61மத் 28:1மாற் 15:47மாற் 16:9 அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள். லூக் 8:2-3மத் 27:55-56

இயேசு அடக்கம்செய்யப்படுதல்

ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால், மாலைநேரத்தில். லூக் 23:50-56யோவா 19:31யோவா 19:38-42மத் 27:57-62 மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். லூக் 2:25லூக் 2:38லூக் 23:51அப் 17:12யோவா 19:38மத் 27:57அப் 13:50அப் 4:8-13 அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான். யோவா 19:31-37 நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான். யோவா 19:38மத் 27:58மாற் 15:39 அவன்போய், மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் போர்வையிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான். ஏசா 53:9மத் 27:59-60ஏசா 22:16யோவா 11:38மாற் 16:3-4யோவா 19:38-42லூக் 23:53மத் 28:2 அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள். மாற் 15:40மாற் 16:1லூக் 23:55மத் 27:61மத் 28:1