இயேசுவின் உயிர்த்தெழுதல்
வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடு, மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போடப்பட்டிருப்பதைப் பார்த்தாள். மாற் 16:9மத் 27:60யோவா 19:25லூக் 24:1-10மாற் 15:46வெளி 1:10யோவா 20:18-19யோவா 20:26 உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவிடமும் இயேசுவிற்கு அன்பாக இருந்த மற்ற சீடனிடமும்போய்: கர்த்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். யோவா 13:23யோவா 20:13யோவா 19:26யோவா 21:24யோவா 21:20யோவா 21:7மத் 27:63-64யோவா 20:15 அப்பொழுது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். லூக் 24:12 பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி, முதலில் கல்லறைக்கு வந்து, 2 சாமு 18:231 கொரி 9:242 கொரி 8:12லேவி 13:30 அதற்குள்ளே குனிந்து பார்த்து, துணிகள் கிடக்கிறதைப் பார்த்தான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. யோவா 19:40யோவா 11:44யோவா 20:11 சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து, லூக் 22:31-32யோவா 18:17யோவா 18:25-27யோவா 21:15-17யோவா 21:7யோவா 6:67-69மத் 16:15-16 துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான். யோவா 11:44 முதலில் கல்லறைக்கு வந்த மற்ற சீடனும் அப்பொழுது உள்ளே நுழைந்து, பார்த்து விசுவாசித்தான். யோவா 20:25யோவா 1:50யோவா 20:4யோவா 20:29 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள். சங் 16:10ஏசா 25:8ஏசா 53:10-12ஏசா 26:19லூக் 24:44-461 கொரி 15:4லூக் 24:26ஓசி 13:14
மகதலேனா மரியாளுக்கு இயேசு காட்சியளித்தல்
பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள். யோவா 16:32யோவா 7:53 மரியாள் கல்லறையின் அருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கும்போது அவள் குனிந்து கல்லறைக்கு உள்ளே பார்த்து, யோவா 20:5 இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளை உடை அணிந்தவர்களாக இரண்டு தூதர்கள், தலைபக்கம் ஒருவனும் கால்பக்கம் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாள். லூக் 24:3-7வெளி 3:4தானி 7:9மாற் 16:5-6வெளி 7:142 நாளாக 5:12அப் 1:10லூக் 24:22-23 அவர்கள் அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். யோவா 20:15யோவா 16:20-221 சாமு 1:8யோவா 14:27-28யோவா 2:4சங் 43:3-5அப் 21:13பிரச 3:4 இவைகளைச் சொல்லிப் பின்பக்கம் திரும்பி, இயேசு நிற்கிறதைப் பார்த்தாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாமல் இருந்தாள். லூக் 24:16யோவா 21:4மத் 28:9மாற் 16:9உன்னத 3:3-4யோவா 8:59லூக் 24:31மாற் 16:12 இயேசு அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன் என்றாள். யோவா 18:7யோவா 20:13யோவா 1:38உன்னத 3:21 சாமு 1:16யோவா 18:4மத் 28:5மாற் 16:6 இயேசு அவளைப் பார்த்து: மரியாளே என்றார். அவள் திரும்பிப்பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தம். யோவா 10:3யோவா 1:381 சாமு 3:101 சாமு 3:6அப் 10:3அப் 9:4யாத் 3:4யாத் 33:17 இயேசு அவளைப் பார்த்து: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடம் திரும்பிப்போகவில்லை; நீ என் சகோதரர்களிடம்போய், நான் என் பிதாவினிடமும் உங்களுடைய பிதாவினிடமும், என் தேவனிடமும் உங்களுடைய தேவனிடமும் திரும்பிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். யோவா 16:28எபே 4:8-101 பேது 1:3கலா 4:6-7யோவா 17:11எபே 1:17-23கலா 3:26எபி 2:11-13 மகதலேனா மரியாள் போய், தான் இயேசுவைப் பார்த்ததையும், அவர் தன்னிடம் சொன்னவைகளையும் சீடர்களுக்கு அறிவித்தாள். லூக் 24:10மத் 28:10லூக் 24:22-23மாற் 16:10-13யோவா 20:1
இயேசு சீடர்களுக்குக் காட்சியளித்தல்
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் மாலைநேரத்திலே, சீடர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கும்போது, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். யோவா 20:26யோவா 14:27யோவா 20:21லூக் 24:36-492 தெச 3:16எபே 2:14யோவா 7:13மாற் 16:14 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கரங்களையும் விலாவையும் அவர்களுக்குக் காட்டினார். சீடர்கள் இயேசுவைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள். யோவா 16:221 யோவா 1:1யோவா 20:27லூக் 24:39-41யோவா 16:20ஏசா 25:8-9யோவா 19:34மத் 28:8 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, யோவா 17:18-19மத் 28:18-20யோவா 13:20யோவா 3:17மாற் 16:15-18அப் 1:8லூக் 24:47-49மத் 10:16 அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்; யோபு 33:4ஆதி 2:7அப் 2:38யோவா 7:39அப் 19:2அப் 8:15எசேக் 37:9சங் 33:6 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாமல் இருக்கும் என்றார். மத் 18:18மத் 16:19அப் 13:38-39மாற் 2:5-10அப் 10:432 கொரி 2:6-10அப் 2:381 தீமோ 1:20
தோமாவின் சந்தேகம்
இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களோடு இருக்கவில்லை. யோவா 11:16எபி 10:25யோவா 6:66-67யோவா 14:5யோவா 21:2மத் 18:20மத் 10:3 மற்றச் சீடர்கள்: இயேசுவை பார்த்தோம் என்று அவனிடம் சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் பார்த்து, அந்தக் காயத்திலே என் விரலைவிட்டு, என் கையை அவருடைய விலாவிலே வைத்துப்பார்க்காமல் விசுவாசிக்கமாட்டேன் என்றான். யோவா 6:30மாற் 16:11எபி 3:18எபி 3:12சங் 78:321 கொரி 15:5-8அப் 10:40-41அப் 5:30-32 மீண்டும் எட்டு நாட்களுக்குப்பின்பு அவருடைய சீடர்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களோடு இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். யோவா 20:19ஏசா 54:10ஏசா 26:12யோவா 14:27யோவா 20:21லூக் 9:28மத் 17:1ஏசா 27:5 பின்பு அவர் தோமாவைப் பார்த்து: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கரங்களைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாக இல்லாமல் விசுவாசியாக இரு என்றார். யோவா 20:25சங் 103:13-141 யோவா 1:1-2யோவா 20:201 தீமோ 1:14-16லூக் 24:40சங் 78:38லூக் 9:41 தோமா அவருக்கு மறுமொழியாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். யோவா 1:1ஏசா 9:6ஏசா 7:141 தீமோ 3:16மத் 14:33யோவா 5:23ஏசா 25:9அப் 7:59-60 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைப் பார்த்ததினாலே விசுவாசித்தாய், பார்க்காமல் இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். 1 பேது 1:82 கொரி 5:7எபி 11:1எபி 11:27லூக் 1:45யோவா 4:48யோவா 20:8எபி 11:39 இந்தப் புத்தகத்தில் எழுதப்படாத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாகச் செய்தார். யோவா 21:25ரோம 15:41 யோவா 5:132 தீமோ 3:15-171 கொரி 10:112 பேது 3:1-2யோவா 2:11லூக் 1:3-4 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிப்பதற்காகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. அப் 10:43யோவா 3:15-161 யோவா 5:11 யோவா 4:151 யோவா 5:20யோவா 3:361 யோவா 5:10-13யோவா 6:40