தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, சங் 35:1சங் 26:1சங் 7:81 சாமு 24:15சங் 35:24சங் 5:6சங் 71:41 பேது 2:23
பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும்,
அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.
என் பெலனாகிய தேவன் நீர்; சங் 28:7சங் 42:9எபே 6:10ஏசா 40:31சங் 94:14சங் 44:91 நாளாக 28:9யாத் 15:2
ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?
உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; சங் 36:9நீதி 3:5-6யோவா 1:4சங் 97:11சங் 143:10சங் 119:105சங் 84:1சங் 25:4-5
அவைகள் என்னை நடத்தி,
உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும்.
அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், ஏசா 61:10ஆப 3:17-18சங் 66:13-15சங் 57:8சங் 116:12-19சங் 71:22-23சங் 33:2சங் 42:6
எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே,
என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? சங் 42:5சங் 42:11
ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு;
என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.