மத்தேயு 10

Matthew 10
அத்தியாயம் 10

பன்னிரண்டு அப்போஸ்தலர்களை அனுப்புதல்

அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். லூக் 9:1-6மாற் 3:13-15மாற் 6:7-13லூக் 10:19மாற் 16:17-18லூக் 24:49அப் 1:8லூக் 6:13 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், அப் 1:13மத் 4:21யோவா 12:22யோவா 6:8லூக் 5:10மத் 4:18யோவா 21:2லூக் 11:49 பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு, அப் 1:13மாற் 3:18யோவா 1:43-46மத் 9:9மாற் 2:14யோவா 11:16யோவா 12:21-22யோவா 20:24-29 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. மத் 26:14யோவா 13:2யோவா 6:71மத் 26:47மாற் 14:43மாற் 3:18-19அப் 1:16-20யோவா 13:26-30 இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும், யோவா 4:9அப் 22:21-232இராஜா 17:24-411 தெச 2:16யோவா 4:22-24ரோம 15:8-9லூக் 17:16அப் 10:45 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள். எரே 50:6எசேக் 34:61 பேது 2:25ஏசா 53:6அப் 13:46சங் 119:176மத் 15:24-26அப் 28:25-28 போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள். அப் 28:31மத் 3:2லூக் 9:60மத் 4:17லூக் 10:9-11லூக் 16:16லூக் 9:2ஏசா 61:1 வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள். அப் 3:6லூக் 10:9அப் 4:30மத் 10:1அப் 20:33-35மாற் 16:182இராஜா 5:15-16அப் 5:12-15 உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, லூக் 22:35லூக் 9:3-51 கொரி 9:7-27லூக் 10:4-12மாற் 6:8-11 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான். 1 தீமோ 5:17-18லூக் 10:7-121 கொரி 9:4-14கலா 6:6-7லூக் 3:111 சாமு 9:72 தீமோ 4:131 சாமு 17:40 எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள். லூக் 10:7-81 இராஜா 17:9-24அப் 18:1-3யோபு 31:32அப் 16:15ஆதி 19:1-3நியாயாதி 19:16-21லூக் 10:38-42 ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். 1 சாமு 25:6லூக் 10:5-62 கொரி 5:20அப் 10:363 யோவா 1:14 அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது. லூக் 10:6சங் 35:132 கொரி 2:16 எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். அப் 18:6லூக் 10:10-11நெகே 5:13அப் 13:51லூக் 9:5மாற் 6:111 தெச 4:8யோவா 13:20 நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 2 பேது 2:6யோவா 15:22-241 யோவா 4:17எசேக் 16:48-56லூக் 10:11-12மத் 11:22-242 பேது 2:92 பேது 3:7 ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள். பிலி 2:15லூக் 10:31 கொரி 14:20கொலோ 4:5எபே 5:15-17ரோம 16:18-19அப் 20:29லூக் 21:15 மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள். மாற் 13:9மத் 23:34அப் 26:11யோவா 16:2லூக் 12:11மத் 5:22மத் 24:9-10அப் 22:19 அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். அப் 24:1-26அப் 5:25-27மத் 8:4மாற் 13:9சங் 2:1-62 தீமோ 1:82 தீமோ 4:16-17அப் 12:1-4 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும். யாத் 4:12மாற் 13:11-132 தீமோ 4:17லூக் 12:11லூக் 21:12-17யாத் 4:15தானி 3:16-18எரே 1:9 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். 2 சாமு 23:2அப் 6:10லூக் 21:15லூக் 12:122 பேது 1:21அப் 2:4அப் 4:82 கொரி 13:3 சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். லூக் 21:16-17மீகா 7:5-6மாற் 13:12-13மத் 24:10லூக் 12:51-53மத் 10:34-36சகரி 13:32 சாமு 17:1-4 என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். மத் 24:13யாக் 1:12வெளி 2:10மாற் 13:13மத் 10:391 யோவா 3:13மத் 24:9ரோம 2:7 ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 16:28யோவா 11:53-54அப் 17:10அப் 8:1லூக் 4:29-31மாற் 13:26யோவா 10:39-42லூக் 18:8 சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை. யோவா 15:20லூக் 6:40யோவா 13:16எபி 12:2-42 சாமு 11:11 சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? லூக் 11:15மத் 12:24மத் 9:34யோவா 7:20மாற் 3:22யோவா 8:48யோவா 10:20யோவா 8:52

பயப்படாமலிருங்கள்

அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. லூக் 8:17மாற் 4:22எரே 1:81 கொரி 4:5ஏசா 43:1-2லூக் 12:2-9மத் 10:28ஏசா 41:10 நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள். அப் 5:20யோவா 16:13யோவா 16:1நீதி 1:20-23யோவா 16:29லூக் 8:10மத் 13:1-17மத் 13:34-35 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். லூக் 12:4-5ஏசா 8:12-13வெளி 2:10யாக் 4:12பிரச 8:12-13ரோம 8:35-39ஏசா 51:12எரே 5:22 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது. லூக் 12:6-7சங் 104:27-30 உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. லூக் 12:71 சாமு 14:45அப் 27:34லூக் 21:182 சாமு 14:111 இராஜா 1:52 ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். லூக் 12:24சங் 8:5மத் 6:261 கொரி 9:9-10மத் 12:11-12 மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன். வெளி 3:5லூக் 12:8-9ரோம 10:9-101 யோவா 4:152 தீமோ 1:81 சாமு 2:30வெளி 2:131 தீமோ 6:12-13 மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். 2 தீமோ 2:12லூக் 9:26லூக் 12:91 யோவா 2:232 பேது 2:1மாற் 14:30மாற் 8:38மத் 26:70-75 பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன். லூக் 12:49-53அப் 14:4அப் 13:45-50அப் 14:2யோவா 7:40-52எரே 15:10 எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். மீகா 7:5-6மத் 10:21லூக் 21:16மத் 24:10மாற் 13:12 ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே. மீகா 7:6எரே 12:6சங் 41:9ஆதி 4:8-10யோபு 19:13-19சங் 55:13ஆதி 37:17-281 சாமு 17:28 தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை. லூக் 14:26மத் 22:37பிலி 3:7-92 கொரி 5:14-15உபா 33:9யோவா 21:15-17லூக் 21:36மத் 22:8 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை. லூக் 14:27மாற் 8:34மத் 16:24லூக் 9:23-24யோவா 19:17மாற் 10:21மத் 27:32 தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். யோவா 12:25மாற் 8:35-36லூக் 17:33மத் 16:25-26லூக் 9:24வெளி 2:10பிலி 1:20-212 தீமோ 4:6-8 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். யோவா 13:20லூக் 9:48லூக் 10:16மத் 18:52 யோவா 1:9கலா 4:14யோவா 20:21மத் 25:40 தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான். 3 யோவா 1:5-8எபி 6:102இராஜா 4:16-172இராஜா 4:8-10லூக் 14:13-141 இராஜா 18:3-42 யோவா 1:82இராஜா 4:32-37 சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். எபி 6:10மத் 25:40மாற் 9:41-422 கொரி 9:6-15மத் 18:10பிலி 4:15-19லூக் 6:352 கொரி 8:12