உபாகமம் 23

Deuteronomy 23
அத்தியாயம் 23

சபையின் ஒழுங்குகள்

“விரை நசுக்கப்பட்டவனும், ஆணுறுப்பு வெட்டப்பட்டவனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது. கலா 3:28ஏசா 56:3-4உபா 23:2-3லேவி 21:17-21நெகே 13:1-3உபா 23:8புலம் 1:10லேவி 22:22-24 “வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளையும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது. சகரி 9:6ஏசா 57:3எபி 12:8யோவா 8:41 “அம்மோனியனும் மோவாபியனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது. நெகே 13:1-2ரூத் 4:6ஏசா 56:3நெகே 13:23ரூத் 4:10-22நெகே 4:3நெகே 4:7 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினாலும், உன்னை சபிக்கும்படியாக மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினாலும் இப்படிச் செய்யவேண்டும். நெகே 13:22 பேது 2:151 இராஜா 18:4உபா 2:28-291 சாமு 25:11அப் 9:4மத் 25:40எண் 22:17 உன் தேவனாகிய யெகோவா பிலேயாமுக்குச் செவிகொடுக்க விருப்பமில்லாமல், உன் தேவனாகிய யெகோவா உன்மேல் அன்புசெலுத்தியதால், உன் தேவனாகிய யெகோவா அந்த சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறச்செய்தார். உபா 7:7-8ரோம 8:31எபே 2:4-5எண் 24:92 கொரி 4:17எரே 31:3மீகா 6:5எண் 23:5-12 நீ உயிருள்ளவரை அவர்களுக்கு ஒருபோதும் சமாதானத்தையும் நன்மையையும் செய்யாதே. எஸ்றா 9:122 சாமு 12:312 சாமு 8:2நெகே 13:23-25 “ஏதோமியனை வெறுக்காதே, அவன் உன்னுடைய சகோதரன்; எகிப்தியனை வெறுக்காதே, அவனுடைய தேசத்திலே நீ அந்நியனாக இருந்தாய். உபா 10:19யாத் 22:21யாத் 23:9லேவி 19:34ஆதி 25:24-26ஆதி 25:30எண் 20:14அப் 7:10-18 மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படலாம். யாத் 20:5-6உபா 23:1-3எபே 2:12-13ரோம 3:29-30

முகாமிற்குள் அசுத்தம்

“நீ படையெடுத்து உன்னுடைய எதிரிகளுக்கு விரோதமாகப் புறப்படும்போது, தீமையான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக. யோசு 6:18வெளி 19:11-142 நாளாக 19:42 நாளாக 20:3-132 நாளாக 31:20நியாயாதி 20:26யோசு 7:11-13லூக் 3:14 இரவு நேரத்தில் விந்து வெளியேறியதால் அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களுக்குள் இருந்தால், அவன் முகாமிற்கு வெளியே போய், முகாமிற்குள் வராமல், லேவி 15:16எண் 5:2-31 கொரி 5:11-13 மாலையில் தண்ணீரில் குளித்து, சூரியன் மறையும்போது முகாமிற்குள் வரக்கடவன். எபே 5:26-27எபி 10:22லேவி 14:9லேவி 15:5லூக் 11:38-391 பேது 3:21எசேக் 36:25எபி 9:9-10 “உன் மலம் கழிக்கும் இடம் முகாமிற்கு வெளியே இருக்கவேண்டும். உன் ஆயுதங்களுடன் ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்; நீ மலம் கழிக்கும்போது, அந்தக் கோலினால் மண்ணைத் தோண்டி, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடவேண்டும். எசேக் 24:6-8 உன் தேவனாகிய யெகோவா உன்னை இரட்சிக்கவும், உன் எதிரிகளை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் முகாமிற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுத்தமான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாமலிருக்க, உன்னுடைய முகாம் சுத்தமாயிருக்கக்கடவது. 2 கொரி 6:16ஆதி 17:1லேவி 26:12யாத் 3:5

பல்வேறு சட்டங்கள்

“தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்திற்கு வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாதே. 1 சாமு 30:15ஒபதி 1:14 அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்கு விருப்பமான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம். யாத் 22:21யாத் 23:9ஏசா 16:3-4யாக் 2:6எரே 7:6மல்கி 3:5தீத் 3:2-3சகரி 7:10 “இஸ்ரவேலின் மகள்களில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாக 1 இருக்கக்கூடாது. 2இராஜா 23:71 இராஜா 14:24லேவி 19:291 இராஜா 15:121 இராஜா 22:46உபா 22:211 தீமோ 1:101 கொரி 6:9 வேசிப்பணத்தையும், ஆண்புணர்ச்சிக்காரனின் பணத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவராதே; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள். பிலி 3:2வெளி 22:15மத் 7:6எசேக் 16:33ஏசா 61:8லேவி 18:22சங் 5:4-62 பேது 2:22 “கடனாகக் கொடுக்கிற பணத்திற்கும், ஆகாரத்திற்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரனுடைய கையில் வட்டிவாங்காதே. யாத் 22:25லேவி 25:35-37சங் 15:5எசேக் 18:13எசேக் 18:16-18எசேக் 18:7-8எசேக் 22:12லூக் 6:34-35 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா நீ கையிட்டுச்செய்யும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்க உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காதே. உபா 15:10உபா 15:31 கொரி 15:58உபா 14:21லூக் 14:14உபா 28:12ஏசா 1:19நீதி 19:17 “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பொருத்தனை செய்திருந்தால், அதைச் செலுத்தத் தாமதம்செய்யாதே; உன் தேவனாகிய யெகோவா அதை நிச்சயமாக உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும். பிரச 5:4-5சங் 66:13-14சங் 116:18எண் 30:1-16சங் 56:12சங் 76:11உபா 23:18ஆதி 28:20 நீ பொருத்தனை செய்யாமலிருந்தால், உன்மேல் பாவம் இல்லை. உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய யெகோவாவுக்கு உன் வாயினால் நீ பொருத்தனைசெய்து சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக. நீதி 20:25நியாயாதி 11:30-311 சாமு 1:111 சாமு 14:24அப் 23:12அப் 23:21பிரச 5:4-5எரே 44:25-27 “நீ பிறனுடைய திராட்சைத்தோட்டத்தில் நுழைந்தால், உன் ஆசைதீர திராட்சைப்பழங்களைத் திருப்தியாக சாப்பிடலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது. 1 கொரி 10:26ரோம 12:13எபி 13:5 பிறனுடைய விளைச்சலில் நுழைந்தால், உன் கையினால் கதிர்களைப் பறிக்கலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளைப் பயன்படுத்தக்கூடாது. மத் 12:1-2மாற் 2:23லூக் 6:1-2