இஸ்ரவேல் தண்டிக்கப்படுதலும் கட்டப்படுதலும்
உங்கள் சகோதரர்களைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப்பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள். 1 பேது 2:101 தீமோ 1:13எசேக் 37:27ஓசி 2:23ரோம 11:30-312 கொரி 4:1யாத் 19:5-6எசேக் 11:20 உங்கள் தாயுடன் வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குக் கணவனுமல்ல; அவள் தன் விபச்சாரச்செயலை தன் முகத்திலிருந்தும், தன் விபசாரங்களைத் தன் இருப்பிடத்தின் நடுவிலிருந்தும் விலக்கிப்போடவேண்டும். ஏசா 50:1எசேக் 16:25எசேக் 23:45எரே 3:13எரே 3:1ஓசி 1:2ஓசி 2:5எரே 19:3 இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக்கி, அவள் பிறந்தநாளில் இருந்ததுபோல அவளை நிறுத்தி, அவளை வெட்டவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகச்செய்வேன்; எசேக் 16:22ஆமோ 8:11-13எசேக் 19:13ஏசா 32:13-14எரே 13:22யாத் 17:3எரே 22:6எசேக் 16:37-39 அவளுடைய பிள்ளைகள் விபச்சாரப்பிள்ளைகளானதால் அவர்களுக்கு இரங்காதிருப்பேன். எசேக் 8:18எசேக் 9:10ஓசி 1:2ஓசி 1:6யாக் 2:13எரே 13:14எரே 16:52இராஜா 9:22 அவர்களுடைய தாய் விபச்சாரம்செய்தாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இழிவான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுரோமத்தையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என் நாயகர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள். எரே 44:17-18ஓசி 2:8ஓசி 3:1ஏசா 1:21ஓசி 2:12-13எரே 3:1-9தானி 9:5-8எசேக் 16:15-16 ஆகையால், இதோ, நான் உன் வழியை முட்களினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கமுடியாதபடிக்கு மதிலை எழுப்புவேன். யோபு 19:8புலம் 3:7-9யோபு 3:23லூக் 19:43லூக் 15:14-16 அவள் தன் நாயகர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின கணவனிடத்திற்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள். எரே 2:2ஓசி 5:13எரே 14:22லூக் 15:17-20உபா 8:17-18எசேக் 23:22எசேக் 23:4ஓசி 13:6 தனக்கு நான் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகச்செய்தவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக மாற்றினார்கள். ஏசா 1:3எசேக் 16:16-19ஓசி 13:2ஓசி 4:11ஓசி 8:4ரோம 1:28அப் 17:23-25தானி 5:23 ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சைரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுரோமத்தையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன். எசேக் 23:26ஆகா 1:6-11ஓசி 2:3ஏசா 17:10-11மல்கி 1:4மல்கி 3:18தானி 11:13எசேக் 16:27 இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை. எசேக் 23:29லூக் 12:2-31 கொரி 4:5எசேக் 16:36-37ஓசி 13:7-8ஓசி 2:3ஓசி 5:13-14ஏசா 3:17 அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியச்செய்வேன். ஏசா 1:13-14ஆமோ 5:21ஆமோ 8:5எரே 16:9எரே 7:34வெளி 18:22-231 இராஜா 12:32ஆமோ 8:3 என் நேசர்கள் எனக்குக் கொடுத்த கூலி என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சைச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாக்கிப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைச் சாப்பிடும். ஏசா 5:5ஏசா 7:23ஓசி 13:8ஓசி 2:5ஓசி 9:1ஏசா 29:17ஏசா 32:13-15எரே 26:18 அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களுக்காக அவளை விசாரிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். நியாயாதி 3:7ஓசி 13:6ஓசி 11:2ஓசி 13:1எரே 7:9ஓசி 4:6ஓசி 8:14ஓசி 9:7 ஆனாலும், இதோ, நான் அவளுக்கு ஆசைகாட்டி, அவளை வனாந்திரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளுடன் ஆதரவாகப் பேசி, ஏசா 40:1-2எசேக் 20:35-36வெளி 12:6ஏசா 30:18ஆதி 34:3யோவா 6:44வெளி 12:14ரோம 11:26-27 அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோர் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். 1 எசேக் 28:26எரே 2:2ஓசி 11:1யோசு 7:26அப் 14:27ஆமோ 9:14எசேக் 16:22எசேக் 16:60 அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி 2என்று சொல்லுவாய் என்று யெகோவா உரைக்கிறார். ஏசா 54:5ஓசி 2:7எரே 3:14வெளி 19:72 கொரி 11:2யோவா 3:29எபே 5:25-27 பாகால்களுடைய பெயர்களை அவள் வாயிலிருந்து அகற்றிப்போடுவேன்; இனி அவைகளின் பெயரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைவும் இல்லாமற்போகும். யாத் 23:13யோசு 23:7சங் 16:4சகரி 13:2எரே 10:11 அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களுடனும், ஆகாயத்துப் பறவைகளுடனும், பூமியிலே ஊரும் பிராணிகளுடனும், ஒரு உடன்படிக்கைசெய்து, வில்லையும் பட்டயத்தையும் போரையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாகப் படுத்துக்கொண்டிருக்கச்செய்வேன். எசேக் 34:25எசேக் 39:9-10ஏசா 11:6-9சங் 46:9ஏசா 65:25எரே 23:6ஏசா 2:4யோபு 5:23 நித்திய திருமணத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்கமும் இரக்கமுமாக உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். 2 கொரி 11:2வெளி 21:2ஏசா 54:14ஏசா 54:8-10எசேக் 37:25-28யோவா 3:29சங் 85:10வெளி 19:7-9 உண்மையாகவே உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ யெகோவாவை அறிந்துகொள்வாய். யோவா 17:31 யோவா 4:61 யோவா 5:20எரே 24:7கொலோ 1:10ஓசி 2:19எசேக் 38:23எரே 31:33-34 அக்காலத்தில் நான் பதில் கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு பதில் கொடுப்பேன், அவைகள் பூமிக்கு பதில் கொடுக்கும். சகரி 8:12ஏசா 65:24ஏசா 55:10மத் 6:33ரோம 8:321 கொரி 3:21-23சகரி 13:9 பூமி தானியத்திற்கும், திராட்சைரசத்திற்கும், எண்ணெய்க்கும் பதில்கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் பதில் கொடுக்கும். யோவே 2:19ஓசி 1:11ஓசி 1:4எரே 31:12 நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் மக்களல்லாதிருந்தவர்களை நோக்கி: நீ என் மக்களென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார். ரோம 9:25-261 பேது 2:9-10சகரி 13:9ஓசி 1:9-10ரோம 3:29சகரி 2:11வெளி 21:3-4உபா 26:17-19