இஸ்ரவேலுக்கு எதிரான குற்றச்சாட்டு
இஸ்ரவேல் மக்களே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்து மக்களோடு யெகோவாவுக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும், இரக்கமும், தேவனைப்பற்றிய அறிவும் இல்லை. எரே 4:22மீகா 6:21 கொரி 15:34ஏசா 3:13-14ஆமோ 7:16ஓசி 12:2ஏசா 1:18ஏசா 34:1 பொய் சத்தியம் செய்து, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்செய்து, மீறிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது. ஓசி 6:91 தெச 2:15எரே 6:7மீகா 7:2ஓசி 7:1எரே 5:26-27எரே 5:7-9எரே 7:6-10 இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் துவண்டுபோகும்; கடலின் உயிரினங்களும் வாரிக்கொள்ளப்படும். செப்ப 1:3ஏசா 24:4-12நாகூ 1:4ஆமோ 5:16எசேக் 38:20எரே 12:4எரே 4:27-28ஆமோ 8:8 ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக் காண்பிக்கவும், அவர்களைக் கடிந்துகொள்ளவும் முடியாது; உன் மக்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள். உபா 17:12எசேக் 3:26ஓசி 4:17ஆமோ 5:13எரே 18:18மத் 7:3-6ஆமோ 6:10 ஆகையால் நீ பகலிலே இடறிவிழுவாய்; இரவிலே உன்னோடேகூடத் தீர்க்கதரிசியும் இடறிவிழுவான்; நான் உன் தாயை அழிப்பேன். ஓசி 2:2எரே 15:8கலா 4:26சகரி 13:2எசேக் 13:9-16எசேக் 14:7-10எசேக் 16:44-45ஓசி 9:7-8 என் மக்கள் அறிவில்லாததினால் அழிகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாக இல்லாமலிருக்க நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். ஏசா 5:13நீதி 19:2ஓசி 6:62 கொரி 4:3-6ஓசி 4:1மத் 15:8நீதி 1:30-32ஏசா 17:10 அவர்கள் எவ்வளவாகப் பெருகினார்களோ, அவ்வளவாக எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை வெட்கமாக மாறச்செய்வேன். ஓசி 13:6பிலி 3:191 சாமு 2:30ஓசி 10:1ஓசி 4:10மல்கி 2:9எஸ்றா 9:7ஆப 2:16 அவர்கள் என் மக்களின் பாவத்தைச் சாப்பிட்டு, அவர்களுடைய அக்கிரமத்தின்மேல் பசிதாகமாக இருக்கிறார்கள். ஏசா 56:11மீகா 3:11தீத் 1:111 சாமு 2:29லேவி 6:26லேவி 7:6-7மல்கி 1:10சங் 24:4 ஆதலால் மக்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்களுடைய செயல்களின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். எரே 5:31ஏசா 24:2மத் 15:14ஓசி 1:4எரே 23:11-12எசேக் 22:26-31ஓசி 8:13ஓசி 9:9 அவர்கள் யெகோவாவை மதிக்காமல் இருக்கிறதினால் அவர்கள் சாப்பிட்டாலும் திருப்தியடையாமல் இருப்பார்கள்; அவர்கள் விபசாரம் செய்தாலும் பெருகாமல் இருப்பார்கள். மீகா 6:14ஆகா 1:6லேவி 26:26நீதி 13:25சங் 125:5சங் 36:3செப்ப 1:62 நாளாக 24:17 வேசித்தனமும் திராட்சைரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும். நீதி 20:1லூக் 21:34ஏசா 28:7பிரச 7:7ஓசி 4:12ஏசா 5:12நீதி 23:27-35நீதி 6:32 என் மக்கள் மரக்கட்டையிடம் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கைத்தடி அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்று இருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பி அலையச்செய்தது; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திராமல் விபச்சாரவழியில் போனார்கள். எரே 2:27ஓசி 5:4ஆப 2:19உபா 31:16ஏசா 44:18-20எண் 15:392 நாளாக 21:132 தெச 2:9-11 அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதனால் உங்களுடைய மகள்கள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்கள் விபசாரமும் செய்கிறார்கள். எரே 3:6எசேக் 6:13ஏசா 1:29ஆமோ 7:172 சாமு 12:10-12எசேக் 16:16எசேக் 16:25எசேக் 20:28-29 உங்கள் மகள்கள் வேசித்தனம் செய்கிறதினாலும், உங்கள் மருமக்கள்கள் விபசாரம் செய்கிறதினாலும், நான் அவர்களை தண்டிக்காமல் இருப்பேனோ? அவர்கள் விலகி விபச்சாரிகளோடே கூடப்போய் தாசிகளோடே 1பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத மக்கள் அதினால் அகப்பட்டு விழுவார்கள். 1 கொரி 6:16எபே 4:18ஓசி 4:11 இராஜா 14:23-241 இராஜா 15:122இராஜா 23:7தானி 12:10உபா 23:17 இஸ்ரவேலே, நீ என்னைவிட்டுப் போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்திற்கு உட்படாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும், யெகோவாவுடைய ஜீவன்மேல் என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக. ஓசி 12:11ஓசி 9:15ஆமோ 4:4ஆமோ 5:5ஆமோ 8:14எபே 5:11ஓசி 10:5ஓசி 10:8 இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல அடங்காதிருக்கிறது; இப்போது யெகோவா அவர்களை விசாலமான வெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையச் செய்வார். 1 சாமு 15:11ஓசி 11:7ஏசா 22:18ஏசா 5:17ஏசா 7:21-25எரே 14:7எரே 3:11எரே 3:6 எப்பிராயீம் சிலைகளோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு. சங் 81:12வெளி 22:11ஓசி 11:2ஓசி 13:2ஓசி 4:4மத் 15:14ஓசி 12:1 அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் வழிவிலகிப்போகிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று வெட்கமானதை நாடுகிறார்கள். மீகா 3:11நீதி 30:15-161 சாமு 12:3-41 சாமு 8:32இராஜா 17:7-17ஆமோ 5:12உபா 16:19உபா 32:32-33 காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் இறுகப்பிடிக்கும்; அவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்கள். எரே 51:1ஓசி 13:15ஏசா 1:29எரே 4:11-12ஓசி 10:6ஓசி 12:1ஏசா 42:17எரே 17:13