தெற்கு மற்றும் வடக்கு ராஜாக்கள்
மேதியனாகிய தரியு ஆட்சிசெய்த முதலாம் வருடத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன். தானி 9:1தானி 5:31அப் 14:22தானி 10:18 இப்போது நான் உண்மையான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதற்குப்பின்பு நான்காம் ராஜாவாயிருப்பவன் எல்லோரிலும் மிக செல்வச்செழிப்புள்ளவனாகி, அதனால் அவன் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்ஜியத்திற்கு விரோதமாக எல்லோரையும் எழுப்பிவிடுவான். எஸ்றா 4:5-6ஆமோ 3:7தானி 11:25தானி 8:26வெளி 21:5தானி 10:20-21தானி 7:5தானி 8:4 ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, வல்லமையோடு ஆட்சிசெய்து, தனக்கு விருப்பமானபடி செய்வான். தானி 11:16தானி 11:36தானி 8:21தானி 5:19தானி 7:6தானி 4:35தானி 8:4-14எபே 1:11 அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்ஜியம் உடைந்துபோய், வானத்தின் நான்கு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்ஜியம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத மற்றவர்களிடமாகக் கொடுக்கப்படும். தானி 8:22தானி 8:8எரே 12:17தானி 7:2தானி 7:8எரே 12:15எரே 18:7தானி 7:6 தெற்கு திசை ராஜா 1 பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைவிட பலவானாகி ஆட்சிசெய்வான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும். தானி 11:11தானி 11:14தானி 11:25தானி 11:3-4தானி 11:40தானி 11:8-9 அவர்கள் சில வருடங்களுக்குப் பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம்செய்யும்படிக்குத் தெற்கு திசை ராஜாவின் மகள் வடக்குதிசை ராஜாவினிடத்தில் 2 வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இல்லாமற்போகும்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். தானி 11:13தானி 11:15தானி 11:40தானி 11:7யோபு 38:15எசேக் 30:21சங் 10:5சகரி 11:16 ஆனாலும் அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் இடத்தில் எழும்பி, இராணுவத்தோடே வந்து, வடக்குதிசை ராஜாவின் பாதுகாப்பிற்குள் நுழைந்து, அவர்களை விரோதித்து, தானி 11:19-20தானி 11:38-39எசேக் 17:18ஏசா 11:1ஏசா 9:14எரே 12:2யோபு 14:7லூக் 12:20 அவர்களுடைய அதிபதிகளையும், அவர்களுடைய விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையுங்கூட எகிப்திற்குக் கொண்டுபோய், சில வருடங்கள்வரை வடக்குதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாக நிற்பான். ஏசா 37:19ஏசா 46:1-2எரே 43:12-13தானி 1:2-3தானி 10:3உபா 12:3யாத் 12:12ஆதி 31:30 தெற்கு திசை ராஜா அவன் ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வந்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான். ஆனாலும் அவனுடைய மகன்கள் போரிட முயற்சித்து, திரளான படைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாக வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய பாதுகாப்புவரை போரிட்டு சேருவான். தானி 11:26தானி 11:7தானி 9:26எரே 51:42தானி 11:22தானி 11:39-40ஏசா 25:12ஏசா 8:7-8 அப்பொழுது தெற்கு திசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடக்குதிசை ராஜாவோடே போரிடுவான்; இவன் பெரிய படையை ஏகமாக நிறுத்துவான்; ஆனாலும் இந்தப் படை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படும். தானி 8:7தானி 11:5பிரச 9:11-121 இராஜா 20:131 இராஜா 20:28தானி 11:44தானி 11:9-10தானி 2:38 அவன் இந்தப் படையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை கொல்வான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான். 1 பேது 5:5ஆப 2:4-61 தீமோ 3:62 நாளாக 25:192 நாளாக 26:162 நாளாக 32:252இராஜா 14:10அப் 12:22-23 சில வருடங்கள் சென்றபின்பு வடக்குதிசை ராஜா திரும்ப முந்தின படையிலும் பெரிதான படையைச் சேர்த்து, மகா பெரிய படையோடும் திரளான செல்வத்தோடும் நிச்சயமாக வருவான். தானி 12:7தானி 4:16தானி 11:6-7 அக்காலங்களில் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் மக்களிலுள்ள 3 கலகக்காரர்கள் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள். அப் 4:25-28வெளி 17:17 வடக்குதிசை ராஜா வந்து, கோட்டைமதில்களைக் கட்டி, பாதுகாப்பான நகரங்களைப் பிடிப்பான்; தெற்கு திசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட மக்களும் நிலைநிற்காமல்போகும்; எதிர்க்கிறதற்குப் பெலன் இருக்காது. எசேக் 17:17எரே 6:6எசேக் 4:2யோசு 1:5நீதி 21:30-31தானி 11:6தானி 8:7எரே 33:4 ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் விருப்பப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் அழகான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும். தானி 8:9தானி 11:3தானி 11:36தானி 11:41தானி 8:4தானி 8:7தானி 11:45ஏசா 8:8 தன் ராஜ்ஜியத்தின் முழுவல்லமையோடு தானும் தன்னோடேகூட படைவீரர்களும் வர, இவன் தன் முகத்தைத் திருப்புவான்; இப்படிச் செய்து கெடுதல் ஏற்படும்படி அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணைக் கொடுப்பான், ஆனாலும் அவளாலே பலப்படமாட்டான்; அவள் அவன் சார்பில் நிற்கமாட்டாள். 2இராஜா 12:17எசேக் 4:3எசேக் 4:7ரோம 8:312 நாளாக 20:3தானி 11:19தானி 9:26எசேக் 17:17 பின்பு இவன் தன் முகத்தைத் மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேக தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாதிபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியச்செய்வதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான். ஓசி 12:14எரே 31:10செப்ப 2:11எரே 2:10எசேக் 27:6ஆதி 10:4-5ஏசா 66:19நியாயாதி 1:7 ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் கோட்டைகளுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான். எசேக் 26:21சங் 37:36எரே 46:6யோபு 20:8சங் 27:2 செழிப்பான ராஜ்ஜியத்தில் வரிவசூலிப்பவனைத் திரியச்செய்கிற ஒருவன் தன் இடத்தில் எழும்புவான்; ஆகிலும் சில நாட்களுக்குள் கோபமில்லாமலும் சண்டையில்லாமலும் நாசமடைவான். ஏசா 60:172இராஜா 23:35தானி 11:21தானி 11:7உபா 15:2-3நீதி 30:33 அவன் இடத்தில், அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்ஜியபாரத்தின் மேன்மையைக் கொடுக்காதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாக நுழைந்து, ஆசைவார்த்தை பேசி, ராஜ்ஜியத்தைப் பிடித்துக்கொள்வான். தானி 11:34தானி 8:25நியாயாதி 9:1-20சங் 55:211 சாமு 3:132 சாமு 15:2-6தானி 11:20தானி 11:32 வேகமாக வருகிற படைகள் இவனாலே வேகமாக முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் 4 முறிக்கப்படுவான். தானி 11:10தானி 8:10-11தானி 9:26தானி 8:25ஆமோ 8:8ஆமோ 9:5ஏசா 8:7-8நாகூ 1:8 ஏனென்றால் அவனோடே சம்பந்தம்செய்த நாட்கள்முதல் அவன் தந்திரமாக நடந்து, கொஞ்சம் மக்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்வான். 2 தெச 2:9தானி 8:252 கொரி 11:3எசேக் 17:13-19ஆதி 34:13நீதி 11:18சங் 52:2ரோம 1:29 தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கும்போது, அவன் உட்பிரவேசித்து, தன் முன்னோர்களும் தன் முன்னோர்களின் முன்னோர்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச் சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, கோட்டைகளுக்கு விரோதமாகத் தனக்குள் சூழ்ச்சிகளை யோசிப்பான்; சிலகாலம்வரை இப்படியிருக்கும். எசேக் 38:10தானி 7:25நியாயாதி 9:4மத் 9:4நெகே 9:25நீதி 17:8நீதி 19:6நீதி 23:7 பின்னும் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாகப் பெரிய படையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் பெலத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தெற்கு திசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் போரிடுவான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் தீய ஆலோசனை செய்திருந்தபடியால், அவன் நிற்கமாட்டான். நீதி 28:25தானி 11:2நீதி 15:18தானி 11:10 அவனுடைய உணவுகளைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் வேகமாக வரும்; அநேகர் கொலைசெய்யப்பட்டு விழுவார்கள். தானி 11:10யோவா 13:182இராஜா 10:6-92இராஜா 8:142 சாமு 4:2-12தானி 11:22தானி 11:40மத் 26:23 இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியிலிருந்து பொய்பேசுவார்கள்; ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்திற்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். சங் 12:2தானி 11:35ஆப 2:3எரே 9:3-5தானி 11:40தானி 8:19எரே 41:1-3நீதி 12:20 அவன் திரளான செல்வத்தோடு தன் தேசத்திற்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான். அப் 3:25தானி 11:22தானி 11:30-32தானி 8:24 குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடத்தை முன்நடத்தையைப்போல் இருக்காது. ஏசா 14:31அப் 17:26தானி 10:1தானி 11:23தானி 11:25தானி 8:19கலா 4:2 அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனவேதனையடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபம்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான். ஆதி 10:4எண் 24:24தானி 11:28ஏசா 23:12எரே 2:10தானி 7:25ஏசா 23:1மத் 24:10 ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட படைகள் எழும்பி, பாதுகாப்பான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அனுதினபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள். தானி 12:11தானி 9:27மத் 24:15தானி 8:11-13மாற் 13:14அப் 13:40-41எசேக் 24:21-22லூக் 21:20 உடன்படிக்கைக்குத் துரோகிகளாக இருக்கிறவர்களை முகதாட்சணியம்செய்து வஞ்சக மார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற மக்கள் திடன்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள். 1 நாளாக 28:9சங் 9:10யோவா 17:3சகரி 10:12மீகா 5:7-92 தீமோ 2:1-31 யோவா 2:3-4சகரி 9:13-16 மக்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாட்கள்வரை பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள். யோவா 16:2மல்கி 2:7மத் 24:9வெளி 13:7-10தானி 12:10தானி 12:3-4எபி 11:34ஏசா 32:3-4 இப்படி அவர்கள் விழும்போது கொஞ்சம் ஒத்தாசையால் உதவிபெறுவார்கள்; அப்பொழுது அநேகர் முகதாட்சணியம்செய்து அவர்களை ஒட்டிக்கொள்வார்கள். மத் 7:15ரோம 16:181 யோவா 4:1அப் 20:29-301 யோவா 2:18-191 யோவா 4:51 தீமோ 4:1-22 கொரி 11:13-15 அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலம்வரை இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாட்கள் செல்லும். சகரி 13:9மல்கி 3:2-4வெளி 7:14நீதி 17:3வெளி 2:101 பேது 1:6-7தானி 12:10-11யாக் 1:2
தன்னைத்தான் உயர்த்தின ராஜா
ராஜா தனக்கு விருப்பமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீரும்வரை அவனுக்குக் கைகூடிவரும்; தீர்மானிக்கப்பட்டது நடந்தேறும். வெளி 13:5-62 தெச 2:4தானி 11:16தானி 8:19உபா 10:17ஏசா 14:13தானி 2:47ஏசா 10:25 அவன் தன் முன்னோர்களின் தெய்வங்களை மதிக்காமலும், பெண்களின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதிக்காமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி, 1 தீமோ 4:32 தெச 2:4ஏசா 14:13உபா 21:11உபா 5:21எசேக் 24:16ஆதி 3:16ஆதி 3:5 பாதுகாப்புகளின் தேவனைத் தன் இடத்திலே கனப்படுத்தி, தன் முற்பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், விலையுயர்ந்த பொருட்களினாலும் கனப்படுத்துவான். 1 தீமோ 4:1ஏசா 44:9வெளி 13:12-17வெளி 17:1-5வெளி 18:12 அவன் பாதுகாப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தெய்வங்களுக்காகவும் செய்வது என்னவென்றால், 5அவைகளை மதிக்கிறவர்களை மிகவும் கனப்படுத்தி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் பணத்திற்காகப் பங்கிடுவான். வெளி 18:9-13 முடிவு காலத்திலோ வென்றால், தெற்குதிசை ராஜா அவனுக்கு எதிர்த்து நிற்பான்; வடக்குதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் திரளான கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாக வருவான்; அவன் தேசங்களுக்குள் நுழைந்து, அவைகளை நெடுகக் கடந்து போவான். தானி 11:10தானி 11:35ஏசா 5:28வெளி 16:12தானி 12:4எசேக் 38:4ஏசா 21:1எரே 4:13 அவன் அழகான தேசத்திலும் வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் மக்களில் முக்கியமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள். எரே 48:47எரே 49:6தானி 11:16தானி 11:45தானி 8:9எசேக் 38:8-13ஏசா 11:13-15எரே 9:26 அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை. எசேக் 29:14வெளி 11:8சகரி 10:10-11சகரி 14:17 எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான செல்வங்களையும் விலையுயர்ந்த எல்லா பொருட்களையும் ஆண்டுகொள்ளுவான்; லிபியர்களும் எத்தியோப்பியர்களும் அவனுக்குப் பின்செல்லுவார்கள். 2 நாளாக 12:3நாகூ 3:9யாத் 11:8எசேக் 30:4-5நியாயாதி 4:10எரே 46:9-10எசேக் 38:5 ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கச்செய்யும்; அப்பொழுது அவன் அநேகரை கொடூரமாக அழிக்க மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய், வெளி 16:12வெளி 19:19-21தானி 11:11தானி 11:30எசேக் 38:9-12வெளி 17:13 மத்திய தரைக் கடல் சமுத்திரங்களுக்கு, இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையின் அருகில் தன் அரண்மனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசைசெய்பவர் இல்லாமல், அவன் முடிவடைவான். 2 தெச 2:4தானி 8:252 தெச 2:8தானி 11:16தானி 11:41தானி 2:35தானி 7:26எசேக் 38:22-23