சங்கீதங்கள் 85

Psalms 85
சங்கீதம் 85

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல்.

யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, எரே 30:18சங் 14:7எசேக் 39:25சங் 77:7யோவே 2:18யோவே 3:1லேவி 26:42சங் 126:1-2

யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.

உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, மீகா 7:18கொலோ 2:13சங் 32:1அப் 13:39எரே 50:20எண் 14:19சங் 79:8-9சங் 78:38

அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)

உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உபா 13:17சங் 106:23ஏசா 12:1யோனா 3:9ஏசா 6:7யோவா 1:29சங் 78:38யாத் 32:11-12

உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.

எங்கள் இரட்சிப்பின் தேவனே, புலம் 5:21சங் 80:3சங் 80:7மீகா 7:7எரே 31:18மல்கி 4:6மீகா 7:18-20சங் 25:2

நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,

எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.

என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ? சங் 79:5சங் 80:4ஏசா 64:9-12சங் 74:1லூக் 21:24மீகா 7:18சங் 77:9சங் 89:46

தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?

உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி ஆப 3:2சங் 80:18ஏசா 57:15சங் 90:14ஓசி 6:2சங் 71:20சங் 53:6சங் 138:7

நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?

யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, சங் 91:16சங் 50:23எரே 42:12

உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.

கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்; சங் 29:11வெளி 3:19யோவா 14:27ஆப 2:1சகரி 9:102 தீமோ 2:19எபி 10:26-29ஆதி 34:7

அவர் தம்முடைய மக்களுக்கும்

தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்;

அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.

நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி, ஏசா 46:13சகரி 2:5யோவா 7:17சகரி 2:8லூக் 2:32சங் 24:4-5அப் 11:13-14எசேக் 26:20

அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.

கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதி 3:3சங் 89:14ஏசா 32:16-18யோவா 1:17சங் 100:5சங் 72:3ரோம 5:21ஏசா 45:24

நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், ஏசா 45:8யோவா 14:61 யோவா 5:20-21ஏசா 42:21மத் 17:52 கொரி 5:21எபே 1:6ஏசா 4:2

நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.

யெகோவா நன்மையானதைத் தருவார்; யாக் 1:17சங் 84:11சங் 67:6லேவி 26:4ஏசா 30:23-241 கொரி 1:30எபே 1:3அப் 21:20

நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.

நீதி அவருக்கு முன்னாகச் சென்று, யோவா 13:34சங் 89:141 யோவா 2:61 பேது 2:18-241 பேது 4:12 கொரி 3:18கலா 2:20ஏசா 58:8

அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.