1 யோவான் 5

1 John 5
அத்தியாயம் 5

தேவகுமாரன்மேலுள்ள விசுவாசம்

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறக்கச்செய்தவரிடம் அன்பு செலுத்துகிற எவனும் அவரால் பிறந்தவனிடமும் அன்பு செலுத்துகிறான். யோவா 1:12-131 யோவா 2:29யோவா 8:421 யோவா 4:71 பேது 1:22-231 யோவா 3:141 யோவா 5:41 யோவா 3:9 நாம் தேவனிடத்தில் அன்புசெலுத்தி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று அறிந்துகொள்ளுகிறோம். யோவா 13:34-351 யோவா 2:51 யோவா 3:22-241 யோவா 4:21யோவா 15:17 தேவனிடத்தில் அன்‌புகூறுவது என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதே ஆகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவைகளும் இல்லை. யோவா 14:15யோவா 15:10உபா 7:9யோவா 14:21-242 யோவா 1:61 யோவா 2:3மீகா 6:8யோவா 15:14 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை மேற்கொள்ளும் ஜெயம். 1 கொரி 15:571 யோவா 4:4யோவா 16:331 யோவா 3:91 யோவா 5:5ரோம 8:35-37வெளி 3:21வெளி 12:11 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனைத்தவிர உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? 1 யோவா 4:151 யோவா 5:1 இயேசுகிறிஸ்துவாகிய இவரே தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; தண்ணீரினாலே மாத்திரமல்ல, தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாக இருப்பதினால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். எபி 9:14யோவா 15:26யோவா 16:13எபி 12:24யோவா 14:17மாற் 14:24லூக் 22:201 பேது 1:2 பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவர் என்பவர்களே, இந்த மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள்; மத் 28:192 கொரி 13:14அப் 5:32மத் 3:16-17யோவா 1:11 யோவா 5:6அப் 2:33யோவா 8:54 பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, தண்ணீர், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 1 யோவா 5:6-7யோவா 15:261 பேது 3:21அப் 2:2-4ரோம 8:162 கொரி 1:22மத் 26:26-28மத் 28:19 நாம் மனிதனுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறோம். அதைவிட தேவனுடைய சாட்சி மேன்மையாக இருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. மத் 3:16-17அப் 17:31யோவா 8:17-19மத் 17:51 யோவா 5:10அப் 5:32எபி 2:4யோவா 10:38 தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே பெற்றிருக்கிறான்; தேவனை விசுவாசிக்காதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசிக்காததினால், அவரைப் பொய்யராக்குகிறான். ரோம 8:16கலா 4:6யோவா 3:33யோவா 5:38எபி 3:121 யோவா 5:1கொலோ 3:3எண் 23:19 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். ரோம 6:231 யோவா 2:25யோவா 3:361 யோவா 5:201 யோவா 4:9யோவா 1:41 யோவா 1:1-3யோவா 17:2-3 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். யோவா 3:36யோவா 5:24யோவா 1:121 கொரி 1:30யோவா 3:15மாற் 16:162 யோவா 1:91 யோவா 2:23-24

கருத்துக்களை நிறைவுசெய்தல்

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். யோவா 20:31யோவா 1:121 யோவா 3:232 பேது 1:10-11யோவா 3:181 யோவா 2:211 தீமோ 1:15-16கலா 4:6 நாம் எதையாவது அவருடைய விருப்பத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கிற நம்பிக்கை. யோவா 14:13எரே 29:12-13எரே 33:31 யோவா 3:21-22யோவா 15:7மத் 7:7-11மத் 21:22சங் 34:17 நாம் எதைக்கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம். லூக் 11:9-10மாற் 11:24நீதி 15:291 யோவா 5:18-20எரே 15:12-13 மரணத்திற்குரியதாக இல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்வதை ஒருவன் பார்த்தால், அவன் ஜெபம் செய்யவேண்டும், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்திற்குரியதாக இல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்திற்குரியதான பாவமும் உண்டு, அதைக்குறித்து ஜெபம்செய்ய நான் சொல்வதில்லை. எபி 6:4-61 சாமு 2:25எரே 11:14எபி 10:26-31மாற் 3:28-30லூக் 12:102 பேது 2:20-22மத் 12:31-32 அநீதி எல்லாம் பாவம்தான்; என்றாலும் மரணத்திற்குரியதாக இல்லாத பாவமும் உண்டு. 1 யோவா 3:4யாக் 1:151 யோவா 5:16எசேக் 18:26-32யாக் 4:7-101 யோவா 2:1உபா 12:32ஏசா 1:18 தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவனை தேவன் தீமையிலிருந்து காக்கிறார், சாத்தான் அவனைத் தொடமாட்டான். 1 யோவா 3:91 யோவா 5:41 யோவா 5:1யூதா 1:21யூதா 1:241 யோவா 3:31 பேது 1:23யாக் 1:27 நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்றும், உலகம் முழுவதும் சாத்தானுக்குள் இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம். 2 கொரி 4:41 யோவா 4:4-6எபே 2:2கலா 1:4வெளி 12:9யோவா 12:31யோவா 16:111 யோவா 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். யோவா 17:3லூக் 24:45யோவா 14:91 தீமோ 3:16ஏசா 44:61 யோவா 5:11-13யோவா 1:1-31 யோவா 4:16 பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென். 1 கொரி 10:141 கொரி 10:7யாத் 20:3-42 கொரி 6:16-171 தெச 1:9மத் 6:131 யோவா 2:1வெளி 9:20