தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடிய பாடல்.
யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்; 1 தெச 5:18கொலோ 3:17சங் 145:1-2எபே 5:20சங் 71:8சங் 71:14-152 தெச 2:13அப் 16:25
அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும்.
யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்; எரே 9:241 கொரி 1:31சங் 119:74சங் 44:81 தீமோ 1:15-162 கொரி 10:17ஏசா 45:25சங் 22:22-24
ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; சங் 69:30லூக் 1:46சங் 148:1-14வெளி 19:5-6சங் 40:16சங் 66:8சங் 35:27சங் 103:20-22
நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
நான் யெகோவாவை தேடினேன், சங் 18:6மத் 7:7சங் 116:1-6சங் 56:32 தீமோ 1:7ஏசா 12:2யோனா 2:2சங் 31:22
அவர் எனக்குச் செவிகொடுத்து,
என்னுடைய எல்லாப் பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; எபி 12:2சங் 123:1-2சங் 18:28சங் 25:3ஏசா 60:5சங் 36:9சங் 97:11ஏசா 45:22
அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, சங் 34:17-19சங் 3:4சங் 10:17சங் 66:16-20சங் 40:172 சாமு 22:1ஆதி 48:16வெளி 7:14-17
அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார்.
யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி சங் 91:11தானி 6:22எபி 1:142இராஜா 19:352இராஜா 6:17ஆதி 32:1-2மத் 18:10சகரி 9:8
முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார்.
யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; சங் 119:103எபி 6:4-51 பேது 2:2-3எரே 31:14சங் 63:5சங் 84:12சங் 36:7சகரி 9:17
அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; ரோம 8:32பிலி 4:19சங் 23:1லூக் 12:30-32சங் 31:23சங் 89:7வெளி 15:3-41 கொரி 3:22-23
அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; சங் 84:11மத் 6:32சங் 104:21லூக் 1:51-53யோபு 4:10-11
யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது.
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; நீதி 1:7நீதி 2:1-9சங் 111:10சங் 32:8ஏசா 28:9நீதி 8:17மத் 18:2-4நீதி 4:1
யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி, 1 பேது 3:10-12உபா 30:20உபா 6:2சங் 91:16பிரச 12:13பிரச 3:13சங் 4:6யோபு 7:7
நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்?
உன் நாவை தீங்கிற்கும், யாக் 3:5-10சங் 141:3நீதி 21:231 பேது 2:22கொலோ 3:9யாக் 1:19யாக் 1:26நீதி 13:3
உன்னுடைய உதடுகளை பொய் வார்த்தைகளுக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சங் 37:271 பேது 3:11எபி 12:143 யோவா 1:11ரோம 12:9யாக் 3:17-18ரோம 12:18நீதி 3:7
சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள்.
யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது; 1 பேது 3:12சங் 34:17சங் 33:18யோபு 36:7சங் 130:2சங் 34:62 நாளாக 6:40தானி 9:17-23
அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, நீதி 10:7எரே 17:13எரே 44:11யோபு 18:17லேவி 17:10ஆமோ 9:4பிரச 8:10எசேக் 14:7-8
யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.
நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு, சங் 145:18-20ஏசா 65:24சங் 34:19சங் 34:6சங் 91:15சங் 34:15அப் 12:5-112 நாளாக 32:24
அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, சங் 147:3சங் 145:18ஏசா 57:15ஏசா 61:1சங் 51:17எசேக் 36:26ஏசா 66:2சங் 85:9
நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார்.
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும், சங் 34:171 பேது 4:12-13சங் 34:62 கொரி 4:17யோவா 16:33சங் 34:42 தீமோ 3:11-12யோபு 5:19
யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார்.
அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; யோவா 19:36சங் 35:10சங் 91:12தானி 6:22-24
அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; சங் 94:23ஏசா 3:11நீதி 24:162 தெச 1:9சங் 37:12-15சங் 89:23லூக் 19:141 சாமு 19:4-5
நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; சங் 103:41 பேது 1:18-19சங் 31:5சங் 71:232 சாமு 4:91 இராஜா 1:29வெளி 5:9ரோம 8:31-39
அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.