சபையிலுள்ள பிரிவினைகள்
மேலும், சகோதரர்களே, நான் உங்களை ஆவியானவருக்குரியவர்கள் என்று நினைத்து உங்களோடு பேசாமல், மாம்சத்திற்குரியவர்களென்றும், கிறிஸ்துவிற்குள் குழந்தைகளென்றும் நினைத்துப் பேசவேண்டியதாக இருக்கிறது. எபி 5:131 கொரி 2:14-15எபே 4:13-141 கொரி 14:201 கொரி 2:6ரோம 7:141 கொரி 3:3-41 யோவா 2:12 நீங்கள் பெலன் இல்லாதவர்களானதால், உங்களுக்கு உணவு கொடுக்காமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் சரீரத்திற்குரியவர்களாக இருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. எபி 5:11-141 பேது 2:2யோவா 16:12 பொறாமையும் வாக்குவாதமும் வேறுபாடுகளும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாக இருந்து மனித வழிமுறையில் நடக்கிறீர்களல்லவா? யாக் 3:16கலா 5:15தீத் 3:32 கொரி 12:20எபே 4:22-24யாக் 4:1-21 கொரி 1:111 கொரி 11:18 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், மற்றொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் சரீரத்திற்குரியவர்களல்லவா? 1 கொரி 1:121 கொரி 3:31 கொரி 4:6 பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு கிருபை அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு காரணமாக இருந்த ஊழியக்காரர்கள்தானே. 2 கொரி 6:42 கொரி 6:11 பேது 4:102 கொரி 3:61 கொரி 3:102 கொரி 11:232 கொரி 3:32 கொரி 4:5 நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர்ப் பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். 1 கொரி 3:9-10நீதி 11:252 கொரி 10:14-151 கொரி 9:1அப் 18:4-111 கொரி 1:30அப் 19:1ஏசா 55:10-11 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும். யோவா 15:5கலா 6:32 கொரி 12:9சங் 115:11 கொரி 13:2தானி 4:35ஏசா 40:17ஏசா 41:29 மேலும் நடுகிறவனும் தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தகுந்தபடி கூலியைப் பெறுவான். ரோம 2:62 யோவா 1:8யோவா 4:36-38மத் 16:27சங் 62:121 கொரி 15:58கலா 6:7-8வெளி 22:12 நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாக இருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கிறீர்கள். 1 பேது 2:5எபே 2:20-222 கொரி 6:11 கொரி 3:16மாற் 16:20எபே 2:10ஏசா 61:11மத் 9:37 எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்ப ஆசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் எப்படிக் கட்டுகிறான் என்று கவனமாக இருக்கவேண்டும். 1 கொரி 3:11எபே 2:20ரோம 15:20தானி 12:3மத் 24:451 கொரி 3:5-61 கொரி 9:21 பேது 4:11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறு அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் முடியாது. எபே 2:20ஏசா 28:162 தீமோ 2:19அப் 4:11-121 பேது 2:6-8மத் 16:18கலா 1:7-92 கொரி 11:2-4 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக்கொண்டு கட்டினால், 2 தீமோ 4:32 தீமோ 3:72 தீமோ 2:20கொலோ 2:18-231 பேது 1:72 கொரி 2:17எபி 13:9மத் 15:6-9 அவனவனுடைய வேலைப்பாடு வெளிப்படும்; நியாயத்தீர்ப்பு நாளானது அதை வெளிப்படுத்தும். ஏனென்றால், அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்று அக்கினியானது பரிசோதிக்கும். 1 பேது 1:71 கொரி 3:14-15வெளி 20:121 கொரி 4:5சகரி 13:91 பேது 4:122 பேது 3:10ரோம 2:16 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். 1 கொரி 3:8மத் 25:21-231 கொரி 4:5மத் 24:45-471 பேது 5:11 பேது 5:41 தெச 2:19தானி 12:3 ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும். 2 யோவா 1:81 கொரி 3:12-13யூதா 1:23வெளி 3:181 பேது 4:18சகரி 3:2ஆமோ 4:11சங் 66:12
தேவனுடைய ஆலயம்
நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாக இருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 1 கொரி 6:19எசேக் 36:272 கொரி 6:16ரோம 8:11எபே 2:21-22ரோம 8:9யோவா 14:171 பேது 2:5 ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், தேவன் அவனைக் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாக இருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 6:18-20எசேக் 43:12எசேக் 7:22எண் 19:20எசேக் 23:38-39எசேக் 5:11லேவி 20:3சங் 79:1 ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். நீதி 3:51 கொரி 1:18-21கலா 6:3ஏசா 5:211 கொரி 8:1-2லூக் 18:17யாக் 1:22மத் 18:4 ஏனெனில், இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாக இருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், யோபு 5:13சங் 141:101 கொரி 1:19-20ரோம 1:21-22ஏசா 44:251 கொரி 2:6சங் 9:15-16சங் 7:14-15 ஞானிகளுடைய எண்ணங்கள் வீணாக இருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது. சங் 94:11கொலோ 2:8ரோம 1:21யோபு 11:11-12சங் 2:1 இப்படியிருக்க, ஒருவனும் மனிதர்களைக்குறித்து மேன்மைபாராட்டாமலிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே; ரோம 8:32ரோம 8:28எரே 9:23-241 கொரி 4:6வெளி 21:71 கொரி 1:12-171 கொரி 3:4-7ரோம 4:13 பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், உலகமானாலும், ஜீவனானாலும் மரணமானாலும், நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், எல்லாம் உங்களுடையது; எபே 4:11-12பிலி 1:211 கொரி 3:5-81 கொரி 9:19-222 கொரி 4:5ரோம 8:37-391 கொரி 1:12 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர். கலா 3:291 கொரி 11:31 கொரி 15:23யோவா 17:18யோவா 17:9-102 கொரி 10:7யோவா 17:21ரோம 14:8