எபிரெயர் 5

Hebrews 5
அத்தியாயம் 5

அன்றியும், மனிதர்களில் இருந்து தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த, மனிதர்களுக்காக தேவகாரியங்கள் செய்வதற்கு நியமிக்கப்படுகிறான். எபி 8:3எபி 10:11எபி 11:4எபி 2:17எபி 7:27எபி 9:9லேவி 9:15-21யாத் 29:1-37 பிரதான ஆசாரியனும் பலவீனமுள்ளவனாக இருக்கிறதினாலே, அறியாதவர்களுக்கும் வழி தவறிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாக இருக்கிறான். எபி 4:15எபி 2:182 கொரி 12:9-10எபி 7:28எபி 12:132 கொரி 12:5கலா 4:13எண் 15:22-29 இதனால், அவன் மக்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாக இருக்கிறது. எபி 9:7லேவி 16:6லேவி 9:7எபி 7:27லேவி 16:15லேவி 4:3-12யாத் 29:12-19லேவி 8:14-21 மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்படாமல், ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்திற்குத் தானாக ஏற்படுகிறதில்லை. யாத் 28:1எண் 16:40எண் 16:51 நாளாக 23:132 நாளாக 26:18யோவா 3:27எண் 16:35எண் 16:46-48 அப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்று அவரோடு சொன்னவரே அவரை உயர்த்தினார். சங் 2:7யோவா 8:54யோவா 7:18அப் 13:33எபி 1:5ரோம 8:3எபி 1:1மீகா 5:2 அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். சங் 110:4எபி 7:17எபி 7:21எபி 7:3ஆதி 14:18-19எபி 5:10எபி 6:20எபி 7:15 அவர் சரீரத்தில் இருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லமை உள்ளவரை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினால் கேட்கப்பட்டு, லூக் 22:41-44யோவா 17:1மத் 27:46மாற் 14:32-39யோவா 17:4-5யோவா 12:27-28மாற் 15:34மத் 26:28-44 அவர் குமாரனாக இருந்தும், அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, பிலி 2:8எபி 10:5-9யோவா 4:34ஏசா 50:5-6யோவா 15:10யோவா 6:38எபி 3:6எபி 1:5 தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, எபி 9:15எபி 12:2எபி 2:10எபி 9:12அப் 5:321 பேது 1:222 தெச 1:8தானி 9:24 மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது. எபி 5:5-6எபி 6:20

இடறிப்போவதைக்குறித்த எச்சரிக்கை

இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம்; நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால், அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும். மத் 13:152 பேது 3:16அப் 28:27யோவா 16:12ஏசா 6:10யோவா 6:6லூக் 24:25மாற் 8:21 காலத்தைப் பார்த்தால், போதகர்களாக இருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படை உபதேசங்களை மீண்டும் உபதேசிக்கவேண்டியதாக இருக்கிறது; நீங்கள் திடமான உணவைச் சாப்பிடுகிறவர்களாக இல்லை, பாலைக் குடிக்கிறவர்களானீர்கள். எபி 6:11 கொரி 3:1-31 பேது 2:2எபி 5:13ஏசா 28:9-10கொலோ 3:16எஸ்றா 7:10ஏசா 28:13 பாலைக் குடிக்கிறவன் குழந்தையாக இருக்கிறதினாலே நீதியின் வசனத்தில் அனுபவம் இல்லாதவனாக இருக்கிறான். 1 கொரி 14:201 பேது 2:22 தீமோ 3:16எபே 4:14ஏசா 28:91 கொரி 3:11 கொரி 13:112 கொரி 3:9 திடமான உணவானது, நன்மை எது? தீமை எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது. 1 கொரி 2:14-151 தெச 5:21பிலி 1:9-101 கொரி 2:6எபே 1:18ஏசா 7:15எபே 4:13மத் 6:22-23