1 பேதுரு 2

1 Peter 2
அத்தியாயம் 2

இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால், எபே 4:31யாக் 1:21யாக் 4:111 பேது 3:10கொலோ 3:5-8தீத் 3:3-5எபே 4:22-251 பேது 4:4 எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு, எபி 5:12-13எபே 4:152 பேது 3:181 கொரி 3:1-2மாற் 10:151 கொரி 14:20மத் 18:3யோபு 17:9 நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள். சங் 34:8எபி 6:5-6சங் 63:5சங் 24:8சகரி 9:17சங் 9:10உன்னத 2:3

ஜீவனுள்ள கல்லும், தெரிந்துகொள்ளப்பட்ட மக்களும்

மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும், சங் 118:22-23அப் 4:11-121 பேது 2:7ஏசா 28:16லூக் 20:17-18மாற் 12:10-11சகரி 3:9தானி 2:34 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். எபே 2:20-221 பேது 2:91 கொரி 3:9வெளி 5:101 கொரி 3:16ஏசா 61:6எபி 13:15-16எபி 3:6 அப்படியே: ஏசா 28:16ரோம 9:32-331 பேது 2:4எபே 2:20சகரி 10:4ரோம 10:11மாற் 12:10ஏசா 50:7

“இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும்

விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்;

அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. ஆகவே, சங் 118:22-23அப் 4:11-12மாற் 12:10-11மத் 21:421 பேது 2:81 பேது 1:82 கொரி 2:16அப் 26:19

விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது;

கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும்,

விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;” அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஏசா 8:141 கொரி 1:231 பேது 2:7ரோம 9:32-33ரோம 9:22யூதா 1:41 தெச 5:92 பேது 2:3

நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து யாத் 19:5-6உபா 7:6வெளி 1:6வெளி 5:10ஏசா 61:62 தீமோ 1:9உபா 26:18-19உபா 14:2

தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய

புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும்,

ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும்,

அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.

முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, ஓசி 2:23எபி 4:16ஓசி 1:9-10ரோம 9:25-26ரோம 11:6-71 தீமோ 1:13ரோம 10:19ரோம 11:30

இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்;

முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை,

இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.

பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி, 1 யோவா 2:15-17கலா 5:241 பேது 4:2எபி 11:13ரோம 8:131 நாளாக 29:15யாக் 4:1ரோம 12:1 யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 1 பேது 3:16மத் 5:16தீத் 2:7-8பிலி 2:15-162 கொரி 8:211 தெச 4:121 தீமோ 4:12யாக் 3:13

அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்திருங்கள்

நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள். தீத் 3:1ரோம 13:1-71 தீமோ 2:1-2லூக் 20:25நீதி 24:21எரே 29:7மத் 22:21மாற் 12:17 மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். ரோம 13:3-4 நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. 1 பேது 3:17தீத் 2:81 பேது 2:121 தெச 5:18மத் 7:261 தெச 4:3எரே 4:22நீதி 9:6 சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள். கலா 5:13ரோம 6:221 கொரி 7:22ரோம 6:18கலா 5:1யாக் 1:25எபே 6:6யாக் 2:12 எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள். நீதி 24:21ரோம 12:10ரோம 13:71 பேது 5:5பிலி 2:3எபி 13:11 பேது 1:221 தீமோ 6:1 வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். தீத் 2:9-10கொலோ 3:22-25எபே 6:5-71 தீமோ 6:1-3நீதி 3:32கலா 5:22யாக் 3:17நீதி 8:13 ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும். மத் 5:10-121 பேது 2:201 பேது 3:14-171 கொரி 15:10லூக் 6:32யோவா 15:21ரோம 13:52 கொரி 1:12 நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும். 1 பேது 2:191 பேது 3:17மத் 5:10-121 பேது 3:141 பேது 4:14-16லூக் 6:32எபே 5:10மத் 5:47 இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார். 1 யோவா 2:6மத் 16:24யோவா 13:15எபே 5:21 யோவா 3:161 கொரி 11:11 பேது 2:241 பேது 4:1

அவர் பாவம் செய்யவில்லை, ஏசா 53:9எபி 4:152 கொரி 5:211 யோவா 3:51 யோவா 2:1எபி 7:26-27வெளி 14:5எபி 9:28

அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;

அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், ஏசா 53:71 பேது 4:19எபி 12:3சங் 37:5அப் 4:291 பேது 3:92 தீமோ 1:12அப் 8:32-35

பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும்,

நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். ஏசா 53:4-6மத் 8:17ரோம 6:11வெளி 22:21 யோவா 2:29யாக் 5:16எபி 9:28கலா 3:13 சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள். ஏசா 53:6எசேக் 34:6லூக் 15:4-6அப் 20:28யோவா 10:11-16ஏசா 40:11சங் 119:176எசேக் 34:11-16