வரப்போகும் தூதன்
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் செய்வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்திற்கு உடனடியாக வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். மல்கி 4:5லூக் 1:76மாற் 1:2-3ஏசா 63:9லூக் 7:26-28மத் 11:10-11அப் 19:4மல்கி 2:7 ஆனாலும் அவர் வரும் நாளைத் தாங்கிக்கொள்பவன் யார்? அவர் வெளிப்படும்போது நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய நெருப்பைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். சகரி 13:91 கொரி 3:13-15ஏசா 4:41 பேது 2:7-8வெளி 6:17லூக் 21:36லூக் 3:17சங் 2:7 அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்; அவர் லேவியின் சந்ததியைச் சுத்திகரித்து, அவர்கள் யெகோவாவுடையவர்களாக இருப்பதற்காகவும், நீதியாகக் 1 காணிக்கையைச் செலுத்துவதற்காகவும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். ஏசா 1:25நீதி 17:3சகரி 13:9எபி 12:10தானி 12:10எபே 5:26-27சங் 66:10தீத் 2:14 அப்பொழுது ஆரம்பநாட்களிலும் கடந்த வருடங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்கும். 2 நாளாக 7:1-3ஏசா 56:7சகரி 8:3எசேக் 20:40-41எசேக் 43:26-27எரே 30:18-201 நாளாக 15:261 நாளாக 16:1-3 நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரர்களுக்கும், விபசாரக்காரர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும், திக்கற்றபிள்ளைகளுமாகிய கூலிக்காரர்களின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கும், அநியாயம் செய்கிறவர்களுக்கும் விரோதமாக முக்கிய சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். யாக் 5:8-9எபி 13:4உபா 5:11யாக் 5:4உபா 27:19மல்கி 2:14கலா 5:19-211 கொரி 6:9-10 நான் யெகோவா, நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் மக்களாகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. எண் 23:19எபி 13:8யாக் 1:17புலம் 3:22-23எரே 32:27ஏசா 40:28-31ரோம 8:28-32யாத் 3:14-15 நீங்கள் உங்கள் முற்பிதாக்களின் நாட்கள் துவங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; நாங்கள் எந்த காரியத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள். சகரி 1:3ரோம 10:21யாக் 4:8உபா 31:20ரோம 10:3ஓசி 14:1ஏசா 55:6-7எரே 3:12-14
தேவனை ஏமாற்றாதே
மனிதன் தேவனை ஏமாற்றலாமா? நீங்களோ என்னை ஏமாற்றுகிறீர்கள். எதிலே உம்மை ஏமாற்றினோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே. நீதி 3:9-10மத் 22:21மாற் 12:17சங் 29:2லூக் 20:25மல்கி 1:13எண் 18:21-32யோசு 7:11 நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; மக்களாகிய நீங்கள் எல்லோரும் என்னை ஏமாற்றினீர்கள். உபா 28:15-19ஆகா 1:6-11ஆகா 2:14-17மல்கி 2:2யோசு 22:20ஏசா 43:28யோசு 7:12-13 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகும்வரை உங்கள்மேல் ஆசீர்வாதத்தை பொழியச்செய்யமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 2 கொரி 9:6-8மத் 6:33நீதி 3:9-10சங் 37:3உபா 28:12லேவி 27:30நெகே 13:10-13நெகே 12:44 பூமியின் கனியை அழித்துப்போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சைக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். உபா 11:14யோவே 2:22சகரி 8:12யோவே 1:4ஆமோ 7:1-3யோவே 2:20ஆமோ 4:9எரே 8:13 அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள், தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஏசா 61:9ஏசா 62:4சகரி 8:23லூக் 1:48எரே 33:92 நாளாக 32:23தானி 11:41தானி 8:9 நீங்கள் எனக்கு விரோதமாகப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக எதைப் பேசினோம் என்கிறீர்கள். மல்கி 2:17ஏசா 37:23ரோம 9:202 தெச 2:4மல்கி 1:6-82 நாளாக 32:14-19யாத் 5:2எரே 8:12 தேவனைச் சேவிப்பது வீண், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் யெகோவாவுக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பயன்? ஏசா 58:3சங் 73:8-13யோபு 35:3செப்ப 1:12சகரி 7:3-6யோபு 34:9யோவே 2:12யோபு 22:17 இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்? தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள். எரே 12:1-2யோபு 21:7-15மல்கி 2:17மல்கி 4:1யோபு 22:23மத் 4:6-71 பேது 5:5அப் 12:21
ஞாபகப்புத்தகம்
அப்பொழுது யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; யெகோவா கவனித்துக் கேட்பார்; யெகோவாவுக்குப் பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புத்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. வெளி 20:12சங் 56:8மல்கி 4:2வெளி 15:4ஏசா 26:31 தெச 5:11எபி 10:24எபி 4:12-13 என் செல்வத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஒரு மனிதன் தனக்கு வேலைசெய்கிற தன்னுடைய மகனுக்கு இரக்கம்காட்டுவதுபோல நான் அவர்களுக்கு இரக்கம்காட்டுவேன். யாத் 19:5உபா 7:62 கொரி 6:18ஏசா 62:3-4எரே 32:38-39ரோம 8:321 பேது 2:9உபா 26:17-18 அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியம்செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியம்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள். மத் 25:46ஆதி 18:25சங் 58:10-11யோசு 24:15மல்கி 3:14-15அப் 27:23எரே 12:15யோவா 12:26