தேவனால் நேசிக்கப்பட்ட இஸ்ரவேல்
மல்கியாவைக்கொண்டு யெகோவா இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் செய்தி. ஆப 1:1ஏசா 13:1ஆகா 1:1ஆகா 2:1நாகூ 1:1சகரி 12:1சகரி 9:1 நான் உங்களைச் சிநேகித்தேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; யெகோவா சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆனாலும் யாக்கோபை நான் சிநேகித்தேன். எரே 31:3ஏசா 41:8-9உபா 10:15ரோம 9:10-13உபா 32:8-14உபா 4:37உபா 7:6-8ஏசா 43:4 ஏசாவையோ நான் வெறுத்தேன் 1; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய பங்கை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் இருப்பிடமாக்கினேன். யோவே 3:19ஒபதி 1:10எசேக் 35:3-4எரே 49:16-18எசேக் 25:13-14எசேக் 36:14-15எசேக் 36:3-4எசேக் 36:7 ஏதோமியர்கள் 2: நாம் ஒடுக்கப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் யெகோவா: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், என்றைக்கும் யெகோவாவுடைய கோபத்திற்குள்ளான மக்களென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார். எசேக் 25:14எசேக் 35:9எசேக் 11:10ஏசா 10:15-16ஏசா 11:14ஏசா 34:5ஏசா 63:1-6ஏசா 9:9-10 இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: யெகோவா இஸ்ரவேலுடைய எல்லை தாண்டி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள். உபா 11:7லூக் 10:23-24எசேக் 38:16சங் 35:26-27சங் 58:10-11சங் 83:17-181 சாமு 12:162 நாளாக 29:8
கறைபட்ட காணிக்கைகள்
மகன் தன் தகப்பனையும், வேலைக்காரன் தன் எஜமானையும் கனப்படுத்துகிறார்களே; நான் தகப்பனானால் எனக்குரிய கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் யெகோவா தமது நாமத்தை அசட்டைசெய்கிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டை செய்தோம் என்கிறீர்கள். லூக் 6:46ஏசா 1:2யோவா 13:13-17யாத் 20:121 பேது 2:17-191 பேது 1:17ஓசி 12:8மல்கி 3:13-14 என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; யெகோவாவுடைய பந்தி முக்கியமல்ல என்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே. மல்கி 1:121 கொரி 10:211 கொரி 11:27-32மல்கி 1:81 சாமு 2:15-17உபா 15:21எசேக் 41:22லேவி 2:11 நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிகாரிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் யெகோவா கேட்கிறார். உபா 15:21லேவி 22:19-25ஓசி 8:13எரே 14:10மல்கி 1:13-14சங் 20:3யோபு 42:8மல்கி 1:10 இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம்; அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் யெகோவா கேட்கிறார். 1 பேது 1:17யோவா 9:31யாத் 32:11எரே 27:182 நாளாக 30:27எபி 7:26-27எரே 26:19ரோம 2:11 உங்களில் எவன் கூலிவாங்காமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் நெருப்பைக் கூலிவாங்காமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்மேல் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல. 1 பேது 5:2ஆமோ 5:21-24ஓசி 5:6எரே 6:20மீகா 3:11ஏசா 1:11-15எரே 14:12எரே 8:10 சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அது மறையும் திசைவரைக்கும், என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்திற்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஏசா 45:6ஏசா 54:5எபி 13:15-16ஏசா 66:19-20மத் 28:19சகரி 8:7ஏசா 24:14-16சங் 50:1 நீங்களோ யெகோவாவுடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறீர்கள். மல்கி 1:6-82 சாமு 12:14ஆமோ 2:7தானி 5:3-4எசேக் 36:21-23மல்கி 1:13மல்கி 2:8எண் 11:4-8 இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு இழிவாகப் பேசி, கிழிக்கப்பட்டதையும் கால் ஊனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று யெகோவா கேட்கிறார். மீகா 6:3மாற் 14:37-38லேவி 22:19-23மல்கி 1:7-81 சாமு 2:29ஆமோ 5:21-23ஆமோ 8:5எசேக் 4:14 தன் மந்தையில் கடா இருக்கும்போது கெட்டுப்போனதை ஆண்டவருக்கு பொருத்தனை செய்துகொண்டு பலியிடுகிற வஞ்சகன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் தேசங்களுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மிக உயர்ந்த ராஜா என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அப் 5:1-102 கொரி 8:12பிரச 5:4-5லூக் 12:46மல்கி 1:8சங் 76:12எரே 10:10யோசு 7:11-12